“முகம் மாற்றி” வாழும் பெண்! : Face-transplant – Connie Culp |+video

face-transplant_4-shot-faceகொனி குல்ப் (Connie Culp) 49 வயது நிரம்பிய அமெரிக்க பெண்ணைப்பற்றியே இன்று நீங்கள் அறியப்போகிறீர்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தனது கணவனின் மூர்க்கத்தனமான துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தனது மூக்கு, தாடை, ஒரு கண் உட்பட முகத்தின் பல பகுதிகளை இழந்தவர் இந்தப்பெண். ( மனைவியை சுட்ட பின்னர் தன்னைத்தானே சுட எத்தனித்த கணவரை உறவினர்கள் மடக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர், 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. )

முகத்தை இழந்து விகாரமடைந்த இந்த பெண்ணிற்கு ஒரு மருத்துவ அமைப்பு உதவ முன்வந்தது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட 30 இற்கு அதிகமான சத்திரசிகிச்சைகளின் உதவியுடன் இந்தப்பெண்ணின் முகம் ஓரளவு சீர் செய்யப்பட்டது.

காலில் இருந்து பெறப்பட்ட எலும்புகளை கொண்டு பெண்ணின் தாடைகள் சரி செய்யப்பட்டதுடன். 2009 ஆம் ஆண்டில் 22 மணி நேர தீவிர சத்திர சிகிச்சையின் பின்னர் இறந்த இன்னோர் பெண்ணின் 80% முகப்பாகங்கள் இந்த பெண்ணிற்கு பொருத்தப்பட்டுள்ளது. ( முகம் கொடுத்த பெண் பற்றிய தகவல்கள் இல்லை. )

மிகவும் ஆபத்தானது இந்த சத்திர சிகிச்சை, காரணம் ; இறந்த பெண்ணின் முகப்பாகங்களுடன் கொனி குல்ப்பின் முகத்தசைகள் இசைவடைய வேண்டும். அவ்வாறு அடையாவிடின் முகம் அழுகக்கூடிய நிலையும் ஏற்படலாம். எனினும் மருத்துவர்களின் முயற்சியின் பின்னர் கொனி குல்பின் முக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியடைந்தது.

இது உலக அளவில் நான்காவது முக மாற்று சிகிச்சையாக அமைந்தது.

மனிதாபிமானம் – மாற்றி யோசி!

(1219)

Leave a Reply

Top