கொம்பிற்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள் !

காண்டாமிருகத்தின் ஒற்றை கொம்பு அதன் பாதுகாப்பிற்காக இயற்கை அளித்த வரம் ஆனால் அதுவே அவற்றிற்கு எமனாகிறது. ஒற்றை கொம்புடைய குதிரைகள் (யூனிகார்ன்ஸ்) பற்றி கதைகளில் படித்திருக்கிறோம். நிஜத்தில் நடமாடும் யூனிகார்ன்கள் காண்டாமிருகங்கள்.

rhino91

இந்தியாவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் குறைந்த அளவிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.
சீனாவில் இப்படி வேட்டையாடப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள் உடனடியாக பொடியாக மாற்றப்பட்டே கள்ள மார்கெட்டில் விற்கப்படுகின்றன.

ஒரு கிலோ எடையுள்ள ரினோவின் கொம்பு சுமார் 65000 டாலர் மதிப்புடையது (தங்கத்தை காட்டிலும் விலை ரொம்ப சாஸ்தி இந்திய ரூபாயில் 35லட்சத்து 30ஆயிரம்) (இதன் கொம்பு மருத்துவ குணம் மிக்கது அட தேவுடா எவன் இதை கண்டுபிடிச்சானோ ?)

காஷிரங்கா தேசிய பூங்காவில் உள்ள தாயும் சேயும்

rhino1

அசாமில் கைபற்றப்பட்ட காண்டாவின் கொம்பு

rhino2

இந்திய காண்டாமிருகத்தின் கொம்புகள் 25 செ.மீ நீளம் கொண்டது.
எடை 1500 முதல் 2100 கிலோகிராம்.
தலைமுதல் வால் வரை 3.1 மீ முதல் 3.8 மீட்டர்.
கால் மற்றும் உடல்களில் தடிமனான செதிலான தோல் கொண்டது.
உணவு பழங்கள் மற்றும் புற்கள். அரிசி மக்காச்சோளம் மற்றும் பயிர்கள் பிடித்த உணவு.
பெண் காண்டா 15 ஆண்டுகளுக்கு பிறகே குட்டி போடும் பக்குவம் பெறுகிறது. பேறு காலம் 16 மாதங்கள். தாய், குட்டியை நான்கு ஆண்டுகள் பாதுகாக்கிறது. (vulnerable) அழிவு நிலை விலங்கு எண்ணிக்கை 2900 இருக்கலாம்.

இந்திய காண்டாமிருகம், முன்பு இது ஆப்கான் எல்லையில் இருந்து தென் கிழக்கில் பர்மா வரையிலும் இவை வாழ்ந்து வந்தன இப்போதுகுறிப்பிட்ட 10 இடமாக குறைந்து விட்டது மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதம் காஷிரங்கா(kaziranga அஸ்ஸாம்) தேசிய பூங்காவிலும், மீதம் பூட்டான், ஷிட்வானிலும் (நேபாளம்) உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 1905ன் கணக்கெடுப்பின் படி இவை 2000 இருந்தன இன்று 20 ஆக குறைந்து விட்டது ( வாழ்க மனிசர்கள் !)

rhino31

யானைகளை போன்றே இவையும் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக காஷிரங்கா வாசிகள் கூறுகிறார்கள்.

காஷிரங்கா தேசிய வன பாதுகாவலர்கள் 500 பேர் உள்ளனர். காண்டாமிருகங்களை வேட்டைகும்பலில் இருந்து பாதுகாப்பதே பெரும்பணி. பாதுகாப்பது கடுமையான பணி, சராசரியாக ஒரு நாளுக்கு 10 முதல் 20 கிலோமீட்டர்கள் அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. உயிர் ஆபத்து நிறைந்த வேலை என்கிறார்கள். பாதுகாப்பிற்காக 315 ரைபிள் ரக துப்பாக்கி தான் பயன்படுத்துகிறார்கள்.

காஷிரங்கா தேசிய பூங்காவில் பணியாற்றும் வன பாதுகாவலர்களின் ஒருமாதத்திய சம்பளம் 160 டாலர்கள் (ரூபாயில்.8700). ஒரு பாதுகாப்பு குழுவில் குறைந்தது மூன்று நபர்கள் பணியில் ஈடுபடுவர்.

இன்னும்…அடுத்த பகுதியில் பல அதிர்ச்சி தகவல்களுடன் தொடர்கிறேன்.

நன்றி : prof.ஆண்ட்ரூ பாம்போர்ட், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி மற்றும் பி.பி.சி

by Kalakumaran – eniyavaikooral

(1208)

Leave a Reply

Top