லூவ்ர் அருங்காட்சியகம் (musée du louvre)- வரலாறும் சுற்றுலாவும்

musee du louvre_1ஃப்ரான்ஸின் முக்கிய கலைப்பொக்கிசம் இது. உலகெங்கும் இருந்து கொண்டுவரப்பட்ட விலைமதிக்க முடியாத ஓவியங்கள், கலைப்பொருட்கள், ஞாபக சின்னங்களால் லூவர் அருங்காட்சியகம் நிரப்பப்பட்டுள்ளது! உலகப்புகழ் பெற்ற மோனலீஸா ஓவியம் மற்றும் வீனஸ் சிலை ஆகியவை இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

35 000 இற்கு மேற்பட்ட கலைப்பொருட்களுடன் சுமார் 60 000 சதுர மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகம் வருடாந்தம் 8 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை தன்னகத்தே ஈர்க்கிறது.

12 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக பிலிப் அகஷ்து என்பவரால் ஆற்றுப்பக்கத்தில் அமைக்கப்பட்ட அரண்மனையிலிருந்து லூவர் அருங்காட்சியகத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது

1564ஆம் ஆண்டில் கட்டிடக் கலைஞர் பியர் லெஸ்கோ என்பவரால் இது புணர் நிர்மானம் செய்யப்பட்டது. பின்னர், அரசர்களான 13 ஆம் லூயி-14 ஆம் லூயி என்பவர்களால் மேலும் விரிவு படுத்தப்பட்டது. 1815 ஆம் ஆண்டில் சுமார் 5000 கலைப்பொருட்கள் சட்ட ரீதியாக உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டது.1852 ஆம் ஆண்டில் 3ஆம் நெப்போலியனால் பழைய லூவரின் நிர்மான வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டது.

1792 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியின் பின்னர், அங்கு இருந்த கலைப்பொருட்கள் அனைத்தும் அரசு உடைமை ஆக்கப்பட்டது. 10/08/1793 அன்று 537 ஓவியங்களுடன் “மத்திய கலைப்பொருட் களஞ்சியம்” என்ற பெயரில் திறக்கப்பட்டது. 1801 ஆம் ஆண்டு நெப்போலியனால் விரிவுபடுத்தப்பட்ட அருங்காட்சியகம். “Musée Napoléon – நெப்போலியன் அருங்காட்சியகம்” என்று பெயர் மாற்றப்பட்டது.

2ஆம் உலக யுத்தத்தின் போது, ஜேர்மனியர்களால் ஃப்ரான்ஸின் ஒரு பகுதி கைப்பற்றப்பட்டிருந்த காலத்தில் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்த பல பொருட்கள் தற்காலிகமாக பாதுகாப்பு கருதி வேறு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அதில் பெருமாலான பொருட்கள் மீழ கிடைத்தாலும் சில அரிய பொருட்கள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகின் பல பாகங்களில் இருந்தும் வரும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் ஜனாதிபதி ஃப்ரான்ஸுவா மித்திரனின் பணிப்புரைப்பட லூவர் முன்றலில் இரண்டு கண்ணாடிகளால் ஆன‌ மிகப்பெரிய பிரமிட்டுக்கள் அமைக்கப்பட்டு இடவசதி அதிகரிக்கப்பட்டது.

உத்தியோக பூர்வ தளம் 
புகைப்படங்கள் 

(1742)

Leave a Reply

Top