செயற்கை மழை! வரலாறும் ஆபத்தும்! – Cloud Seeding (tamil)

உலகின் பல்வேறு நாடுகளில் இன்று செயற்கை மழை வெற்றிகரமாக பெய்விக்கப்படுகிறது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

செயற்கை மழை ஏன் தேவை?

farmerama19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அதிவேக தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவுகளின் ஒரு பங்காக பூமியின் கால நிலை பல்வேறுவிதமாக மாற்றமடைந்துள்ளது. மழை பெய்யவேண்டிய காலங்களில் மழை பெய்யாமல் பொய்த்துவிடுவதால் பல விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற நேருகின்றது. ( சில இடங்களில் அதீத மழையும் வேறு சில இடங்களில் அதீத வறட்சியும் ஏற்படுவதால் மனித உயிர் இழப்புக்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.)
சரியான நேரத்தில் மழையை பெய்விப்பது ஒன்றே சரியான தீர்வாக அமையும். ஆகவே செயற்கை மழைக்கான தேவையும் எழுந்தது.

செயற்கை மழை என்றால் என்ன?

ஓர் இடத்தில் பெய்யவேண்டிய மழையை செயற்கை முறையில் இன்னோர் இடத்தில் பெய்விப்பதே செயற்கை மழை எனப்படுகிறது.

செயற்கை மழை எப்படி சாத்தியமானது? வரலாறு :

செயற்கை மழைக்கான தேவை தொடர்பான எண்ணக்கரும் 1903 ஆம் ஆண்டளவிலேயே விஞ்ஞானிகளிடையே விதைக்கப்பட்டது. எனினும் எந்த விதமான முன்னேற்றங்களும் சாத்தியப்படவில்லை. 1950 களில் அவுஸ்திரேலியாவில் ” மழை உருவாக்கம்” என்ற பெயருடன் ஒரு குழு நியமிக்கப்பட்டு தீவிர தேடலில் இறங்கியது. விளைவாக 1957 ஆம் ஆண்டளவில் செயற்கை மழை தொடர்பான ஒரு திடமான எண்ணக்கரு உருவானது. தொடர்ச்சியாக 1960 ஆம் ஆண்டில் முதலாவது செயற்கை மழை பெய்ப்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகள் தீவிரமாக செயற்பட்டார்கள். முக்கியமாக ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய பெர்னார்டு வென்னிகாட் ஆகிய விஞ்ஞானிகள் இத்திட்டத்தின் அடிப்படை காரணிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். பின்னர் வந்த அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் உறுதியான பல மாற்றங்களை செய்தார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தார்கள்.

cloud seeding tamilசெயற்கை மழை எப்படி பெய்கிறது?
செயற்கை மழை பெய்விப்பை மூன்று பிரிகாக பிரிக்கலாம்….

  • முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.
  • அடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூடட்டுவார்கள். (கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
  • இறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!

rain tamilசெயற்கை மழையால் பாதிப்பு உண்டா?

செயற்கை மழையினால் உடலிற்கோ/ தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை! இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.

ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். கால நிலை மேலும் மோசமடையும்.

செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்!

செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது!

உலகில் சீனா அதிகமாக செயற்கை மழையை பெய்விக்கின்றது.

By – Chandran Pirabu

Reference :
World Meteorological Organization
The Rainmaking Story
Wiki & nilanila

(3448)

One thought on “செயற்கை மழை! வரலாறும் ஆபத்தும்! – Cloud Seeding (tamil)”

  1. இயற்கையுடன் போட்டி அழிவைத் தான் தரும்…

    விளக்கத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி…

Leave a Reply

Top