ஃபேஸ்புக் விருப்ப பக்கம் – திறமையாக இயக்குவது எப்படி?

ஃபேஸ்புக் விருப்ப பக்கத்தை திறமையாக இயக்குவது எப்படி என்பதை பார்ப்பது சற்று சிரமமானது. காரணம், எந்த தேவைக்கான நாம் ஃபேஸ்புக் விருப்ப பக்கத்தை இயக்குகிறோம் அதில் என்ன பகிர்ந்துகொள்கிறோம் என்பதில் தான் விருப்ப பக்கத்தின் வெற்றி அமைந்துள்ளது. விசேட பெயர்களை / சொற்களைக்கொண்டியங்கும் விருப்ப பக்கங்களை எப்படி திறமையாக இயக்குவது என்பதை மேலோட்டமாக பார்த்துவிட்டு, சொந்த பக்கங்களை பார்க்கலாம்.

விருப்பப்பக்கத்திற்குரிய பெயர்களின் செல்வாக்கு :

  • பெரும்பாலும் தமிழ் விருப்பப்பக்கங்களை பொறுத்தவரை சினிமா சம்பந்தமான வசன‌ங்களை பெயராகக்கொண்ட பக்கங்கள் அதிக விருப்புக்களை (Likes) வாங்குகின்றன.
  • அடுத்ததாக ஒரு சினிமா நட்சத்திரத்தின் பெயரையோ அல்லது அதனுடன் தொடர்புடைய பெயரையோ விருப்பப்பக்கத்தின் பெயராக கொண்ட பக்கங்கள் ரசிகர்களூடாக அதிக விருப்புக்களை வாங்குகின்றன.
  • அடுத்து தமிழ் மற்றும் அது சம்பந்தமான பெயர்களையுடைய பக்கங்கள் அதிக விருப்புக்களை வாங்குகின்றன. ஆனால் பகிரப்படும் பகிர்வுகளை பொறுத்தே இவ் விருப்புக்களின் தொடர்ச்சி அமைகின்றது.
  • காதல் மற்றும் உணர்வு பூர்வமான வசனங்களை கொண்ட விருப்ப பக்கங்களும் அதிக விருப்புக்களை வாங்கும்.
  • நிறுவனங்கள், இணையத்தளங்களின் பெயர்களில் இருக்கும் பக்கங்கள் விருப்பங்களை பெறுவது குறைவு. ஆனாலும் அதில் பகிரப்படும் விடையங்களை பொறுத்து அதிக விருப்புக்களை பெறமுடியும். ( புகைப்பட பகிர்வு அதிக விருப்புக்களை பெற உதவும். – சினிமா சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் நகைச்சுவை புகைப்படங்களுக்கு ரசிகரிகள் அதிகம். )

எவ்வாறான விருப்ப பக்கங்கள் இயல்பாகவே விருப்புக்களை அதிகம் பெறும் என்பதை மேலே பார்த்துள்ளோம். இனி ஒரு சாதாரன விருப்ப பக்கத்தை இயல்பை தவிர்த்து “எம் திறமையால்” எப்படி மேம்பட செய்வது என்பதை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.

விருப்ப பக்கத்தின் பெயரை மாற்றுவது எப்படி?

(விருப்ப பக்கத்தின் பெயர் பகிரப்படப்போகும் விடையங்களை மையமாக கொண்டு அமைந்தால் நல்லது.)
விருப்ப பக்கத்தின் பெயரை மாற்றும் போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். ஃபேஸ்புக் குழுமம் 200 விருப்புக்களுக்கு குறைவான விருப்புக்களையுடைய பக்கங்களின் பெயரை இலகுவாக மாற்ற அனுமதிக்கிறது. அதற்கு பின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றும் அனுமதியுண்டு!

படி 1 : மாற்றவேண்டிய பக்கத்தின் நிர்வாக பிரிவுகளிற்கு செல்லவேண்டும்.
உங்கள் பக்கத்திற்கு சென்று => Edit page -> Update info ( படத்தை பார்க்க)

facebook-tricks-tamil-01

படி 2 : Basic information ( அடிப்படை தரவுகள்) ஐ சொடுகவேண்டும். அங்கு உங்கள் விருப்ப பக்கத்தின் பெயரை மாற்றக்கூடிய வசதி தரப்பட்டிருக்கும். அதில் மாறுதல் செய்யமுடியும்.மாற்றிய பின்னர், படிவங்களின் கீழுள்ள “save changes” ஐ சொடுகவும். ( ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு / 200 விருப்புக்களை தாண்டிய பக்கங்கள் கீழுள்ள படத்தில் 1 ஆவதாக உள்ள படத்தைபோன்று இருக்கும். அப்படியானால் பெயரை மாற்றமுடியாது. இல்லை எனின் 2 ஆவது படத்தைப்போன்று இருக்கும். மாற்றலாம்.)

facebook-tricks-tamil-02
facebook-tricks-tamil-03

 

விருப் பக்கத்தின் URL ஐ மாற்றுவது எப்படி?

விருப்ப பக்கங்கள் ஆரம்பிக்கும் போது பக்கங்களின் பிரிவில் ஒரு பக்கமாக பின்வருமாறான URL உடன் இருக்கும். https://www.facebook.com/pages/TamilGenius.Community/313688481995417 இவ்வாறான நீண்ட குழப்பமான URL விருப்ப பக்கத்தின் விருப்புக்களை குறைக்கும். ( தேடலில் இடம்பெறுவது கடினம்.) எனவே அவற்றை பின்வருமாறு மாற்றுவது நலம்.
facebook.com/TamilGenius.Community

விருப்ப பக்கத்தின் URL ஐ மாற்றுவதற்கு ஃபேஸ்புக் குழுமம் ஒரே ஒரு சந்தர்பத்தை மாத்திரமே தருகிறது. எனவே தவறேதும் விடாமல் மாற்றிக்கொள்ளவும்.

படி 1 : பெயரை மாற்றுவதற்கு சென்ற படிமுறைகளின் படி சென்று. படத்தில் காட்டப்பட்டவாறான பகுதியை அடையவேண்டும். அங்கு Username இற்கு அருகில் உள்ள Create username for this page என்பதை சொடுகவேண்டும்.
( உங்கள் URL ஐ மாற்ற முடியும் என்றால் முதலாவது படம் போன்றும். இல்லை என்றால் இரண்டாவது ப‌டம் போன்று You can now direct people to www.facebook.com/*************** என்றும் இருக்கும். )

facebook-tricks-tamil-05

facebook-tricks-tamil-04-b

படி 2 : தற்போது இருக்கும் Window இல், Enter desired username பகுதியில் உங்களுக்கு தேவையான புதிய URL ஐ இட்டு check availability சொடுகவும். நீங்கள் கேட்ட பெயர் ஏற்கனவே இல்லை என்றால். உங்கள் பக்கத்தின் URL மாற்றப்பட்டுவிடும். :)

facebook-tricks-tamil-04

இரண்டு விருப்ப பக்கங்களை ஒன்றாக இணைப்பது எப்படி என்பதையும். கட்டாய விருப்பு பகுதியை விருப்ப பக்கத்தில் இணைப்பது எப்படி என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

(1545)

Leave a Reply

Top