7 வருடங்களாக எஜமானுக்கு காத்திருக்கும் நாய்! <3

rare-infomations-in-tamil ஆர்ஜென்டீனாவைச்சேர்ந்த குஸ்மன் (Miguel Guzman) என்ற நபர் கடந்த 2006 ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சிறிது நேரத்தின் பின் அவர் செல்லமாக வளர்த்த ஜேர்மன் செப்பேர்ட் (German shepherd) நாய் அங்கிருந்து காணாமல் போனது. உறவினர்கள் இறுதிச்சடங்குகளை முடித்து உடலை சுடலையில் புதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது சரியாக அங்கே அந்த நாய் வந்தது.

உடல் புதைக்கப்பட்ட பின்னர், அனைவரும் வீட்டிற்கு செல்லும் போது நாயை அழைத்துச்செல்ல விரும்பினார்கள். ஆனால் அது குஸ்மன் புதைக்கப்பட்ட இடத்தை விட்டு நகர மறுத்தது.

குஸ்மனின் சொந்த ஊரில் இருந்து புதைக்கப்பட்ட சுடலை பல கிலோமீட்டர்கள் தூரமானது. இலகுவாக அந்த இடத்தை தேடி அடையமுடியாது. ஆனால், 2005 ஆம் ஆண்டு குஸ்மனின் மகன் ஒருவரின் இறப்பிற்காக குஸ்மனுடன் இந்த நாய் அச் சுடலைக்கு சென்றிருந்தது. அந்த குறிப்பை வைத்து சுடலையை அடைந்துள்ளது!

குஸ்மனின் குடும்பத்தார் ஒவ்வொரு ஞாயிறும் குஸ்மனின் கல்லறையை பார்க்கப்போகும் போதெல்லாம் அந்த நாயையும் பார்த்து வருகிறார்கள். குடும்பத்தார் வரும் வேளையில் சிறிது நேரம் குடுமபத்தாருடன் இருந்து விட்டு மீண்டும் மாலை 6 மணிக்கெல்லாம், குஸ்மனின் கல்லறையில் தங்கிவிடுகிறது அந்தச்செல்லப்பிராணி!

சுடலைப்பாதுகாவலர்கள் அந்த நாயின் அன்பை பார்த்து நாய்க்குரிய உணவுகளை நேரா நேரத்திற்கு கொடுத்துவருகிறார்கள்.

இப்படியான மனித-விலங்கு உறவுகள் எப்போதும் வியப்பானதே :)

Humanity Pictures :)

(1663)

Leave a Reply

Top