குடும்ப விகித தொகை (Calcul de quotient familial) | சட்டங்கள் France

Calcul de quotient familial tamoulஒவ்வொரு ஆண்டும் குடும்ப வருமானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு குடும்ப நலத்துறை ( ) என்ற குடும்ப விகித தொகையை கணக்கிடுகிறது. குடும்ப விகித தொகை குறைவாக இருந்தால் அந்த குடும்பம் அதிகமான உதவித் தொகைகளை பெற முடியும்.

குடும்ப விகித தொகை கணக்கில் கொண்டு பள்ளிக்கூட உணவுகூடங்களின் தொகை கணக்கிடப்படுகிறது.
குடும்ப விகித தொகை 450€ இக்குள் இருந்தால் (சில மாவட்டங்களில்) பிள்ளைகள் விடுமுறை செல்ல இலவச கூப்பன்கள் கொடுக்கப்படுகிறது.

கணக்கிடும் முறை :

குடும்ப விகித தொகையை கணக்கிடுவதற்கு ஆண்டு மொத்த வருமானத்தை 12 ஆல் வகுத்து மாத வருமானத்தை கணக்கிட வேண்டும். மேலும், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை :
பெற்றோர் (கணவன்+மனைவி) : 2 பகுதி
முதல் குழந்தை : 0,5 பகுதி
இரண்டாவது குழந்தை : 0,5 பகுதி
மூன்றாம் குழந்தை : 1 பகுதி
நான்காம் குழந்தை : 0,5 பகுதி

உதாரணமாக 3 குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் :
குடும்ப வருமானம் 15000€
ஆக சராசரி மாத வருமானம் 15000/12 =1250€
மாத குடும்ப நலத்துறை உதவித்தொகை : 480€
குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை :  4 (2+0,5+0,5+1)

குடும்ப விகிதம் = (மாத வருமானம் + மாத குடும்ப நலத்துறை உதவித்தொகை) / குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை.

இக் குடும்பத்திற்கான குடும்ப விகித தொகை :  312,5 €

மேலதிக தகவல்களுக்கான உத்தியோக பூர்வ தளம் : https://www.caf.fr/

(650)

Leave a Reply

Top