லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்? – Lemuria 03

PART 01 | PART 02
போன பதிவில் கண்ட நகர்வு பற்றி பார்த்திருந்தோம். இன்று அதன் தொடர்ச்சியை சுவார்ஷயமான தகவல்களுடன் பார்ப்போம்.

இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.

இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு “இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?” எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. “அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?” எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.)

இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் “பொரிக்ஷா” எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).

அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. –

—————————————————————————————
யார் இந்த நியான்டர்தார்ஸ்? மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

By : Chandran Pirabu

(13048)

5 thoughts on “லெமுரியா அழிந்தது எப்படி? தப்பியது யார்? – Lemuria 03”

  1. Cathy 17 says:

    Lemuriya details,pls join my whatsapp group no8220212214..sent me lemuria

  2. Mohideen Thasthahir says:

    Very nice….

  3. "பொரிஷா" child ah pathi google search la kidaikala admin..

Leave a Reply

Top