ஐன்ஸ்டைன் புதிர்-02(எந்த வேலை?)- Albert Einstein puzzle(tamil) -02

Einstein-puzzles-tamil-answerஐன்ஸ்டைனின் புதிர் 2 ஐ இன்று நீங்கள் தமிழ் ஜீனியஸூடாக தீர்க்கப்போகிறீர்கள்!
கடினமானதாக கருதப்படும் ஐன்ஸ்டைனின் புதிரை விடுவித்து நீங்களும் புத்திசாலி என்பதை நிரூபிக்க வாழ்த்துக்கள்!

முதலாவது புதிரை இங்கு காணலாம்!
இணையத்தில் பதிலை தேடி அறிவதை தவிர்த்து சுயமாக தீர்க்க ஊக்குவிப்பதற்காக பெயர்கள் மற்றும் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

ஐன்ஸ்டைன் புதிர் 2 :

அஞ்சலி, அரவிந்த், ஜித், ரனே, சுஜீ, கோவா, ஜீவா, ஜதீஸ் இந்த ஊழியர்களும் ஒரு தொழில் சங்கத்தில் வேலை செய்கிறார்கள்.

தொழில்னுட்ப பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு, நிர்வாக பிரிவு என்ற 3 பிரிவுகளில் அவர்கள் வேலை செய்கிறார்கள். (வேறு பிரிவுகள் இல்லை.)

அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விளையாட்டுக்களை விரும்பி விளையாடுபவர்கள். Football (உதைப்பந்தாட்டம்), Cricket(துடுப்பாட்டம்/கிறிக்கெட்), Volleyball(கரப்பந்தாட்டம்), Badminton(பூப்பந்தாட்டம்), Tennis, Basketball(கூடைப்பந்து), Hockey மற்றும் Table Tennis என்பன அவர்களின் விளையாட்டுக்கள். ஒருவர் விளையாடும் விளையாட்டை இன்னொருவர் விரும்புவதில்லை. (இங்கு விளையாட்டுக்கள் குறிப்பிடப்பட்ட வரிசைக்கும் பெயர்கள் குறிப்பிடப்பட்ட வரிசைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை!)

 • ரனே நிர்வாக பிரிவில் வேலை செய்கிறார், Football ஐயோ Cricket ஐயோ அவர் விரும்புவதில்லை.
 • கோவா, Table Tennis ஐ விரும்பும் அஞ்சலியுடன் மட்டும் தொழில் நுட்ப பிரிவில் வேலை செய்கிறார்.
 • சுஜீ மற்றும் ஜதீஸ் ; ரனே வேலை செய்யும் பிரிவில் வேலை செய்யவில்லை.
 • ஜித்திற்கு Hockey பிடிக்கும் ஆனால் அவர் சந்தைப்படுத்தல் பிரிவில் வேலை செய்யவில்லை.
 • ஜீவா நிர்வாக பிரிவில் வேலை செய்யவில்லை அத்தோடு அவருக்கு Cricket ஓ Badminton ஓ விருப்பமில்லை.
 • நிர்வாக பிரிவில் வேலை செய்பவர்களில் ஒருவருக்கு Football பிடிக்கும்.
 • Volleyball ஐ விரும்புபவர் தொழில் நுட்ப பிரிவில் வேலை செய்கிறார்.
 • நிர்வாக பிரிவில் வேலை செய்யும் எவரும் Badminton ஐயோ Tennis ஐயோ விரும்புவதில்லை.
 • ஜதீஸனிற்கு Cricket பிடிக்காது.

கேள்வி :
நிர்வாக பிரிவில் வேலை செய்பவர்கள் யார்?

சுஜீ எந்த பிரிவில் வேலை செய்கிறார்?

சரியான பதிலை விளக்கத்துடன் ஒரு கிழமையில் எமது Facebook Fanpage இல் பார்வையிடலாம் :)

(3832)

2 thoughts on “ஐன்ஸ்டைன் புதிர்-02(எந்த வேலை?)- Albert Einstein puzzle(tamil) -02”

 1. Ram V says:

  நிர்வாக பிரிவில் வேலை செய்பவர்கள் யார்?…
  அரவிந்த், ஜித், ரனே

  சுஜீ எந்த பிரிவில் வேலை செய்கிறார்?
  சந்தைப்படுத்தல் பிரிவு

  1. பாபு (தூத்துக்குடி) says:

   ராம் v answer கரெக்ட்

Leave a Reply

Top