கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02

PART 01

போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.

ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)

இனி “லெமூரியா” எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன…
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்…

அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய “ஸீஸோ” விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.

(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)

இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!

இன்றைய பதிவு சொல்ல வந்த விடையத்தை(எவ்வாறு அழிந்தது) சொல்லமுதலே நீள்மாகிவிட்டது.
ஒன்றை விளக்க வெளிக்கிடும் போது பல பாதைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்போது தான் நாம் சொல்லவருவது ஒரு நம்பகத்தன்மையானதாக இருக்கும்.

இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன! ( ஏன் என்றால் நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை! வாசிச்சது, கேட்டது , ஜோசித்தது எல்லாம் சேர்ந்து தான் இந்த ஆக்கம். அதனால், இத்தொடரை பிரயோசனமாக்குவதற்கு உங்களது பங்களிப்பு நிச்சயம் தேவை!)

By : Chandran Pirabu

(6316)

11 thoughts on “கண்ட நகர்வும் லெமூரியாவும்! – Lemuria 02”

 1. Can anyone know or can anyone put me in touch with Nigal Kalathin, who (I think) took an excellent photo of the murti of Agastya on the summit of Pothiyal Malai or Agastya Malai in TN/Kerala? I want to seek his permission to use it in my book on South India.
  Thanks in advance!
  Dr. Charles Allen
  Charles.allen@tiscali.co.uk

 2. இது போன்ற தகவல் எவ்வாரு திரட்டுகின்ரிர் மிகவும் ஆசிரியமாக உள்ளது

 3. Agori Baba says:

  muppathu / naapathu aayiram varudangalukku munnal ulaga veppamayamathalal america matrum Europia kandangalil Erpatta panipaarai uruguthal kaaranamagavum kooda kumarikandam Azhinthirukka koodum.

 4. ram murugan says:

  இது உண்மை…

 5. rasaakkalaaஅதீத கற்பனைகள்
  தமிழ் சங்கம் முதலில் லெமூரியா,அது கடலில் சீற்றங்களில் காணாமல் போனது,இரண்டாவது தனுஷ்கோடி யில் அதுவும் கடல் கொண்டது ,மூன்றாவது மதுரையில் முத்தமிழ்ச்சங்கம்,

 6. Hareesh Ravichandran says:

  குமரி கண்டத்தின் அழிவிற்கு பலர் பல கருத்துக்களை பதிவு செய்கின்றனர் . நான் குமரி கண்டம் வேற்று கிரக வாசிகளால் அழிக்க பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன் . இதை பற்றி விரிவாக காண்போம் .

  ALEX COLLIER என்னும் மேற்கத்திய ஆய்வாளரின் கருத்து உலகத்தில் அணைத்து மக்களாலும் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் . பின்னர் அவர்கள் ஒற்றுமையை கலைக்க எண்ணிய வேற்று கிரக வாசிகள் பல்வேறு மொழிகளை உலகம் முழுவதும் பரப்பினர் .

  இந்த கருத்து கண்டிப்பாக எற்று கொல்லும் படியாக உள்ளது ஏனென்றால் உலகின் தொன்மையான மொழிகள் பலவற்றையும் ஆராய்ந்தால் அதில் தமிழ் ஏதேனும் ஒரு இடத்தில இருக்கும் .

  குமரி கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் இந்த உண்மையை அறிந்திருக்கலாம் . எனவே தம் தாய் மொழியை மீதும் உலகம் முழுவதும் பரப்புவதற்காகவே அவர்கள் தமிழ் சங்கங்களை நிறுவி இருக்க வேண்டும் . ஒரு சில இலக்கியங்களில் தமிழ் சங்கங்களில் மொழி ஆராய்ந்ததை சொல்லப்பட்டுள்ளது . உண்மையை தமிழ் சங்கங்களில் ஆராய்ந்து மீண்டும் தமிழை உலகம் முழுவதும் பரப்ப செயல்பட்டுள்ளனர்.

  தமிழ் மீண்டும் உலகம் முழுவதும் பரவாமல் தடுக்கவும் உண்மை வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கவும் வேற்று கிரக வாசிகள் குமரி கண்டதை அழித்திருக்கலாம் என்பது என் கருத்து.எதோ வாய்க்கு வந்ததை கூறி விட முடியாது அல்லாவா…? எனது கருத்துக்கு வலு சேர்க்கும் சில சிந்திக்க வேண்டிய விஷயங்கள்

  முதலில் தமிழ் இலக்கியங்களில் நன்கு கடல் கொள்கள் ஏற்பட்டு குமரி கண்டம் அழிக்க பட்டதாக சொல்லுகின்றன. தமிழ் சங்கங்கள் ஏற்படுவதற்கு முன்பு கடல் கொள்கள் ஏற்பட்டதிற்கு எந்த சான்றும் இல்லை . முதல் கடல் கொள் முதல் தமிழ் சங்கம் தென்மதுரையில் நிறுவிய பிறகே ஏற்பட்டுள்ளது அதிலும் சரியாக தென்மதுரை அழிக்கப்பட்டது.

  இரண்டாவது தமிழ் சங்கம் நாகனன்நாடு என்னும் இடத்தில் அமைக்க பட்டு அது இரண்டம் கடல் கோளில் அழிக்கப்பட்டது .

  இதே போல் முன்றாம் தமிழ் சங்கம் கபடபுரம்மும் கடல்கொள்ளல் அழிக்கப்பட்டது .

