Twitterல் பிந்தொடராதவர்களை ஒரே தடவையில் நீக்குவது எப்படி?

டுவிட்டரில் நாம் பலரை பிந்தொடர்வோம்… எம்மை பலர் பிந்தொடர்வார்கள். சிலர் எம்மை பிந்தொடரவேண்டும் என்பதற்காகவே நாம் பிந்தொடர்வோம். ஆனால், அவர்கள் எம்மை பிந்தொடரமாட்டார்கள். அப்படி பிந்தொடராதவர்களை தனித்தனியாக இனங்கண்டு எமது பிந்தொடர்பை நீக்கவேண்டும் என்றால் டுவிட்டரில் கடினம். ( சிலவகை Plugins இருக்கிறது. அதனால் பாதிப்புத்தான் அதிகம்!)

இன்று எம்மை பிந்தொடராதவர்களை எப்படி இலகுவாக நீக்குவது என்பதையும். எம்மை பிந்தொடர்பவர்கள் அனைவரையும் எப்படி நாம் பிந்தொடர்வது என்பதையும் பார்க்கலாம்.

படி 01 :
முதலில் உங்கள் Twitter கணக்கினுள் உள் நுழைந்துகொள்ளுங்கள்.
அடுத்து புதிய Tab/Window இல் Tweepi என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
தளத்தில் மேல் மூளையில் உள்ள Login பகுதியை அழுத்தவும். இப்போது புதிதாக Login பக்கம் தோன்றும்.

Tweepi

Tweepi

அதில், Login via Twitter ஐ அழுத்தவும். (படங்களை பார்க்க.)

Login via Twitter

Login via Twitter

படி 02 :
இப்போது உங்கள் டுவிட்டர் கணக்கினுள் சென்று அனுமதிபெறக்கேட்கும். அனுமதிக்கவும்.

டுவிட்டர் அனுமதி

டுவிட்டர் அனுமதி

30 செக்கன் இடைவெளிக்குள் படத்தில் உள்ளது போன்று புதிய பக்கம் தோன்றும்.

டுவீப்பி சேவைப்பகுதி

டுவீப்பி சேவைப்பகுதி

அதில் எம்மை பிந்தொடராதவர்களை நீக்க Flush ஐ அழுத்தவும்.
எம்மை பிந்தொடர்பவர்களை நாமும் பிந்தொடர Reciprocate ஐ அழுத்தவும்.

படி 03:
படி 3 இல் பிந்தொடராதவர்களை நீக்கும் முறை காட்டப்பட்டுள்ளது. இதே போன்ற செய்முறையே மீழ் பிந்தொடர்பிற்கும் பயன்படும்.

உங்களை பிந்தொடராதவர்களின் பட்டியல் படத்தில் உள்ளதுபோன்று காட்டப்படும். நீங்கள் அவர்களை ஒவ்வொருவராக நீக்க முடியும். இலகுவாக பலரை நீக்குவதற்கு…

பட்டியல் உள்ள முதலாவது நபரை தெரிவு செய்து விட்டு Shift ஐ அழுத்தியபடி பட்டியலில் உள்ள இறுதி நபரை தெரிவு செய்தால், இடையில் இருக்கும் அனைவரும் தானாகவே தெரிவாவார்கள். (படத்தை பார்க்க.)

நீக்கப்பட வேண்டியவர்களை தெரிதல்

நீக்கப்பட வேண்டியவர்களை தெரிதல்


தெரிவு செய்தபின்னர் Unfollow ஐ சொடுகவேண்டும். அவ்வளவு தான் உங்களை பிந்தொடராதவர்கள் நீக்கப்பட்டுவிடுவார்கள்!

நீக்கும் கட்டளை!

நீக்கும் கட்டளை!


(அதி நீளமான பட்டியல் என்றால். கீழே பட்டியலில் பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கமாக நீக்கவேண்டும்.)

நீண்ட பட்டியலுக்கான பக்க விபரங்கள்.

நீண்ட பட்டியலுக்கான பக்க விபரங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி :)

(802)

Leave a Reply

Top