கூடுதல் CMU (CMU – Complémentaire) | சட்டங்கள் France

couverture-maladie-universelle-complementaire

ஃபிரான்சில் வேலை செய்பவர்கள் தங்கள் மாத வருமானத்தில் ஒரு பகுதியை la Sécurité sociale இக்கு கட்டுவார்கள். இதற்குப்பதிலாக அவர்களின் மருத்துவ செலவின் பெரும்பகுதியை (70 %) செக்குரிதே சோசியல் திருப்பிக்கொடுக்கும். இதற்கு ரெஜிம் ஜெனரல் (la régime génerale) எனப்பெயர்.

மருத்துவ செலவில் மீதம் இருக்கும் 30% இனை பெறுவதற்கு இரண்டு முறைகள் இருக்கின்றன.
குறைந்த வருமானத்தை உடையவர்கள் செக்குரித்தே சோசியலினால் செயற்படுத்தப்படும் கூடுதல் சே.எம்.யு (CMU-C) திட்டத்தில் சேர்ந்தால் மொத்த மருத்துவ செலவையும் திரும்பி பெறலாம்.
ஆனால், வருமான வரம்பைத்தாண்டி அதற்கு தகுதி இல்லாமல் போனால், தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் ( La Mutuelle de santé privé) பதிந்து மீதி 30% இனை பெறமுடியும். ( A.C.S சலுகை தொடர்பான தகவல்களைப்பார்க்க.)

கூடுதல் CMU பெறும் தகுதி குடும்ப வருமானம், உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே பெறப்படும் உதவித்தொகைகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பிற்குள் உள்ளோருக்கு மட்டுமே இச்சலுகை செல்லுபடியாகும்.

நிர்ணயிக்கப்படும் வருமானங்கள் :
1. CMU விண்ணப்பம் செய்யும் மாதத்தில் இருந்து முன்னைய 12 மாத வருமானம்.
2. குடும்ப நலத்துறை மூலம் பெறப்படும் வருமானங்கள். ( குழந்தை ஊக்கத்தொகை, வீட்டு ஊக்கத்தொகை போன்றவை)
3. வேலை மீழ் இணையும் உதவித்தொகை.

நிர்ணயிக்கப்படும் அதிக பட்ச வருமான வரம்புகள் :

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை. : வருட வருமானம்

தனி நபர் : 7 447€
2 பேர் : 11 282€
3 பேர் : 13 538€
4 பேர் : 15 794€
மேற்படி ஒவ்வொருவருக்கும் : 3 008€

உதாரணம் 01 :
ஜித்தின் குடும்பத்தில் மொத்தம் 5 நபர்கள் என்றும், அவர்களின் மொத்த வருமானம் (உதவித்தொகைகள் உட்பட) 15 800€ என்றும் வைத்துக்கொண்டால்…
CMU வருமான எல்லை நிர்ணயப்படி ஜித்தின் குடும்பம் CMU Complémentaire இற்கு தகுதியுடையது.
( எல்லை 15974 + 3 008€ : ஆனால் ஜித்தின் வருட வருமானம் 15 800€ தான் ஆகவே அவர் வருமான எல்லைக்குள் உள்ளார். )

உதாரணம் 02 :
சுஜியின் குடும்பத்தில் 5 நபர்கள் இருக்கிறார்கள் என்றும்… வருட வருமானம் 22 800€ என்றும் வைத்துக்கொண்டால் அவரால் CMU Complémentaire சலுகையை பெறமுடியாது. காரணம், 5 நபர்களுக்கான அதிக பட்ச வருமானம் 15 974+ 3 008 இக்கு அமைய 18 982€ ஆக இருத்தல் வேண்டும். ஆனால் சுஜி அதை தாண்டிய வருமானத்தைப்பெறுகின்றார்.

உத்தியோக பூர்வ தளம் : http://www.cmu.fr/

(739)

Leave a Reply

Top