நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ – Pompidou INTRO

centre-pompidou-tamilPompidou ( பொம்பிதோ/டோ)

நவீனத்துவ கலைக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் களஞ்சியங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஃப்ரான்ஸிலுள்ள பொம்பிடோ நிலையம். இது ஐரோப்பாவில் நவீன கலைக்கான மிகப்பெரிய நிலையமாகவும் இசைத்தேடல்களின் இடமாகவும் நவீன் சித்திரக்கலையின் புகழிடமாகவும் உள்ளது.

1969 ஆம் ஆண்டு பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி (அரச அதிபர்) ஜோர்ஜ் பொம்பிதோ (Georges Pompidou) , Beaubourg பகுதியில் இந்த கலாச்சார அறிவியல் களஞ்சியத்தை அமைக்க தீர்மானித்தார். இதன் கட்டுமான வேலைகள் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி Valéry Giscard இனால் 31 ஆம் திகதி தை மாதம் 1977 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இக் கட்டிடத்தின் பெரும்பகுதி இரும்பினாலும் கண்ணாடிகளாலும் அமைக்கப்பட்டுள்ள அதே வேளை கட்டிடத்தின் வெளிப்பகுதி பல வர்ணங்களால் ஆன பாரிய குழாய்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் கட்டிடத்தில் ஏறிச்செல்வதற்கென கண்ணாடிகளல் அமைக்கப்பட்ட பாதையூடாக தானியங்கு படிகள் மூலைவிட்டமாக மேல் நோக்கி செல்கின்றன. இதன் அழகை குறிப்பிடுவதற்கு இக் கட்டிடம் ” நகரின் இயந்திரம்” என அழைக்கப்படுகிறது.

இதன் நிலக்கீழ்த்தளம் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளின் தளமாகவும், நிலத்தளம் பொதுத்தகவல் நிலையமாகவும் முதலாவது மாடி பொது நூலகமாகவும் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகள் நவீன கலைக்கான தேசிய நூதன்சாலையாக உள்ளன. இவை 20 ஆம் நூற்றாண்டின் பல்வேறுபட்ட தகவல் பதிவுகளின் களஞ்சியமாக திகழ்கின்றன. பிரபல பிரெஞ்சு ஓவியர்களான பிக்காசோ, மிரோ, டொலி உட்பட பலரது கைப்பட வரைந்த அரிய ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன.

பழம் பெரும் பரிஸ் நகரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொல்பொருட்களை பார்ப்பதற்காக பல நூதன சாலைகள் இருக்கின்ற போதிலும் பொம்பிடோ நிலையம் நவீன கலைத்துவத்திற்காக கவணிக்கப்படவேண்டிய முக்கிய தளமாக உள்ளது.

மேலும் ஒரு கலையாக, இந்த நிலையத்தை சுற்றி பல்வேறு தெருவோர கலைஞர்கள் தமது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

முழுமையாக பார்வையிட அதிகபட்சம் 13€ செலவாகும்.
18 வயதிற்கு உட்பட்டோருக்கு இலவசம் மற்றும் 26 வயதுக்கு உட்பட்டோருக்கு குறைந்த கட்டணம் என பல சலுகைகள் உண்டு.

உத்தியோக பூர்வ தளம் : http://www.centrepompidou.fr/

புகைப்படங்கள் :

(1212)

Leave a Reply

Top