நிக்கோலஸ் கொபர்னிகஸ் பிறந்த தினம் : வரலாறும் சாதனையும் | Nicolaus Copernicus

Achievementsநாளை உலகின் சிந்தனையை மாற்றியமைத்த நிக்கோலஸ் கொபர்னிகஸின் பிறந்த தினமாகும்.

மைல் கல்/ பிரபலம் :

நூற்றாண்டு காலமாக “பூமி”யை மையமாக கொண்டு தான் ஏனைய கிரகங்கள் இயங்குகின்றன என்ற “தொலமியின்” கொள்கையை மாற்றி… “சூரியனை” மையமாக கொண்டு தான் பூமி உட்பட ஏனைய கிரகங்கள் இயங்குகின்றன என்பதை ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்தவர் கொபர்னிகஸ்!

குறும் வரலாறு :

Nicolaus Copernicus ( நிக்கோலஸ் கொபர்னிகஸ்) 1473 ஆம் ஆண்டு 19 ஆம் திகதி மாசி மாதம் போலாந்தில் பிறந்தார்.
குடும்பத்தில் 4 ஆவதாக பிறந்தவர் கொபர்னிகல்ஸ், ஒரு விஞ்ஞானியாக மட்டுமில்லாது மருத்துவராகவும், நீதிபதியாகவும், கணிதவியலாளராகவும் இருந்தார். அது மட்டுமல்லாது அவர் ஒரு மத குருவாவார்!
மத குருவாக இருந்த போதும் கத்தோலிக்க மத கொள்கைக்கு எதிராக “சூரியன் தான் மையம்” என்ற தனது அடிப்படை கொள்கையை வெளியிட்டார்.

24 வைகாசி 1543 ஆம் ஆண்டு அன்று, கோமா நிலையில் இருந்த கொபர்னிகஸிடம் அவரது புத்தகமான “De revolutionibus orbium coelestium” அச்சிட்டு கொடுக்கப்பட்டது. அச்சிடப்பட்ட புத்தகம் கையில் கிடைத்ததும் கோமா நிலையில் இருந்து மீண்டு பின்னர் சிறிது நேரத்தில் இறந்ததாக வரலாறு கூறுகிறது.

கொபர்னிகல்ஸின் கொள்கைகள் அக்காலத்தில் மக்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், அவர் பின் வந்த கலீலியோ கலிலி உட்பட்ட விஞ்ஞானிகள் அவரின் கொள்கைக்கு சான்றுகளை அடுக்கியமையால் மக்கள் மத்தியில் கொபர்னிகஸின் சிந்தனை வலுப்பெற்று ஏற்கப்பட்டது!

தமிழில் அறிவியல் பரவ இதை பகிர்ந்துகொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் :)

(2172)

Leave a Reply

Top