அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா? – Lemuria 04

PART 01 | PART 02 | PART 03

போன பகுதியில் நியான்டர்தார்ஸ் ( neanderthal ) பற்றி எழுதியிருந்தேன், ஆனால் நியான்டர்தார்ஸ் வாழ்ந்த காலப்பகுதி லெமூரியாவிற்கு முன்னரானது என கருத்து நிலவி வருகிறதே… அது பற்றி இன்று பார்ப்போம். :)

சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))

ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்…

நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.

மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்…)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)

அங்கு வாழ்ந்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவு எவ்வாறானது? அவர்கள் பேசிய மொழி என்ன? இன்னும் வியப்பான மறுக்கப்படும் உண்மைகள் வரும் பதிவுகளில் காத்திருக்கின்றன…
—————————————————————————————–
இது ஒரு கலந்துரையாடல்… உங்களது கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன…

By : Chandran Pirabu

(23301)

37 thoughts on “அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா? – Lemuria 04”

 1. priya says:

  hi great news and am new for this blog, i cant view ur previous post .

 2. Abu Roshni says:

  வாலி, சுக்ரீவன் இவர்கள் நியாண்டர்தார்சி இனம் என்றும் அனுமன் மட்டும் அந்த இனம் இல்லை என்று சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது, ஏனெனில், அனுமன், வாலி,சுக்ரீவன் எல்லோருமே ஒரே உருவ ஒற்றுமையில் தானே இருக்கின்றனர்

 3. மது says:

  எனக்கு இதை பற்றி போதியளவு தெரியாது இருந்தாலும் எனது சந்தேகம் என்னவெனில் லெமோரியா இலங்கை வேறாய் இருந்ததா ஏன் எனில் இராமாயணத்தில் கடல் மார்க்கம் பயன் படுத்தப்பட்டுள்ளதே

 4. ஆஷிக் முஹம்மது says:

  குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ரு எதை வைத்து நம்புகிறீர்கள் ?

 5. Ruthirakotii Devan says:

  Excellent, you are fill my expectations of all that is the human history commence in the world. Further I expect more composition from you and I like to join to you whenever. my mob: 9677047924

 6. vadakasi says:

  very nice

 7. RATHINASEELAN says:

  MELUM VALARCHI ADAYA EN VALTHUKKAL……JI

  ungalin sindhanai kadalil moolginen aalam potha villai(MANNIKAVUM)….. nan thediya pala valai thalangalil kidaika vendiya thagavalgal anaithum ungalin ore thalathil pala thagavalai arinthu konden (NANDRI) ethil nan magilchi pada karanam anaithum tamil-il irunthathe..

  melum ungalukku oru vendugol nan tamizhan-in gunam,veeram, arivu,avanin sindhanai(munthaya tamizhan) ithu patri nan ariya aaval padukiren..

  en vinnapathai sariyana oruvaridam serthu ullean negal uthava vendum. melum thagavalgal migavum thulliyamagavum, villakkamagavum irunthal nandraga irukkum ungalin pathilukaga kathirupen…..

  manathil pattathai koorinen thavaru irunthal mannikkavum…

 8. parvathi15798 says:

  en peru gopi

  1. senthamizhan says:

   I NEED MORE SUPER INFORMATIONS.. I NEED MORE ABOUT TAMIL NADU.. AND OTHER SCIENTIFIC SENSE IN TAMILNADU

 9. parvathi15798 says:

  unga name enna ? nenga enna work pandringa ? enaku oru santhagam nenga soldratha partha ramar palam unmaiya? unga padhivil nengal kuripitathu pole ellam unmai endral nitchaym antha elumbu kodu earth la thana irukanum? mudinja unga no anupunga pesanum

 10. MRS.SURESH. says:

  MIGA ARPUTHAM,NIRYA EZUTHA ENNKUM OOKAMAGA IRUKIRATHU.

  1. Prabu says:

   எத் தளத்தில் எழுத விரும்பினால் தொடர்பு பக்கம் மூலம் தொடர்புகொள்ளவும்.

