போட்டிக்கு தயாராகும் Lumia 720 மற்றும் 520 தொலை பேசிகளின் விலை வெளியானது!

Nokia (நொக்கியா/ நோக்கியா) நிறுவனம் smartphone சந்தைப்படுத்தலில் இருக்கும் வீழ்ச்சியை சரி செய்யும் நோக்குடனும் தமது தொலை பேசியை குறைந்த விலையில் ஆனால் பெருமளவு தொகையாக விற்கும் நோக்குடனும் செயற்பட்டுவருகிறது.

அதன்படி… தமது புதிய படைப்புக்களான Nokia Lumia 520 மற்றும் Nokia Lumia 720 ஐ குறைந்த விலையில் சந்தைப்படுத்தவுள்ளது. இளையோர் வாங்கி பயன்படுத்தும் வகையில் விலை அமைய இருப்பதுடன் “more fun smartphone” என்ற நாமத்துடன் வெளிவர இருக்கிறது.

திரை கூரிய நகத்தாலும், Clove உடனும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளமை இவ் இரண்டு தொலை பேசிகளினதும் விசேட சிறப்புக்களாகும்.

Nokia Lumia 720 : தொழில் நுட்ப அம்சங்கள் :

 • dual-core 1GHz S4 processor
 • 13,4 மணி நேரம் தொடர்ந்து பேசிக்கொள்ளும் பட்டரி வசதி.
 • இரண்டுபக்க Cameras. (6.7-megapixel மற்றும் 1,3megapixel)
 • Windows Phone 8 இயங்குதளம்.
 • 4.3″ திரை
 • 64GB அளவிலான மேலதிக சேமிப்பகம்(storage).
 • 8GB நினைவகம்(memory).
 • பாதுகாப்பான வடிமைப்பு.
 • பல வர்ணங்களில் வெளிவர உள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விலை. (28/02/2013) : 290 யூரோ.

Nokia Lumia 520 : தொழில் நுட்ப அம்சங்கள் :

 • 1GHz dual core S4 processor
 • 5 Megapixel கமெரா.
 • 9.6 மணி நேர தொடர்ந்து பேசும் வசதி.
 • 4″ திரை

அறிவிக்கப்பட்டுள்ள விலை : 164 யூரோ.

என்ன செய்துகொண்டு இருக்கின்றோம்?

(1870)

Leave a Reply

Top