இலவசமாக iphone ரிங்டோன்களை உருவாக்குவது எப்படி? A2Z விளக்கம்

iPhone இற்கு உங்களுக்கு பிடித்த இசையை அல்லது பாடலின் ஒரு பகுதியை ரிங்டோனாக்க வேண்டும் என்றால் இணையத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இன்று தமிழ் ஜீனியஸில் கட்டணம் செலுத்தாமல் எப்படி எமக்கு தேவையான இசையை ரிங்டோனாக மாற்றுவது என்பதை பார்ப்போம்.

1. உங்கள் iPhone ஐ (கேபிபுல் மூலமாக) கணணியுடன் இணைத்துக்கொள்ளவும்.

2. கணணியில் உள்ள itunes மென்பொருளை இயக்கவும். ( இதுவரை பதியாதவர்கள் இங்கு தரவிறக்கி பதிந்துகொள்ளலாம்.)

3. தற்போது நீங்கள் ரிங்டோன் ஆக்க இருக்கும் இசையை itunes இல் போட்டுக்கொள்ளவும். உங்கள் விசைப்பலகையில் Ctrl+O வை அழுத்தி உங்கள் இசை கோப்பை தெரிவு செய்யவும்.
( படத்தை பார்க்க )

how to make iphone ringtone 01

4. இப்போது உங்கள் இசை கோப்பு itunes மென்பொருளினுள் இருக்கும். அதை right click (வலது சொடுகல்) செய்து வரும் தெரிவுகளில் “create aac version” ஐ சொடுகவும். ( படத்தை பார்க்க.)

how to make iphone ringtone 02

5. சிறிது நேரத்தில் உங்கள் itunes மென்பொருளினுள் உங்கள் இசை கோப்பை போன்றே இன்னோர் இசைக்கோப்பும் இருக்கும். அதை right click செய்து வரும் தெரிவுகளில் “get info ” ஐ சொடுகவும். ( படத்தை பார்க்க.)

how to make iphone ringtone 03

6. இப்போது get info பிரிவில் மேலே இருக்கும் tabs களில் இருக்கும் Options பகுதியை தெரிவு செய்யவும்.
தெரிவு செய்து “Start time” இல் உங்களுள் இசை தொகுப்பில் உங்களுக்கு தேவையான ரிங்டோன் ஆரம்பிக்கும் நேரத்தை கொடுக்கவும். “Stop time” இல் ரிங்டோன் முடியும் நேரத்தை கொடுத்து கீழே உள்ள ok ஐ அழுத்தவும். (படத்தை பார்க்க)

how to make iphone ringtone 04

7. இப்போது மீண்டும் “படி-4” ஐ போன்று நாம் தற்போது info மாற்றிய கோப்பை aac version ஆக்கவும். – நீங்கள் தெரிவு செய்த பகுதி மட்டும் வெட்டப்பட்டிருக்கும். (படத்தை பார்க்க)

how to make iphone ringtone 05
( முதலில் உருவாக்கிய கோப்பை அழித்துக்கொள்ளவும். அல்லது உங்கள் இசை playlist இல் இரு தடவை இசைக்கும். )

8. இப்போது உருவாக்கப்பட்ட புதிய கோப்பை right click வலது சொடுகல்) செய்து வரும் தெரிவுகளில் “show in windows explorer” ஐ சொடுகவும். ( படத்தை பார்க்க.)

how to make iphone ringtone 06

– நீங்கள் உருவாக்கிய கோப்பு உங்கள் கணணியில் பதியப்பட்டுள்ள இடத்தை காணலாம்.
– இப்போது நீங்கள் இருக்கும் பகுதியில் Organize ஐ சொடுகி அங்குள்ள folder and search options ஐ சொடுகவும்.
– சொடுகிய பின் வரும் பகுதியில் மேலுள்ள tabs களில் view ஐ சொடுகவும். பின்னர், அங்குள்ள “hide extensions for known file types” பகுதியின் முன்னால் உள்ள சரி அடையாலத்தை நீக்கி ok செய்யவும். ( படங்களை பார்க்க)

how to make iphone ringtone 06

how to make iphone ringtone 07

9.இப்போது கணணியில் நீங்கள் உருவாக்கிய கோப்பை right click செய்து properties ஐ சொடுகவும். படத்தில் உள்ளவாறு இருக்கும் பகுதியில் உங்கள் ரிங்டோன் இசைக்கோப்பின் கோப்பு வகையை மாற்ற வேண்டும். – m4a என்பதை m4r ஆக மாற்ற வேண்டும். மாற்றி ok செய்து உறுதிப்படுத்தவும்.

how to make iphone ringtone 08

10. உருவாக்கிய கோப்பை இப்போது 2 தடவை சொடுகவும். ( உங்கள் itunes ரிங்டோன் பகுதிக்குள் வந்துவிடும்!)

how to make iphone ringtone final இனி வழமை போன்று synchronisation செய்தால் உங்கள் புதிய ரிங்டோன் தொலை பேசியில் பதியப்பட்டுவிடும்!

உங்கள் சந்தேகங்களை கொமென்டில் கேக்கவும். உடனடியாக பதிலை எதிர் பார்ப்பின் எமது ஃபேஸ்புக் பக்கத்திற்கு மசேஜ் அனுப்பவும்.

நண்பர்களுடன் பகிர்ந்து இலவசமாக ரிங்டோன்களை உருவாக்க உதவுங்கள் நன்றி :)

அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னோடி!!!

(1395)

2 thoughts on “இலவசமாக iphone ரிங்டோன்களை உருவாக்குவது எப்படி? A2Z விளக்கம்”

  1. Sri Bob says:

    தம்பி இது 2010லயே எங்களுக்கு தெரியும்…புதுசா ஏதாவது try பண்ணுங்க….

    1. கருத்திற்கு நன்றி :)
      இங்கு இருக்கும் வேறு தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்காது. அது போல் இதுவும் சிலருக்கு தெரிந்திருக்காது. :)

Leave a Reply

Top