 11. manikandan says:

  தங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும் மணி 99445-59752

 12. kumar says:

  Hi, whenever i click the topics (i.e topics like part 1,part 2 in many of your theories) i get the following error is there a problem in page or else….

  (Not Found
  The requested URL /lemuria-and-mu-tamil-குமரிக்கண்டம்/ was not found on this server.

  Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

  Apache Server at edu.tamilclone.com Port 80)

  1. Prabu says:

   Hi Kishore,

   தொழில் நுட்ப கோலாறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
   Permalink தொடுப்பு முறையில் ஏற்படுத்திய மாற்றமே தவறுக்கான காரணம். விரைவில் சரிபாக்கின்றோம். தற்சமையம், தொடுப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லை “search” பகுதியில் தேடுவதன் மூலமாக அப் பதிவை பார்க்கலாம்.

   நன்றி.

 13. Anonymous says:

  குர் – ஆனோடு

  குமரி கண்டத்தை ஒப்பிடும்போது எனக்கு (தேவா) கிடைத்த ஒரு சில தகவல்கள்…….

  நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் ஆதித் தந்தை ஆதம் (அலை) அவர்கள் இறங்கினார்கள்…இதன் மூலம் மனித இனம் தோன்றியது.

  கி.மு. 470000

  இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

  கி.மு. 360000

  முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  கி.மு. 300000

  யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

  கி.மு. 100000

  நியாண்டெர்தல் மனிதன்
  கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

  கி.மு. 75000

  கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

  கி.மு. 50000

  தமிழ்மொழியின் தோற்றம்.

  கி.மு. 50000 – 35000

  தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

  கி.மு. 35000 – 20000

  ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

  கி-மு. 20000 – 10000

  ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

  கி-மு. 10527

  முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

  கி.மு. 10527 – 6100

  பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

  கி.மு. 10000

  கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

  கி.மு. 6087
  நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்ப்பட்ட
  கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

  கி.மு 6000 – 3000

  கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

  கி.மு. 5000

  உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

  கி.மு. 4000

  சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

  கி.மு – 4000

  கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

  கி.மு – 3200

  சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

  கி.மு – 3113

  அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

  கி.மு – 3102

  சிந்து சமவெளிக் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

  மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

  இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

  கி.மு – 3100 – 3000

  துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

  கி.மு – 2600

  எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

  கி.மு – 2387

  இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

  கி.மு – 2000 – 1000

  காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி.

  கி.மு – 1915

  திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

  கி.மு. – 1900

  வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

  கி.மு. 1500

  முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

  கி.மு. – 1450

  உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

  கி.மு. – 1316

  மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

  கி. மு. 1250

  மூஸா (அலை) 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

  கி. மு . 1200

  ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

  கி. மு. 1000

  உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

  கி. மு. 1000-600

  வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

  கி. மு. 950

  சுலைமான் (அலை) வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

  கி. மு. 950

  வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

  கி. மு. 925

  யூதர்களின் அரசன் தாவூத் (அலை) இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

  கி. மு. 900

  இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

  கி. மு. 850பின்

  இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

  கி. மு. 776

  கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

  குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

  கி. மு. 750

  பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

  கி. மு. 700

  சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

  கி. மு. 623- 543

  கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

  கி. மு. 600

  லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

  கி. மு. 600

  கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

  கி. மு. 599 – 527

  மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

  கி. மு. 560

  பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

  கி. மு. 551-478

  கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

  கி. மு. 500

  கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

  கி. மு. 478

  இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

  கி. மு. 450

  ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

  கி. மு. 428 – 348

  சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

  கி. மு. 400

  கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

  கி. மு. 350 – 328

  உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

  கி. மு. 326

  அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

  கி. மு. 305

  சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

  கி. மு. 302

  சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

  கி. மு. 300

  சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

  கி. மு. 300

  கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் – மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

