எதிர்-பருப்பொருள்.(Anti-matter) பகுதி 01

முன்னுரை:
matter_antimatterஇதுதான் எனது முதல் பதிப்பு. எதிர்-பருப்பொருள் அல்லது எதிர்மறையான பருப்பொருள் என்பது சாதாரண பருப்பொருளுக்கு எதிரான துகளால் ஆன பருப்பொருள் ஆகும். நல்ல குணங்கள் கொண்ட நல்லவர்களுக்கு எதிரான தீய குணங்களை கொண்ட தீயவர்கள் போல நினைத்துகொள்ளுங்கள். ஒரு கட்சியும் அதற்கு ஏதிரான கட்சியும் ஏதிராக மோதிக் கொள்வது போல் சாதாரண பருப்பொருளின் துகள்களும் எதிர்-பருப்பொருளின் துகள்களும் சந்தித்து கொண்டால் பெரும் வெடிப்பு ஏற்பட்டு கடும் ஆற்றல் உண்டாகும். இதனை ஏஞ்சல்ஸ் & டெமன்ஸ் திரைப்படத்தில் பார்த்திருப்பிர்கள் அல்லது பாருங்கள். அது பல மற்ற துகள்கள் தோன்றலுக்கும் மற்றும் எதிர்-துகள்களின் அல்லது மின்காந்த கதிரியகத்தின் தோன்றலுக்கும் வழிவகுக்கும். இந்த மாறுபாடுகளில், மீதி பருப்பொருள் சேமிக்கப்படுவதில்லை, இருந்தபோதிலும் (மற்ற மாறுப்பாட்டில்) ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

துகள் இயற்ப்பியலில், எதிர்-பருப்பொருள் என்பது எதிர்-துகள் யோசனையின் விரிவாக்கமே என்பது என்னவென்றால் துகள்களால் ஆன பருப்பொருள் போன்ற வழியில் எதிர்-துகள்களால் ஆன எதிர்-பருப்பொருள் ஆகும். உதாரணத்திற்கு எதிர்-மின்னியும் (Electron) நேர்- மின்னியும் (Proton) சேர்ந்தால் ஒரு ஹைட்ரஜன் அணு ஆவதை போல நேர்-எதிர் மின்னியும் (Positron) (எதிர்-மின்னியின் (Electron) எதிர்-துகள் அல்லது ) மற்றும் எதிர்-மின்னியும் (Anti-proton(P) ) சேர்ந்தால் ஒரு எதிர்-ஹைட்ரஜன் அணு உருவாகும். கூடுதலாக, பருப்பொருளும் எதிர்-பருப்பொருளும் சந்திக்கும்போது பெரும் வெடிப்பு உண்டாகுவது போல் துகள்களும் எதிர்-துகள்களும் சந்திக்கும்போது பெரும் வெடிப்பு உண்டாகும், இது அதிக-ஆற்றல் ஃபோட்டான்கள் (Photons) மற்றும் (காம்மா கதிர்கள் (Gamma rays) ) அல்லது மற்ற துகள்-எதிர்-துகள் இணைகளின் தோன்றலுக்கு அடிப்படையாகிவிடுகிறது.

idrogeno-antiஅங்கு ஒரு கணிசமான ஊகம் கூறப்படுகிறது. அதாவது என்னவென்றால் பிரப்பஞ்சத்தில் பல இடங்கள் பருப்பொருளால் நிறைந்திருக்கிறது என்பதையும் ஏன் எதிர்-பருப்பொருள் கொண்ட வேறு இடங்கள் இல்லையா? என்பதையும், மற்றும் எதிர்-பருப்பொருள் சுரண்டுவதற்கு என்பதையும் அந்த கணிசமான ஊகம் கூறுகிறது. இந்த நேரத்தில், நம் கண்ணுக்கு புலப்படும் பிரபஞ்சத்தில் பருப்பொருளுக்கும் எதிர்-பருப்பொருளுக்கும் இசைவு பொருத்தம் அற்றதாய் இருப்பது நம்முடைய பவுதீகத்தின் (Physics) திர்வு காணா பிரச்சினைகளில் ஒன்றாய் இருக்கிறது. பருப்பொருளுக்கும் எதிர்-பருப்பொருளுக்கும் எதனால் என விளக்கப்படும் நிகழ்முறை ஃபாரியோஜெனிஸிஸ் (Baryogenesis) எனப்படுகிறது (இப்பமே கண்ணு கட்டுதே) இன்னும் இருக்கிறது. அடுத்த பதிவில் பார்க்கலாம்.

By : Lijoe Jason

(2718)

3 thoughts on “எதிர்-பருப்பொருள்.(Anti-matter) பகுதி 01”

  1. tamilbm says:

    தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  2. இந்த இணையதளத்துக்கு எனது இனிய நன்றிகள். என்னுடைய பதிப்பை வெற்றிகரமாக வெளியிட்டதற்கு நன்றி. அடுத்த பதிவையும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்…..

    1. நாளை உங்கள் பகுதி 2 வெளியாகும்.

Leave a Reply

Top