ஈஃபில் கோபுரம் : வரலாறும் சுற்றுலாவும் – பிரபல இடம்

eiffel-tower-tamil-detailsபரிஸில் (Paris) உள்ள ஃப்ரான்சின் (France) முக்கிய சின்னமான‌ ஈஃபில் கோபுரம்(Eiffel Tower) 7 உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
பொறியியலாளர் குஸ்ரவ் ஈஃபில் (Gustave Eiffel) என்பவரால் 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1889 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் 300 மீட்டர் உயரமுடைய இந்த கோபுரத்தை 300 வேலையாட்கள் 18000 இற்கு மேற்பட்ட உருக்கு கம்பிகளை ஒட்டியதன் மூலம் உருவாக்கினார்கள். ( கோபுர கட்டு மானத்தின் போது ஒரு தொழிலாளி இறந்தார். ஆனால் இது ஏனைய கட்டுமான அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த இறப்பாகும்.)
7300 தொன் நிறைக்கு அதிகமான நிறைகொண்ட இந்த கோபுரம் கடும் வெப்பத்தின் போது ஏற்படும் உலோக விரிவினால் கணிசமான சென்றிமீட்டர்கள் உயர அதிகரிப்பை காட்டுகின்றது. ( 6-9 சென்றிமீட்டர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. )

ஈஃபில் இந்த கோபுரத்தை கட்டும் போது மக்களிடையே இது அசிங்கமானது தேவையற்ற செயல் என நிராகரிக்கப்பட்டது. எனினும் இன்று உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் விரும்பிச்சென்று பார்வையிடும் முதல் தர இடமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் 20 ஆண்டுகால பாவணைக்கே கோபுரம் அமைக்கப்பட்டது. பின்னர், வரவேற்பை கருத்திற்கொண்டு நிரந்தரச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

3 அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரத்தில் முதல் இரண்டு அடுக்குகளிலும் உணவகங்கள் இருக்கின்றன.
முதல் இரண்டு அடுக்குகளுக்கும் மின் தூக்கி மூலமாகவோ அல்லது படிகளின் மூலமாகவோ ஏறலாம். ஆனால் 3 ஆவது அடுக்கிற்கு மின் தூக்கியாம் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

3 ஆவது அடுக்கில் உலக நாடுகளின் கொடிகளும் ஈஃபில் கோபுரத்தில் இருந்து நாடுகள் இருக்கும் திசைகளும் தூரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன! உச்சியில் இருந்து பார்த்தால் சுமார் 72 கிலோமீட்டர் அளாவிற்கு பரிஸின் அழகை ரசிக்க முடியும்.

சுற்றுலா செல்வோர்க்கான விபரங்கள்!

காலை 9 முதல் நல்லிரவு 12 வரை. 365 நாட்களும் திறந்திருக்கும். (குறிப்பிட்ட காலங்களில் 9.30 முதல் இரவு 11 வரை)

பெரியவர்களுக்கு :-
3 மாடிகளுக்கும் :14€ | 2ம் மாடி வரை மட்டும் என்றால் : 8,5€
இளையோருக்கு (12-25) :-
3 மாடிகளுக்கும் : 12,5€ | 2ம் மாடி வரை மட்டும் என்றால் : 7€
சிறுவர்களுக்கு / ஊணமுற்றோருக்கு :-
3 மாடிகளுக்கும் : 9,5€ | 2ம் மாடி வரை மட்டும் என்றால் : 4€
குழந்தைகளுக்கு :- இலவசம்

இணையத்தில் அல்லது நேரடியாக ஈஃபில் கோபுரத்தின் அடிவாரத்தில்.

 

(7678)

2 thoughts on “ஈஃபில் கோபுரம் : வரலாறும் சுற்றுலாவும் – பிரபல இடம்”

  1. Daisyrani says:

    My favorite place Eiffel tower… But I see not this…

  2. karthi says:

    wow nice History

Leave a Reply

Top