ஃப்ரான்ஸில் அகதி அந்தஸ்து கோருவது எப்படி? – OFPRA | சட்டங்கள் France

OFPRA tamil tamoulஅகதி அந்தஸ்து கோடும் படி முறைகளை பார்க்க முன், அதற்கு பொறுப்பாக ஃப்ரான்சில் இயங்கிவரும் அலுவலகத்தைப்பற்றி பார்ப்போம்.

அகதிகள் மற்றும் எவ் நாட்டுரிமையும் இல்லாதவர்கள் நலனை பாதுகாப்பதும் அவர்களின் மனித உரிமை சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஃப்ரான்ஸில் இயங்கிவரும் அலுவலகம் OFPRA ( L’office français de protection des réfugiés et apatrides).

குடியேற்றத்துறை அமைச்சின் அதிகாரத்தில் உள்ள இந்த அலுவலகம் அகதிகள் முறையான அனுமதியோடு நாட்டில் தங்குவதற்கான உரிமையை கொடுக்கும். அரசியல் அல்லது வேறு காரணங்களுக்காக அகதி அந்தஸ்து கேட்டவர்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தங்குவதற்கான அனுமதியை இந்த அலுவலகம் வழங்குகிறது.

“அகதி” என்றால் யார்?
பொதுவாக ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கமையவே அகதிளுக்கான வரைவிளக்கனம் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு நாட்டில் அல்லது ஒரு தனி நபரலால் தங்க முடியாதபடி அவரின் உயிரிற்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தால். அவர் இன்னோர் நாட்டில் நிரந்தர தங்குமிட அனுமதிகோரலாம். ( உயிராபத்து தனி நபர் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். அரசியல் பழிவாங்கல்களை சந்திப்பவர் மட்டும் தான் அகதி என்பது தவறு. உயிரிற்கு உத்தரவாதம் இல்லாமல் வெளியேறும் எவரும் அகதிகளாக கருதப்படுவார்கள்.)

ஃப்ரான்ஸிற்குள் நுழைந்தவர் அகதி அந்தஸ்து கோருவது எப்படி?
படி 1 :
ஃப்ரான்ஸிற்குள் நுழைந்ததும் அந்த மாவட்டத்திற்கு / பிரதேசத்திற்கு பொறுப்பான மாவட்ட அலுவலகத்தில் (Préfecture) தனது வருகையை பதிவு செய்தல் வேண்டும். ( விபரங்களை பதிவு செய்துவிட்டு அதிகாரி இன்னோர் நாளுக்கான நியமன படிவை தருவார்.)
தேவைப்படும் தகவல்கள் :
நாட்டிற்குள் நுழைந்த திகதி, நுழைந்த முறை, பிறப்பட்சாத்திப் பத்திரம்.

படி 2 :
மாவட்ட அலுவலகம் தந்த நியமன திகதியில் மீண்டும் மாவட்ட அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அகதி அந்தஸ்து கோருவதற்கான விண்ணப்பம் தரப்படுவதுடன். உங்கள் கையடையாலம் பெறப்பட்டு தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதி சீட்டு தரப்படும்.
தேவைப்படும் தகவல்கள் :
நாட்டிற்குள் நுழைந்த திகதி, நுழைந்த முறை, பிறப்பட்சாத்திப் பத்திரம், கடவுச்சீட்டளவிலான புகைபடங்கள்.

படி 3 :
விண்ணப்பத்தை நிரப்பி OFPRA அலுவலகத்திற்கு அனுப்புதல்வேண்டும்.
தேவைப்படும் தகவல்கள் :
நாட்டிற்குள் நுழைந்த திகதி, நுழைந்த முறை , நுழைய முன்னர் பிரவேசித்த நாடுகள், புகைப்படம், ஏற்கனவே ஃப்ரான்ஸில் நெருங்கிய உறவுகள் இருந்தால் அவர்கள் விபரம் முழுமையாக, குடும்ப அங்கத்தவர் விபரம், முன்னைய நாட்டில் இருந்து தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு கொண்டுவந்திருந்தால் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

OFPRA இல் சமர்ப்பித்த பின்னரான நடைமுறைகள் :

6 மாதங்களுக்குள் உங்களை OFPRA விசாரணைக்கு கூப்பிடவேண்டும். ( நேர தாமதம் ஏற்படும் என்றால், 6 மாதத்தில் உங்களுக்கு ” இன்னோர் 6 மாத கால அவகாசம் தேவை” என்ற ரீதியிலான கடிதம் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.

விசாரனையில், ஒரு அதிகாரியால் உங்களிடம் உங்கள் உயிராபத்து பிரச்சனைகள் தொடர்பான கேள்விகள் கேட்க்கப்படும். உங்களின் உயிரிற்கு ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்த உங்களிடம் இருக்கும் அத்தாட்சிகளை கொடுக்கலாம். ( கொடுக்கப்படும் அத்தாட்சிகளின் உண்மை தன்மையை அறிவதற்காக‌ OFPRA ஆல் நுண்ணியமாக ஆராயப்படும். )

விசாரனையின் பின்னர் 3 மாதம் முதல் 1 வருட கால அவகாசத்தில் உங்கள் அகதி அந்தஸ்து தொடர்பாக OFPRA எடுத்த தீர்மானம் உங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும்.

அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டால் 10 வருட காலம் ஃப்ரான்ஸில் தங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும்.

நிராகரிக்கப்பட்டால், ஒரு மாத காலத்திற்குள் CNDA ( Commission des Recours des Réfugiés) நீதி மன்றத்தில் நீங்கள் மேல் முறையீடு செய்யலாம். அல்லது நாட்டிற்கு திரும்பலாம்.

(999)

Leave a Reply

Top