தாவரவியற் பூங்கா ( Le Jardin des Plantes ) – France சுற்றுலாத்தளங்கள்

தாவரவியற் பூங்கா ( Le Jardin des Plantes / Botanical Garden )

Le Jardin des Plantes france tamilஇந்தப்பூங்கா 1626ஆம் ஆண்டு மருத்துவ தேவைக்குரிய தாவரங்களை வளர்க்கும் நோக்கில் 13ஆம் லூயி மன்னரால் நிர்மாணிக்கப்பட்டது. இது 1640 இல் மக்களின் பார்வைக்கென திறந்துவைக்கப்பட்டது. பின்னர், 1739 இல் பல விதமான தாவரங்களை உள்ளடக்கும் வகையில் மேலும் விரிவாக்கப்பட்டது. இதன் வளர்ச்சி, உயிரியல் விஞ்ஞான நோக்கிலும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இன்று இயற்கை உயிரியல் தொகுதிகளை பாதுகாக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.

1937 ஆம் ஆண்டிலிருந்து வெப்பவலத்தில் வளர்கின்ற வாழை,பனை வகைகள் 750 சதுர மீட்டர் இடத்தில் 22 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் வளர்க்கப்படுவது இப்பூங்காவின் இன்னோர் சிறப்பாகும்.

1990 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள 170 வகையான ரோஜா செடிகள் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டுவருகின்றன. இத்தாவரவியற் பூங்கா பரிஸ் யுசு (Paris Jussieu) பல்கழைக்கழகத்துடன் இணைந்து இயங்குகின்றது. 18ஆம் நூற்றாண்டில் 4500 விதமான மரங்கள் ஆராய்ச்சிக்காக நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

இப்பூங்கா கண்ணைக் கவரும் வண்ணம் இயற்கையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் இயற்கை அழகை ஏற்ப்படுத்தும் வகையில் உலகின் பல பாகங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, பலவகையான தாவரங்களும், பூச்செடிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இலவசமாக பார்வையிடக்கூடிய இந்தப்பூங்காவினுள் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. இது தாவரங்கள் பற்றி பல அரிய வரலாற்று ஆதாரங்களையும், பல இலட்சம் வருடங்களுக்கு முந்திய இறுகிப்போன படிமங்களை உள்ளடக்கிய அறிவியல் பூர்வமான பல தொல்பொருட்களைக்கொண்டதாகவும் உள்ளது.

இந்தப்பூங்கா 23 1/2 ஹெக்டேயர் நிலப்பரப்பைக்கொண்டது.

இப்பூங்காவில் பல பாகங்கள் இலவசமான பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக பார்வையிட அதிகபட்சம் 6€ செலவாகும்.
( சிறுவர்கள், மாணவர்கள், 26 வயதிற்கு உட்பட்டோர் சலுகைகள் உண்டு)

உத்தியோக பூர்வ தளம் : http://www.jardindesplantes.net
புகைப்படங்கள் 

(1154)

One thought on “தாவரவியற் பூங்கா ( Le Jardin des Plantes ) – France சுற்றுலாத்தளங்கள்”

Leave a Reply

Top