  கி.மு. 273-232

  மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

  கி.மு. 270-245

  சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

  கி.மு. 251

  புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

  கி.மு. 245-220

  சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

  கி.மு. 221

  புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

  கி.மு. 220 – 200

  கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

  கி.மு. 220-180

  குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

  கி.மு. 200

  முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

  கி.மு. 200

  தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

  கி.மு. 125-87

  ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

  கி.மு. 87-62

  செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

  கி.மு. 62-42

  யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

  கி.மு. 42-25

  பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

  கி.மு. 31

  தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

  கி.மு. 25-9

  இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

  கி.மு. 9-1

  கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்….
  கி.பி. 1 – 33
  நபி ஈஸா (அலை) அவர்களின் வருகையும் அவரின் இஸ்லாமிய பிரச்சாரமும்.
  கி.பி. 33 – 200
  கிருஸ்த்துவ மதத்தின் தோற்றுவிப்பாளரான பவுளின் வருகை…
  கி.பி. 200 – 500
  உலகில் பவுளின் கிருஸ்த்துவ மதம் வேகமாக பரவுதல்… தமிழகத்தில் சிலை வழிபாடும் அடிமைத்தனமும் தலைவிரித்து ஆடுதல்…
  கி.பி. 500 – 600
  இந்த உலகின் இருதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை……. தமிழகத்தின் மன்னர் சேரமான் பெருமாள் தமிழரின் தாய் மதம் திரும்புதல்……

  கி.பி. 600 – 800
  கேட்பாரற்று கிடந்த அரபுலக மக்கள் உலக்த் தலைமையை ஏற்றுக்கொள்ளுதல்…. ரோம, பாரசீக சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சி

  1. kannan says:

   Wow! Amazing

  2. durai says:

   great work sir….. salute….

  3. Anantha says:

   Elan went to Ceylon in which year Anna.? Have you forgoten ? 12 Tamil people( Kings and Bussines man ) taken Ceylon Kings under Arrest ? When did Ravana came to India to Marie Tamil Lady Chitta. ? How many tamil Akathiyar Lived in South India ? If you give morei Information , that’s Batterie,

 14. sakthi says:

  u have used the concept of the theory of evolution in this article.. as of i know i red in several journal and in blog which claims scientifically that the Darwin theory is wrong.. kindly check with that.

 15. abu says:

  I understand

 16. Nithi Mirror says:

  சின்ன சந்தேகம் அப்போ அட்லாண்டிஸ் என்று ஒரு தீவு இருந்துதா

 17. நன்றி :)

 18. சிறந்த கருத்துக்கள்…………..

 19. Rifard Mohammed says:

  உன்மையில் உங்கள் கருத்து நன்றாக உள்ளது. முஸ்லிம் ஆகிய நானும் ஒத்து கொள்கிறேன். …

  #ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…)…

  1. Prabu says:

   நன்றி :)

 20. Naveen Kumar says:

  ethu mari padika romba supera iruku.

 21. Sri Ganesh says:

  எனக்கும் இதிகாசங்களின் பயன் வேறுபட்டதாகத்தான் இருக்குமெண்ர சந்தேகம் இருக்கிறது ஆனால் அவற்றை வெளிப்படித்தினால் என்னை முட்டாளென்றும் மதத்திற்கதிரானவனென்றும்( அது மட்டும் உண்மைதான் ) கூறுகிறார்கள். நீங்கள் எழுதுவதை நிறுத்தாதீர்கள்….

  மூலம் : http://edu.tamilclone.com

  1. Prabu says:

   நன்றி உங்கள் ஊக்கத்திற்கு :)
   நிறுத்தவில்லை :) நாளையும் வரும் :)

 22. vijaykumar says:

  நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும். தொடர்ந்திருங்கள்… Ungal udaia karuthukal varunkala thalaimuraiku eduthu sellapadugindran .
  i salute boss.go head

 23. surya says:

  really interesting boss, go head

  1. Prabu says:

   tnx u boss :)

 24. Punithan says:

  Ungal padhivugal migavum swarasiyamaga ulladhu. Melum therindhu kolla aavalaga irukiren. Thodarundhu ezhudhungal. Nanri.

  1. Prabu says:

   நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும். தொடர்ந்திருங்கள்… பல அறிவியல் அமானுடங்கள் காத்திருக்கின்றன! :)

Leave a Reply

Top