இரண்டு Skype கணக்குகளை ஒரே கணினியில் இயக்கும் முறை.

ஒரு கணினியில் இரண்டு Skype கணக்குகளை எப்படி இயக்குவது என்பதை இன்று பார்க்கலாம். ( இதே முறையில் ஏனைய “தொடர்பு”மென்பொருட்களையும் இயக்க முடியும்.

முறை 01 :

  • உங்கள் கணினியில் Start இற்கு சென்று தேடல் பகுதி (search programs and files) இல் Run என தேடவும். (வின்டோஸ் vista மற்றும்பின் வந்தவை.) பொதுவாக வின்டோஸ் உடன் R ஐ அழுத்தினால் Run திறக்கும். ( படத்தை பார்க்க)

secondery skype 01

  • Run பகுதியில் “C:\Program Files\Skype\Phone\Skype.exe” /secondary இங்கு இருப்பதை அப்படியே copy paste செய்யவும். ( ” அடியாலம் உள்ளடங்கலாக) (படத்தை பார்க்க)

secondery skype 02

  • இப்போது உங்கள் கணினியில் இரண்டு Skype கணக்குகளை இயக்கமுடியும்

மேலுள்ள முறை வேலை செய்யாவிட்டால்…

முறை 02 :
கணினியில் பதியப்பட்ட Skype இற்கான செயற்படுத்தல் கோப்பை (executable / exe file) ஐ அறியவேண்டும். பொதுவாக C:\Program Files\Skype\Phone என்ற பகுதியில் இருக்கும்.

அங்கு இருக்கும் Skype இலட்சனையுடனான கோப்பில் வலது சொடுகல் செய்து Send to > Desktop (create shortcut) ஐ சொடுகவும். ( படத்தை பார்க்க.)

secondery skype 03jpg

தற்போது desktop இல் இருக்கும் Skype shortcut ஐ வலது சொடுகல் செய்து Properties ஐ தெரிவு செய்யவும். அங்கு இருக்கும் Target field பகுதியில் ஏற்கனவே இருக்கும் “C:\Program Files\Skype\Phone\Skype.exe” இற்கு அடுத்து /secondary என்பதை இணைத்து ok செய்யவும்.

secondery skype 04jpg

இனி நீங்கள் ஒவ்வொரு தடவையும் அந்த Shortcut சொடுகும் போதும் இரண்டாவது Skype பயன்பாட்டிற்கு தயாராகும்.

என்ன ஒரு அறிவு !

(1068)

One thought on “இரண்டு Skype கணக்குகளை ஒரே கணினியில் இயக்கும் முறை.”

  1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்… வளர்க தமிழ்.

Leave a Reply

Top