நிராகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்து கோரிக்கையை எதிர்ப்பது எப்படி? – CNDA சட்டங்கள் – France

CNDA tamilஅகதிகள் மேல் முறையீட்டு ஆணையம் : CNDA ( Commission des Recours des Réfugiés)

அகதி அந்தஸ்துக்கோரிக்கை Ofpra வினால் நிராகரிக்கப்பட்டால், நிராகரிப்பை எதிர்த்து CNDA எனப்படும் அகதிகள் மேல் முறையீட்டு ஆணையகத்தில் நீங்கள் மேல் முறையீடு செய்யலாம். அதை எப்படி மேற்கொள்வது என்பதை பார்ப்போம்.

முறை 1 :
படி 1 : Ofpra வின் நிராகரிப்பு தீர்மானம் உங்களுக்கு கிடைத்ததும் 1 மாத காலத்திற்குள் நீங்கள் CNDA விற்கு மேல் முறையீட்டு கடிதத்தை அனுப்புதல் வேண்டும். மேல் முறையீட்டிற்கான விண்ணப்பத்தை உங்களுக்கு Ofpra மூலமாக கிடைத்த நிராகரிப்பு கடிதத்தை மாவட்ட அலுவலகத்தில் (Préfecture) இல் காட்டுவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

படி 2 : விண்ணப்பத்தில் தகவல்களை பூர்த்தி செய்துவிட்டு, நீங்கள் ஏன் Ofpra இன் நிராகரிப்பை எதிர்க்கிறீர்கள் என்பதை வலுவான ஆதாரத்துடன் கடிதமாக எழுதவேண்டும்.
உங்கள் ஆதாரங்களுடன் பதிவுத்தபாலில் கீழுள்ள முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் :
Cour nationale du droit d’asile
35 rue Cuvier
93558 Montreuil-sous-Bois cedex

படி 3 : அனுப்பிய பின்னர் குறிப்பிட்ட நாட்களில் உங்களுக்கென ஒரு சட்டத்தரனியை நியமிக்க கோரி CNDA வில் இருந்து கடிதம் வரும்.
உங்களுக்கான சட்டத்தரனியை நீங்கள் தெரிவு செய்துகொள்ளலாம். இலவசமாக உங்களுக்கு வாதாடுவதற்கான சட்டத்தரனிகளும் CNDA மூலம் பரிந்துரைக்கப்படுவார்கள். அவர்களையும் தொடர்புகொள்ள முடியும்.
சட்டத்தரனிகளுடன் பேசிய பின்னர், அவர்களாகவே “தாங்கள் உங்களுக்குரிய சட்டத்தரனி” என்பதை CNDA விற்கு அனுப்புவார்கள்.
படி 4 : அடுத்த கட்டமாக CNDA உங்கள் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளும்.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர், CNDA வில் இருந்து உங்களுக்கான விசாரனை அழைப்பு விடுக்கப்படும்.

முறை 2 :
படி 1 : Ofpra வின் நிராகரிப்பு தீர்மானம் உங்களுக்கு கிடைத்ததும் 1 மாத காலத்திற்குள் நீங்கள் CNDA விற்கு மேல் முறையீட்டு கடிதத்தை அனுப்புதல் வேண்டும். மேல் முறையீட்டிற்கான விண்ணப்பத்தை உங்களுக்கு Ofpra மூலமாக கிடைத்த நிராகரிப்பு கடிதத்தை மாவட்ட அலுவலகத்தில் (Préfecture) இல் காட்டுவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

படி 2 : நேரடியாக ஒரு சட்டத்தரனியை நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும். தொடர்புகொண்டு உங்கள் Ofpra நிராகரிப்பு கடிதம் மற்றும் விளக்கங்களை சட்டத்தரனிக்கு தெரியப்படுத்தவேண்டும்.
சட்டத்தரனி தேவையான ஆவணங்களை உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு உங்கள் சார்பாக CNDA இற்கு மேல் முறையீட்டை பதிவு செய்வார்.

படி 3 : அடுத்த கட்டமாக CNDA உங்கள் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளும்.
குறிப்பிட்ட காலத்தின் பின்னர், CNDA வில் இருந்து உங்களுக்கான விசாரனை அழைப்பு விடுக்கப்படும்.

CNDA வில் :

உங்களுக்கு CNDA வில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு செல்லுதல்வேண்டும். அங்கிருக்கும் அலுவலர்களிடம் உங்கள் அழைப்புக்கடிதத்தை காண்பிக்கும் போது, நீங்கள் செல்ல வேண்டிய பிரிவிற்கான தகவல்கள் தரப்படும்.

உங்களை, உங்கள் பிரச்சனை தொடர்பாக நீதிபதி, ஐ.நா அலுவலர் உட்பட மூவர் கேள்வி கேட்பார்கள். (உங்களுடன் உங்கள் சட்டத்தரனியும் மொழி பெயர்ப்பாளரும் இருப்பார்கள். கேள்வி கேட்பதற்கு முன்னராக Ofpra அலுவலர் ஒருவர் உங்கள் நிராகரிப்பு அறிக்கையை வாசிப்பார். )

விசாரனையின் பின்னர் 21 நாட்களில் நீங்கள் சென்ற முகவரியில் உள்ள அறிவிப்பு பலகையில் உங்கள் மேல்முறையீடு தொடர்பான தீர்மானம் போடப்பட்டிருக்கும்.

தீர்மானம் ஏற்கப்பட்டால், 10 வருட வதிவிட உரிமை வளங்கப்படும்.
நிராகரிக்கப்பட்டால், நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற அறிவுறுத்தல் மாவட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும். அல்லது கைது செய்யப்பட கூடும்.
எனினும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் (tribunal) மேல் முறையீடு செய்து உங்கள் கைதை தவிர்க்கலாம்.
அடுத்த கட்டமாக CNDA விற்கு மேலும் முறையீட்டு விண்ணப்பத்தை அனுப்ப உங்களுக்கு உரிமை உண்டு.
உங்கள் நிராகரிப்பை எதிர்த்து ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யமுடியும். ஆனால், அங்கு நிராகரிக்க்ப்பட்டால் நீங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். ( CNDA இல் மேலும் முறையீடு செய்யும் உரிமையை இழப்பீர்கள்.)

உத்தியோக பூர்வதளம் : http://www.cnda.fr/

மேலதிக சந்தேகங்களுக்கு எம்மை தொடர்புகொள்ளவும் : Contact-us

(937)

2 thoughts on “நிராகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்து கோரிக்கையை எதிர்ப்பது எப்படி? – CNDA சட்டங்கள் – France”

  1. vijay prithiviraj says:

    I need more informatio 9345914054 .it is my whats app number

  2. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

Leave a Reply

Top