வேலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம் 2013 April 28th

emblem_enவேலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம் 2013.

தொழிலாளர் உரிமைகளைப்பெறுவதற்கும் அறிவுறுத்துவதற்கும் ஏற்கனவே மே1 இருக்கும் நிலையில். தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி ஏப்ரல் 28 ஆம் திகதி இத்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தினம் எந்தளவுக்கு முக்கியமானது அதன் வரலாறு என்ன என்பதை இப்போது பார்ப்போம்!

ஏன் முக்கியமானது?

15 செக்கன்களுக்கு ஒரு தொழிலாளி இறக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அது தான் நிஜம் நாளொன்றிற்கு 6000 தொழிலாளிகள் வேலையில் ஏற்படும் விபத்துக்களாலும் வேலை மூலமாக ஏற்பட்ட நோய்த்தாக்கங்களாலும் இறக்கிறார்கள்! – இந்த அறிக்கை ilo (international labour organization) சர்வதேச தொழிலாளிகள் சங்கத்தினால் கணக்கெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. எனினும் வளர்ந்துவரும் நாடுகள் / 3ஆம் உலக நாடுகளில் அடிப்படை தொழிலாளர் வசதிகள் கூட அற்ற நிலையில் பல இறப்புக்களும் வாழ் நாள் இழப்புக்களும் ஏற்படுவது இந்தக்கணிப்பில் உள்ளடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!

வரலாற்று சுருக்கம் :

86544983வேலையில் இருக்கும் போது இறந்த தொழிலாளிகளை நினைவுகூரும் வகையில் முதல் முதலாக CUPE (Canadian Union of Public Employees) அமைப்பினால் 1984 சித்திரை 28 ஆம் திகதி “Workers’ Memorial Day – தொழிலாளிகள் நினைவுத்தினம்” என்ற பெயரில் நினைவுகூரப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்காவில் நினைவுகூரப்பட்ட இத்தினம் உலகம் முழுவதும் பரவியது 1989 ஆம் ஆண்டில்தான்.
1996 ஆம் ஆண்டுமுதல் “வேலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம்” என்ற பெயரில் பற்பல நல்ல திட்டங்களுடன் நினைவுகூறப்படுகிறது.

இந் நாளின் நோக்கம் என்ன?

ஆரம்பத்தில் தொழிலாளிகள் நினைவுத்தினமாக அனுஷ்டிக்கப்பட்ட இத்தினம் பெயர் மாற்றம் பெற்றதே, தொழிலாளிகளின் பாதுகாப்புத்தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளிகளிடமும் முதலாளிகளிடமும் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே!
இத்தினத்தில் தொழிலாளி ஒருவருக்கு அவரின் வேலையூடாக கொடுக்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகள் பற்றியும், தொழில் நிலையங்களில் இருக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
( இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்தை தொழிலாளிகளே கண்டுகொள்வதில்லை என்பது வருந்தத்தக்கது… – ஐரோப்பா நாட்டு தொழிலாளிகளும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு சட்டங்கள் பெருமளவில் உள்ளது…)

நாம் என்ன செய்யலாம் :

தொழிலாளியாக இருந்தால் :

World Day for Safety and Health at Work– தொழிலாளிகளிடையே இத்தினம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
– தொழில் செய்யும் இடத்தில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய திட்டமிடலாம். ( முதலாளி வர்க்கத்தை பகைத்துத்தான் செய்யவேண்டும் என்பதில்லை… இது நம் உயிரை நாம் பாதுகாக்கவேண்டியதற்கான விழுப்புணர்வுத்தினம்!)
– உங்கள் நிறுவனத்தில் வேலை நேரத்தில் இறந்தவரை நினைவுகூரலாம்.

ஏனையவர்கள் :
– இத்தினம் பற்றி தெரியாதவர்களுக்கு, முதலில் தங்கள் வீட்டிலிருப்போருக்கு தெரிவிக்கலாம்.
– தொழிலாளர் உரிமைச்சட்டங்களை அடிப்படை தொழிலாளிகளுக்கு எடுத்துரைக்கலாம்.
– குறைந்தது இந்த நாள் சம்பந்தமான ஒரு வரித்தகவலை உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ் கணக்குகளூடாக
பகிரலாம்!

உத்தியோக பூர்வதளம் : http://www.ilo.org

(800)

Leave a Reply

Top