“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01

ஆரம்பத்தில் லெமூரியா (lemuria) தொடர்பான தகவல்களை ஒரு ஆராச்சிக்கட்டுரை போன்று எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால், லெமூரியா பற்றி முரண்பாடு மிக்க பல தகவல்கள் காணப்படுகின்றமையால் ஓர் சிறந்த உண்மைத்தன்மை மிக்க ஆராச்சிக்கட்டுரையாக என்னால் அதைகொண்டுசெல்வது கடினமான காரியம். அதேவேளை இப் பதிவினை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் லெமூரியா கண்டம் பற்றி தெரிந்திருக்கும். எனவே அவர்களும் தமக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டாக வழங்கும் பட்சத்தில் இத்தொடரானது பயன் மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
——————————————————————————————–
“லெமூரியா” என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது “மூ (mu)” எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் “லெமூரியா” என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)

இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர் பார்க்கலாம்…. இது ஒரு கலந்துரையாடல்…. உங்களது கருத்துக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன

By : Chandran Pirabu

(7754)

7 thoughts on ““மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria 01”

  1. Seetha Raman says:

    i like ur posts.

  2. லெமூரியா என்பதைவிட குமரிக் கண்டம் / நாவலந்தீவு என்பது கிட்டிய பொருத்தமான பெயராக இருக்கும்.

  3. vijaykumar says:

    I like tamil history .i expect more details from your end in lemuria continet.thank you for your support.lots of thanks

Leave a Reply

Top