தலை முடி : சுவாரஷ்ய உண்மைகள்!

hair facts“முடி”
அழகைக்கொடுப்பதும் இது தான்.. கெடுப்பதும் இது தான்… இன்று “முடி” யைப்பற்றி சுவார்ஷ்யமான தகவல்கள் சிலவற்றை பார்ப்போம். :)

சாதாரணமாக தலையில் 100 000 தொடக்கம் 150 000 முடிகள் இருக்கும்.
ஆரோக்கியமான ஒரு தலை முடி 100 கிராம் நிறையை தாங்க கூடியது. அதாவது மொத்த முடியும் சேர்ந்தால் 12 தொன் நிறையை தாங்க கூடியது. இது இரண்டு ஆபிரிக்க யானைகளை தூக்க கூடிய சக்தி!!

தலை முடி 0.3 தொடக்கம் 0.5mm வரை ஒரு நாளில் வளரக்கூடியது. வருடத்திற்கு 12-15mm வரை வளரும்!

ஆபிரிக்கர்களின் தலை முடி மிகவும் மந்தமாக வளருவதுடன் முடி உடைவது ஐரோப்பியர்களை விட அதிகம். ஆசியர்களிடம் மிக வேகமாக முடி வளர்வதுடன் முடி இழுவைகூடியது.

சாதாரணமாக நாளிற்கு 40-100 முடிகள் கொட்டும். ( ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) இந்த எல்லையை தாண்டி கொட்டும் போது “மொட்டை” விழுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
40% ஆனவர்களுக்கு வழுக்கை/மொட்டை விழுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலும் ஆண்களிடையே ஏற்படும் இந்த பிரச்சனை பெண்களிடையேயும் ஏற்படுகிறது.

ஆசியர்களை விட ஐரோப்பர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் வழுக்கை/ மொட்டை விழும் வாய்ப்பு அதிகம்.

உடலில் வேகமாக வளரும் இரண்டாவது திசு முடியாகும். ( எலும்புகளில் இருக்கும் மச்சையே மிக வேகமாக வளரும் திசு)

ஒரு முடி வெள்ளை ஆவதற்கு 13 நாட்கள் எடுக்கும்!

ஒரு சென்டிமீட்டர் முடி கடந்த ஒரு மாதத்தில் நாம் உண்ட உணவு, குடித்த பாணம் என்பவற்றை அறிய உதவும்!

“champna” என்ற ஹிந்தி சொல்லில் இருந்தே shampoo என்ற சொல் பிறந்தது. champna என்றால் massage (**) என்று அர்த்தம்.

 1000 உம் வருடங்களும் 6 நாட்களும்

(3814)

2 thoughts on “தலை முடி : சுவாரஷ்ய உண்மைகள்!”

  1. சுவாரஸ்யம் தான்…

    உங்கள் தளம் திறக்க தான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது…

    1. Prabu says:

      விரைவு படுத்த முயற்சிக்கின்றோம் :)

Leave a Reply

Top