இந்தியா – 3ஆம் உலக யுத்தத்தின் பின்னர்!! – நொஸ்ராடாமஸ் 04

இது நொஸ்ரடாமஸ் தொடர்பான நான்காம் பதிவு…

wcஇப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது…
இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது.
இப்படத்தில்…
கீழ் புறத்தில்… ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே… கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
இப்படமானது… அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது.
மேலும்… சக்கரத்தின் மேலுள்ள கடிகாரம் ( முன்னைய காலங்களில் மணல் மூலம் நேரத்தை கணிக்க பயண்பட்ட கடிகாரம்) இது காலத்தால் ஏற்படப்போகும் மாற்றம் என்பதை குறிக்கிறது. அடுத்து… வாணில் இருந்து வரும் கையே இச் சக்கரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது எல்லாம் இறைவனின் செயல் என்பதை குறிப்பதாகும். ( நொஸ்ராடாமஸ் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. )

இப்படத்திலுள்ள ஏனைய உருக்களுக்கான விளக்கம் இன்னமும் தெளிவாக(??!!) விளக்கப்படவில்லை.

நொஸ்ராடாமஸின் நான்கு வரி குறிப்புக்கள் பலவற்றில் இந்த மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

3 ம் உலகயுத்தம்

3 ம் உலகயுத்தம்

அதாவது…
பக்கத்து பக்கத்து நாடுகளினால் ஏற்படப்போகும்… 3 ம் உலக யுத்தத்தில்… பிரான்ஸ், இத்தாலி, பிறிட்டன் போன்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியை சந்திக்கும். மொத்த ஐரோப்பா கஷ்டங்களுக்கு உள்ளாகும். அதே வேளை இதை சாதகமாக பயண்படுத்தி ஆசியா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த நாடுகள் முன்னேற்றமடையும்.இன்று எவ்வாறு ஈரோப் இருக்கிறதோ… அவ்வாறானதொரு நிலையை ஏஸியா அடையும். மக்களின் வாழ்க்கைதரம் முற்றாக மாறிவிடும். எனும் பொருள் பட கூறியுள்ளாராம்.

இனி வரப்போகும் இந்திய தலைமுறை… அவர்களின் பெற்றோர் நினைச்சு பார்க்காத அளவுக்கு நுட்பம் வாய்ந்தவர்களாக உருவாகுவார்கள்… எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
2027ம் ஆண்டில்… உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா, சீனா திகழும் என கூறப்பட்டுள்ளதாம்.

dsa

இரண்டாம்  படமும் 3 ம் உலகயுத்தத்தினால் ஏற்பட போகும் பேரவலத்தையே குறிக்கின்றது.
இந்த பேரழிவால் பிரபஞ்சத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை குறிக்கிறது. ( கோஷ் தியரிப்படி/ பட்டர் ஃப்லை இஃபக்ட் படி).

மூன்றாம் படம் பழைய நிகழ்ச்சி சம்பந்தமான படம்….
பிரான்ஸிப்புரட்சியின் போது… 16 லூயி (லூயி ஒகுஸ்ட்த்) சிரச்சேதம் செய்யப்பட்டதை குறிக்கின்றது.

அடுத்த பதிவில், தமிழர் தொடர்பானதாக இருக்கலாம் என கருதப்படும் குறிப்புக்களையும், 3 உலக யுத்தம் பற்றிய மேலதிக தகவல்களையும் உலக அழிவுபற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.

By : Chandran Pirabu

(6310)

One thought on “இந்தியா – 3ஆம் உலக யுத்தத்தின் பின்னர்!! – நொஸ்ராடாமஸ் 04”

  1. Kumar Esan says:

    2027ம் ஆண்டில்… உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா,…

    மூலம் : http://edu.tamilclone.com.

Leave a Reply

Top