புகைப்படங்களின் தரவேற்ற வேகத்தை அதிகரிக்க ஒரு யுக்தி! | Download

Light Image Resizer 4.4மின்னஞ்சலூடாக புகைப்படங்களை அனுப்பும் போது, பெரிய அளவிலான புகைப்படங்களை தொகையாக அனுப்ப முடியாது… ( அனுப்பும் வசதிகள் சில மின்னஞ்சல் சேவைகளில் இருப்பினும் தரவேற்றம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ) இந்த பிரச்சனைக்கு உதவும் ஒரு சிறிய மென்பொருளே இது.

உங்கள் புகைப்படங்களை பெரிய அளவில் தரம் குறையாது கோப்பின் அளவை மட்டும் குறைப்பது இந்த மென்பொருளின் சிறப்பம்சம். குறைந்த கோப்பு அளவுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்வது இலகு.

சிறப்புக்கள் :

  • ஒரே நேரத்தில் பெருந்தொகையான புகைப்படங்களின் அளவை மாற்ற முடிகின்றமை.
  • புகைப்படங்களுக்கான எல்லைக்கோட்டு அலங்காரங்களை செய்யும் வசதி.
  • வோட்டர் மார்க் போடும் வசதி.
  • கோப்பு மாற்றும் வசதி.
  • folder மற்றிம் subfolders களை ஒரே தடவையில் அளவு மாற்றலாம்!

மென்பொருளின் அளவு : 7Mb

தரவிறக்க : Download Now!

(1148)

Leave a Reply

Top