கலீலியோ கலிலி : தொலை நோக்கியின் தந்தை – வரலாற்று (15/02/1564)

Galileo Galilei tamilநாளை 15 மாசி (15th feb 2013) , அறிவியல் புரட்ச்சியை ஏற்படுத்திய கலீலியே கலிலி (Galileo Galilei) பிறந்த தினமாகும்.

இத்தாலி பைஸா நகரத்தில் 1564 ஆம் ஆண்டில் பிறந்தார் கலீலியோ. சிறுவயதில் இருந்து பொறியியல் துறையில் கவணம் செலுத்திய அவர் 1589 ஆம் ஆண்டில் பைஸா பல்கலைகழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பெளதீகத்துறையில் அவரின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு 1610 இல் Tuscany, Florence இல் முதன்மை கணிதவியலாளராக நியமனம் பெற்றார்.

பிரபல மைல் கல் :

1609 ஆம் ஆண்டள‌வில் டச்சு நாட்டு கண்ணாடி தயாரிப்பாளர் ஒருவர் தூர உள்ள பொருட்களை கிட்டவாக பார்க்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்து மறைத்து வைத்துள்ளார் என்ற செய்தி வதந்தியாக விஞ்ஞானிகள் மத்தியில் பரவியது.
அப்போது, ஏன் அது வதந்தியாக இருக்கவேண்டும்… அப்படி ஒரு சாதனத்தை உருவாக்க முடியாதா என்ற கேள்வி கலீலியோவிற்கு எழுந்தது கலீலியோ தனது சொந்த தேடலில் ஈடுபட்டார் சுமார் 24 மணி நேர விடா முயற்சியின் பின்னர் 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலை நோக்கியை ( telescope) கண்டுபிடித்தார்!
( ஆரம்பத்தில் தொலை நோக்கி spyglass (வேவுக்கண்ணாடி) என்று அழைக்கப்பட்டு பின்னர் telescope என்ற பெயரைப்பெற்றது.)

ஏனைய கண்டுபிடிப்புக்கள் :

ஒரே தன்மையான பொருட்கள் அளவில் எவ்வாறு மாறுபட்டிருந்தாலும் ஒரே வேகத்துடனேயே விழும் என்பதை நிறுவினார். ( பைஸா கோபுரத்தில் இருந்து பீரங்கி குண்டுகளை விழச்செய்து நுறுவியதாக கூறப்படுகிறது. )

நிலவில் மலைகள், பள்ளத்தாக்குகள் இருப்பதை தொலை நோக்கியூடாக கண்டு அறிவித்தார்.

வியாழன் கிரகத்தை 4 உப கோல்கள் சுற்றிவருவதாக கண்டறிந்தார். (67 உபகோல்களுள் இருப்பது இன்றுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது)

மேலும் :

கலீலியோவின் ஆய்வு முடிவுகள் Aristotle (அரிஸ்டாடில்) இன் கருத்துக்களுக்கு முரனாக அமைந்ததுடன் Nicolaus Copernicus நிக்கோலஸ் கொப்பர்னிக்கலின் கருத்துக்களுக்கு சான்றாக அமைந்தன.
பூமி மையம் அல்ல சூரியன் தான் மையம் என்ற கொப்பர்னிக்கலின் கருத்துக்கு தொலை நோக்கி மூலம் நிரூபனம் கொடுத்தார். இதன் விளைவாக 1632 ஆம் ஆண்டில் ரோமை மையமாக கொண்டியங்கும் கத்தோலிக்க சபையால் அவரின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு வீட்டுத்தடுப்பில் வைக்கப்பட்டார்.
வீட்டுதடுப்பிலேயே 08/01/1642 ஆம் ஆண்டு இறந்தார்.

(7568)

3 thoughts on “கலீலியோ கலிலி : தொலை நோக்கியின் தந்தை – வரலாற்று (15/02/1564)”

  1. Gobi says:

    Leornado da Vinci paththi solla mudiyuma plz

    1. Prabu says:

      Pls, give me some times… i’ll do it

Leave a Reply

Top