புகைப்பட விளக்கங்கள் – வத்திக்கான் வீழ்ச்சி! | நொஸ்ராடாமஸ் – 02

நொஸ்ராடாமஸ் யார் என்பது தொடர்பாக முதல் பதிவில் பார்த்திருந்தோம். அவரால் வரையப்பட்டதாக நம்பப்படும் புகைப்படங்களின் விளக்கங்களை இன்று பார்க்க ஆரம்பிப்போம்.

nostradamus predictions image 01இந்த படத்தில் ஒரு தேவதை போன்ற உருவமும்… அதனை ஒரு போர் வீரன் தாக்க முனைவது போன்றும் வரையப்பட்டுள்ளது.
இது குறிக்க வருவது “போப் ஜோன் 2” சுடப்பட்ட சம்பவத்தையாகும். (13/05/1981)
இப்படத்தில்…

தேவதை போன்று வரையப்பட்ட படமானது “ஜோன் போப் 2” ஐ குறிக்கின்றது. அதே வேளை சிப்பாய் உரு அளவில் தேவதையைகாட்டினும் சிறிதாக வரையப்பட்டதன் காரணம்… போப் இக்கு ஆபத்து வரும் ஆனால்… போப்பின் உயிரை பறிக்கும் அளவுக்கு பாரதூரமானதல்ல என்பதை குறிப்பதற்காகும்.

இப்படத்தின் பின் புலத்தில் ஒரு மிருகம் படுத்திருப்பது போன்றும்… ஒரு தலை காணப்படுவது போன்றும்… வரையப்பட்டிருப்பதன் காரணம் தெளிவு படுத்தப்பட வில்லை.
( விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

nostradamus predictions image 02சரி… இது நடந்து முடிந்தது. இதை பற்றி கதைத்து வியக்கலாமே தவிர ஒரு பலனுமில்லை. (படத்தை வைத்துக்கொண்டு விளக்கம் தேடியிருப்பார்கள் என கருதவும் சாத்தியமுண்டு.) அதனால்… இனி நடக்க இருக்கும் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

இந்த படத்தை பார்த்தீர்களானால்… ஒரு தேவதையை ஒரு வீரன் கழுத்தில் குத்துவது போன்று வரையப்பட்டுள்ளது. இங்கும் “போப்” ஏ தேவதையாக வரையப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த படத்தில் தேவதை உருவுக்கு நிகரான உயரத்தில் சிப்பாயினதும் உரு வரையப்பட்டிருப்பதானது போப்பின் அகால மரணத்தை குறிக்கிறது.
மேலும், சிப்பாயின் வாளை வானத்திலிரு ஒரு கரம் தடுப்பது(???) போன்று காட்டப்பட்டுள்ளது. அதனது அர்த்தமும் 3 நெருப்பு கம்பங்கள் எரிவதன் அர்த்தமும் தெளிவாக விளக்கப்படவில்லை. (எனது கருத்தின் படி வேற்று மதங்களை குறிப்பதாக இருக்கலாம்.).( விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

இது 16 ம் பெனடிக் போப் (தற்போதைய போப்) பை குறிப்பதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், நோஸ்ராடாமஸின் குறிப்புக்களின் காலங்களை திட்ட வட்டமாக கணிப்பிட முடியாது என்பதால். நிச்சயமாக கூறமுடியவில்லை. (80% நம்புகிறார்கள், இது 16ம் பெனடிக் கைத்தான் குறிக்கிறது என.)

nostradamus predictions image 03அடுத்தும் இதே நிகழ்ச்சிகளுடன் சம்பந்தமான ஒரு படத்தை பார்ப்போம்… ( இந்த சம்பவங்களை ஒரேயடியாக பார்ப்பது இலகுவாக இருக்கும்.)
கோட்டை ஒன்று பத்தி எரிந்து கொண்டிருப்பது போன்றும், போர் வீரர்கள் சிலரை கொளை வெறியுடன் தாக்குது போன்றும் வரையப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பொருந்த தக்க தாக அவரின் நான்கு வரி குறிப்புகள் 3 உள்ளனவாம்.
இப் படமானது… வத்திக்கானின் வீழ்ச்சியையே குறிப்பதாக கருதப்படுகிறது.
படத்தில் அடி வாங்குபவர் கிறிஸ்தவருக்குரிய இயல்புடன் வரையப்பட்டுள்ளார், அதே வேளை போர் வீரர் குதிரையில் இருப்பதன் மூலம் அரேபிய இஸ்லாமியரால் ஏற்பட போகும் ஆபத்தை குறிப்பதாக கருதப்படுகிறது.
நோஸ்ராடாமஸின் குறிப்புகளின் படியும் வத்திக்கான் எரியும் எனவும்… கிறிஸ்தவர்கள் தமது மதம் மீதான பற்றை இழப்பார்கள் எனவும். வேற்று மதமொன்று தனது வீரியத்தை அதிகரித்து கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளாராம்.
(படத்தின், விளக்கம் இதுவாக இருக்கும் என கருதுபவர்கள் கூறவும்.)

வரும் பதிவுகளின் இன்னும் பல சுவாரஷ்யமான பட விளக்கங்களை பார்க்கலாம்.

 ( இங்கு குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் எந்த மதத்தையும் தாழ்மை படுத்தவோ / பெருமைப்படுத்தவோ அல்ல… இத்தளத்தில் ஒவ்வொரு தொடர்களிலும் சில மதப்பற்றாளர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருக்கலாம். அவை தொடரின் போக்கில் அமைந்தவை மட்டுமே.)

(3995)

5 thoughts on “புகைப்பட விளக்கங்கள் – வத்திக்கான் வீழ்ச்சி! | நொஸ்ராடாமஸ் – 02”

 1. prabhakaran says:

  1st picture saying its fight to france government, this king having crown its have rooster and near its symbol of france legacy, so its saying fight between fight between small revolution group and empire. its may happened or it will happen.

  1. Prabu says:

   Je vous remercie de votre commentaire analyser :-)

 2. prabhakaran says:

  from my thought that god hand only using soldier to kill the angel….

 3. Jeezan Azik says:

  pope benedict XVI accepted Islam.. that time face threat for his life but he is not killed.
  Thats the meaning of this. And Islam is fast growing religion in the world and that picture's meaning is most Christians will accept Islam in future..

 4. Lijoe Jason says:

  but pope benedict XVI had came out from his designation so pope francis is now. so he will get hurt from sepoy as a angel.

Leave a Reply

Top