  ( நாகனன்நாடு , கபாடபுரம் எது முதலில் தோன்றியது என சரியாக தெரியவில்லை )

  இவ்வாறு ஒவ்வொரு கடல் கோலும் சரியாக தமிழ் சங்கங்களையே விழுங்கி உள்ளன இது எதேர்ச்சையாக நிகழ்ந்த ஒன்றாக விட்டுவிடமுடியாது. தமிழ் சங்கங்கள் நிறுவதற்கு முன்பு ஒரு கடல்கொள்ளும் ஏற்பட்டதாக தெரியவில்லை . அதுசரி கடல்கோளை எப்படி உருவாக்கி தாக்கமுடியும் என என்ன தோன்றும்.

  தற்ப்போது மனிதன் weather manipulation என்னும் புதிய ஆராய்ச்சியில் சப்தம் இல்லாமல் இடு பட்டு உள்ளான் . அதாவது செயற்கையாக ஒரு புயலையோ , மழை மேகங்களையோ உருவாக்குவதே இந்த ஆராய்ச்சி . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய புயல் இவாறு மனிதனால் உருவாக்க பட்டிருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .( இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள weather manipulation பற்றிய கட்டுரைகளை படிக்கவும் ).

  மனிதர்கள் நம்மாலேயே ஒரு புயலை உருவாக்க முடியும் என்றல் நம்மை விட அறிவில் பல்லாயிரம் மடங்கு முந்தியவர்களாக கருத படும் வேற்றுகிரக வாசிகள் ஒரு கடல் கொளை உருவாக்கி அதை கட்டுபடுத்தி அதை குறுப்பிட்ட இடத்தின் மிது எவ முடியும் என்பது என் கருத்து.

  1. Prabu says:

   மிகவும் நுணுக்கமான தகவல்களுக்கு முதலில் நன்றி.
   ஆம் நீங்கள் சொல்லுவது போன்று உலகின் அனைத்து மொழிகளின் அடிப்படையிலும் தமிழின் தழுவல் இருந்துவந்துள்ளது.

   ஆனால், நீங்கள் சொல்வதில் எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால்…
   ” ஏன் ஏலியன்ஸ் தமிழர்களை / குமரிக்கண்டத்தை மட்டும் அழிக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன பகை? பூமியில் தமிழ் ஆட்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?”

   weather manipulation இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் படியான தகவல். ( 2004 சுனாமியின் பின்னால் கூட இச்செயல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.)

   “தமிழ்” வளர்வதை தடுக்க பல திட்டங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது ஏன், எப்படி என்பதை “இலுமினேட்டி தொடர்” மீழத்தொடரும் போது பார்க்கலாம்…

  2. jegan says:

   hello boss aliens ku veru nelai illaya….

   angum apodhum…tamil tamilargalai alipathu than velaya…..

   apdi avan alithirundhal oru tamilanum uyirodu illadha varu….
   valuvaga ayudhngalai proyogithu alithirukka kudum…

   aanal aliengal avaru seiya villai en endral avanukku evlovo velai irukiradhu..

   apdi neengal kooruvadhu pol aliens than idhai seidhadhu endral

   nigal kalathil aliengal arivu thiran sakthi men melum valarnthu ipothu

   alithu irukalamey……

   ulagin anaithu moligalilum tamilin talauval irukirathu endral …

   tamil lil sila eluthukalai veru moliedam(enaku therindhu vadamolil) irundhu kadan
   vangi kalathai otta vendiya katayam….

   tamilai oruvan thonmayana moli endral tholil thooki vaithu veerapu vasanam pesuvadhum….

   illai tamilai vida mun thondriya moli ondru undu endral avarai thooki erivadhum

   tamilan ku valaka magai vittadhu….

   aanal thonamayanthu tamil than othu kolgiren….

   irundhum adhu ella idangalilum parava villai….

   lemuria kandathil tamilan mattum than valnthan endral …

   avandhu tamil olai alladhu eluthu suvadigal indralavum en kandu pidikavillai…

   sinnangalum,nanayangalum,por muraigalum…tamil karkala chithirangalum engey…

   dinosauraus irndha padimangal ennalvu kidaikum podhum tamilan patriya ondrum kidaika villaya…

   nan sandru galai lemuria kandathil irundhu mattum ketkiren….

   ulagin mudhalil thondriya manithan africa kandathil thondrinan…

   angirundhu nila paguthi pirindhu asia kandathil inainthadhuvey tharkala india…
   aanal uyirinam thondriyathaga enaku teriavilai….

   alien arivil sirandhavan endral alikum valamai irukum…aanal thevai indri
   tamilai alika maatan….

   apadi aliens alithu irundhal indralavum tamillum,tamilanaum irndhirukka matan…..

   themn madhurai alitha kadhai matrum kannagi karpukaga.. alitha madhurai apdi edhuvum

   adharangal scientific kaga nirubika padavillai….

   madhurai il kadalum thondri maranintha adharangalum illai…

   nandri….

 7. //இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்)…// இது உண்மை என்றே அறியப் படுகிறது. 1980 – 1990 காலப் பகுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நாட்டுப் புவியியலாளர்களால் நடாத்தப் பட்ட ஆய்வுகளில் ஆண்டுக்கு சராசரியாக 8 மில்லி மீற்றர் தரை உயர்வு அவதானிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

  1. உறிதிப்படுத்தும் தகவலை வழங்கியமைக்கு நன்றி :)

 8. Kumari Kandam and Lemuria.
  Some Tamil writers such as Devaneya Pavanar have tried to associate Lemuria with Kumari Kandam, a legendary sunken landmass mentioned in the Tamil literature, claiming that it was the cradle of civilization.

Leave a Reply

Top