எதிர்-பருப்பொருளின் வரலாறு (Anti-matter in tamil series).-02

வரலாறு:

william hicks

william hicks

போன தடவை எதிர்-பருப்பொருளுக்கான முன்னுரையை பார்த்தோம். இப்போது அதனுடைய வரலாற்றை பார்போம். எதிர் மறையான பருப்பொருளின் சிந்தனை முந்தய பருப்பொருள்களின் சார்ந்த கோட்பாடுகளில் தோன்றியது; ஆனால் இந்த கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. பிரபலமான ஈர்ப்பு விசைக்கான கோட்பாட்டில், எதிர்-ஈர்ப்பு (Negative Gravity) விசையால் ஆன பருப்பொருளுக்கான சாத்தியக்கூறுக்காக வில்லியம் ஹிக்ஸ் (William Hicks) என்பவரால் 1800 ஆண்டு சார்ந்த ஆண்டுகளில் விவாதித்தார். 1880 மற்றும் இடைப்பட்ட காலத்தில், கார்ல் பியர்ஸன் (Karl Pearson) என்பவர் “ஸ்குவிர்ட்ஸ் (Squirts) (ஆதாரங்கள்)” மற்றும் அழிவுகள் (Sinks), இது பியர்ஸனின் அழுத்தமிடலின் வரவுக்கான யோசனை ஆகும். பியர்ஸனின் கோட்பாட்டில் ஈதர் ஓடி ஆடுவதற்கு 4-வது பரிமாணம் தேவைப்பட்டது.

Arthur Schuster

Arthur Schuster

பருப்பொருளுக்கான யோசனை ஆர்தர் ஸ்சுஸ்டெரால் (Arthur Schuster) இயற்கையுடன் இரண்டு ஓரளவு விசித்தரமான எழுத்துகளால் 1898-ல் பயன்படுத்தப்பட்டது, [2] இதில் அவரது யோசனையை மிகவும் அழுத்தமாக வெளியிட்டுள்ளார். அவர் எதிர்-அணுக்களை கற்பனை செய்தார், எதிர்-பருப்பொருளால் ஆன சூரிய குடும்பங்கள் மற்றும் பருப்பொருளும் எதிர்-பருப்பொருளும் சேர்ந்து வெடிப்பதைப் பற்றிய சாத்தியக்கூறுக்காக விவாதித்தார். ஸ்சுஸ்டரின் சிந்தனைகள் தீவிரமான கோட்பாட்டுடைய திட்டம் இல்லை, வெறும் ஊகம், மற்றும் முந்தைய யோசனை மாதிரி இருந்தன, எதிர்-பருப்பொருளின் எண்ணம் முந்தையதை விட வேறுப்பட்டிருந்தன, முந்தைய எதிர்-பருப்பொருளுக்கான யோசனைகளில் எதிர்-ஈர்ப்பு விசைக்கான எண்ணங்களை கொண்டிருந்தன.

Paul Dirac

Paul Dirac

பவுல் டிராக் (Paul Dirac) என்பவரின் யோசனையால், நவீன எதிர்-பருப்பொருளின் கோட்பாடு 1928ல் தொடங்கியது. டிராக் ஸ்செஸ்டின்ஜெரின் (Schrsdinger) எதிர்-மின்னிகளுக்கான (anti-electrons) அலை சமன்பாட்டின் சார்பியல்வாத பதிப்பை உணர்ந்து நேர்-எதிர்-மின்னிகளுக்கான (anti-electrons) சாத்தியக்கூறை கணித்தார். நேர்-எதிர்-மின்னிகள் கார்ல் டி. ஏன்டர்ஸன் (Carl D. Anderson) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் பெயரிடப்பட்டவையே (நேர்-எதிர்-மின்னிகள் (anti-electrons) என்பதனை ஆங்கிலத்தில் Positrons என்று கூறுவார்கள். இது Positive electrons என்பதன் சுருக்கமே). இருந்த போதிலும், டிராக் மட்டும் இந்த எதிர்-பருப்பொருள் என்னும் யோசனையை பயன்படுத்தவில்லை, அதுவாகவே இயற்கையாக எதிர்-நேர்-மின்னி (anti-proton), நேர்-எதிர்-மின்னி (anti-electron) etc., என்பதை பின்தொடர்கிறது. முழு எதிர்-பருப்பொருள்களுக்கான கால அட்டவணை (Periodic table) சார்ல்ஸ் ஜேனட் (Charles Janet) 1929ல் வெளியிடப்பட்டுள்ளது.

By : Lijoe Jason

(2048)

3 thoughts on “எதிர்-பருப்பொருளின் வரலாறு (Anti-matter in tamil series).-02”

  1. எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது….. :) :P

    1. கண்ணீர் வந்தாலும் அறிவியல் ஆக்கத்தை தமிழில் தந்ததிற்கு நன்றி :P

Leave a Reply

Top