மிசல் லோதிதோ (Michel Lotito) கண்டதை உண்ணும் வினோத மனிதர்!

Michael_Lotito_Monsieur Mange toutமிசல் லோதிதோ (Michel Lotito)
இவர் ஃப்ரான்ஸில் 1950 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு விசேட நபர். அவரது வினோத தன்மை பற்றி இன்று பார்க்கலாம்.
மிசல் லோதிதோ ஃப்ரான்ஸ் மக்களால் “Monsieur Mange tout” என்று அனைத்தையும் உண்ணும் நபர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டார்.

ஆம், சிறுவயது முதல் மிசல் கண்ணில் படும் பொருட்களை சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளானார். உலோகம், கண்ணாடிகள் (குவளைகள்), ரபர் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி, துவிச்சக்கர வண்டி போன்ற அனைத்தையும் உண்ணத்தொடங்கினார். 1978 ஆம் ஆண்டளவில் துவிச்சக்கர வெண்டிகளை அப்படியே சாப்பிட்டு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி புகழடைந்தார்.

பல மருத்துவர்களால் பல்வேறு வகையில் ஆய்வுகளை மேற்கொண்டும் அவரின் இந்த பழக்கத்திற்கான காரணத்தையும் அவரின் உடல் உலோகங்களை ஏற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. அவரின் மூளையில் உலோகம் ஒரு உணவாகப்பாக்கப்படுவதே காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

உலோகங்கள், ரபர்கள், கண்ணாடிகள் தவிர இவர் எண்ணை வகைகளையும் அப்படியே குடிப்பவர் என கூறப்படுகிறது.

அவர் சம்பந்தமான ஆவணப்படம் கீழுள்ளது தவறாமல் பாருங்கள்!
வினோதங்களை விரும்புவோர் பகிருங்கள்.

(1485)

Leave a Reply

Top