தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும். [தமிழர் அறியவேண்டியது – RP]

Pongal14 ஆம் திகதி நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.)

இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம்.

தைப்பொங்கல் என்றால் என்ன? :

உலக மக்களின் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நாள் என்று சுருக்கமாக சொல்லலாம். ( விரிவாக இணையத்தில் தேடிக்கொல்லலாம்.. பல பதிவுகள் இருக்கின்றன. )

இன்னோர் விதமாக சொல்லப்போனால், தைப்பொங்கல் ஆனது “தை திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
தை (தையல்) என்றால் பெண்(= பூமி(த்தாய்)) ; திரு (=சூரியன்(ஆண்)) என்ற விளக்கம் இருக்கிறது.
விளக்கம் சரி அதை கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலாக…
பூமி கிழக்கு மேற்காக தன்னைத் தானே சுற்றியபடி முதலில் தெற்குப்பக்கமிருந்து வடக்குப் பக்கம் நோக்கித் சூரியனைச் சுற்றத்தொடங்கும் நாள் தான் புத்தாண்டாக “தை திருநாள்” ஆக கொண்டாடப்படுகிறது!

இப்போது நாம் பொதுவான விடையங்களை பார்ப்போம்.
தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு… இவை இரண்டில் எது தமிழரின் புதுவருடப்பிறப்பு என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

இதற்கு ஓரளவு தெளிவான(??) பதிலை அறிய வேண்டும் என்றால் நமது தமிழர்களின் பண்டைய நாட்காட்டிகள் (calendars) பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்கள் பல்வேறு கணிப்புக்களின் விளைவாக 5 நாட்காட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அவற்றின் விளைவாக ஆதித்தமிழர்களிடையே பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு,???? போன்ற 5 ஆண்டுத்தொடக்கங்கள் இருந்திருக்கின்றன. இந்த நாட்காட்டிகள் சூரிய ஆண்டு நாட்காட்டி, சந்திர ஆண்டு நாட்காட்டி என்ற ரீதியில் அமைந்தன. அதில் இன்றைய ஆண்டுமுறை (365 1/4 நாட்கள்) உடன் ஒத்துப்போவது சூரிய சந்திர நாட்காட்டிகளே. அவற்றின் பாதிப்பே இன்று நாம் இரண்டு புத்தாண்டு குழப்பத்தில் இருப்பதற்கான காரணம்!

சூரிய நாட்காட்டி சூரியனின் சுழற்சியையும் புவியின் சுழற்சி+சுற்றுகையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ( சூரியனில் இருக்கும் ஒரு கரும் புள்ளையைக்கொண்டே சூரியனின் சுழற்சியை கணித்திருக்கின்றனர் நமது பண்டைய தமிழர்கள்! )

சந்திர நாட்காட்டி சந்திரனின் பின்னால் உள்ள நட்சத்திரத்தை கவணிப்பதன் மூலம் கணிக்கப்பட்டது. (ஒரு முறை தோன்றிய நட்சத்திரம் மீண்டும் தோன்ற கிட்டத்தட்ட இன்றைய 365 நாட்கள் எடுத்துள்ளன.)

( சூரிய சந்திர நாட்காட்டி குழப்பத்திற்கு காரணம், தமிழரின் அழிந்த கண்டமாக அறியப்படும் குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல் கோல்களின் விளைவுகளே காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் கருதலாம். இது தொடர்பாக ஆராய்ந்தால் வேறு ஒரு பிரிவுக்குள் சொல்லவேண்டி இருக்கும். அதனால் அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.)

இதில், சூரியன் தான் மக்கள் வாழ்விற்கு முக்கியமானது என்பதனாலும்… தை மாதம் இளவேனில் காலத்தில் வருவதாலும் “தை 1” புதுவருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


thai-Pongalதை புதுவருடப்பிறப்பை நாம் மட்டும்தான் கொண்டாடினோமா?

இதற்கு பதில் இல்லை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புதுவருடப்பிறப்பு தை 1 என்பது தான்!
16 ஆம் நூற்றாண்டுவரை தை1 (ஜனவரி 14) ஐயே புதுவருடப்பிறப்பாக உலகம் கொண்டாடியுள்ளது! எகிப்தின் மூலத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான யூரியன் கலண்டர் முறையை பின்பற்றிவந்த காலம் அது… யூலியன் கலண்டரின் (Julian calendar) மூலமானது நமது சூரிய நாட்காட்டியே!

ஜப்பானியர்களின் சம்பிரதாய புதுவருடப்பிறப்பு தமிழர்களின் புதுவருடப்பிறப்பாக அமைவதுடன், அவர்களின் கொண்டாட்ட முறைகளும் தமிழர் கொண்டாட்ட முறைகளுடன் ஒத்துப்போகின்றன. ( பொங்கல் பொங்கும் போது நாம் “பொங்கலோ பொங்கல்” என்று சொல்வது மரபு அவர்கள் “FONKARA -FONKARA ” என்று சொலிறார்கள்!)
அதே போன்று நாம் போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று 4 நாட்களை கொண்டாடுவது மரபு, அவர்கள் அதில் மாட்டுப்பொங்கலை தவிர்த்து ஏனைய 3 ஐயும் நாம் கொண்டாடும் அதே வகையில் கொண்டாடுகிறார்கள்! )

எப்படி தை 1 புதுவருடப்பிறப்பு இல்லாமல் போனது…

pope gergorianஆரியர்கள் படையெடுப்பின் போது அவர்கள் மாற்றங்களுக்கு உட்படாது பயன்படுத்திவந்த நமது சந்திர நாட்காட்டியை அடிப்படையாக்கொண்ட சித்திரை வருடப்பிறப்பை நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆரிய அரசன் சாலிவாகனன் ஆணைபிறப்பித்தான். அவனின் ஆட்சியின் பின்னர் சித்திரை 1 அன்றே தமிழ் புதுவருடப்பிறப்பு என்ற நிலை உண்டாகியது. ( இன்றுவரை நாம் மீழவில்லை என்பது வருத்தமே… இது தொடர்பான நுணுக்கமான ஆராய்வுகளை விடுத்துவிட்டு ஆட்சிக்கு ஏற்ப புதுவருடப்பிறப்பை மாற்றி மாற்றி கொண்டாடுகின்றோம்.)

தை 1 (ஜனவரி 14) உலக புதுவருடப்பிறப்பு என்றால் ஏன் ஜனவரி 1 புதுவருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது?

16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை சார்பாக “13 ஆம் பொப் கிரகெரி( Pope Gregory XIII) ” நாட்காட்டியை மாற்றி அமைட்த்தார் அதன்படி திடீரென ஒரே நாளில் 10 நாட்கள் ஆண்டில் இருந்து கழிக்கப்பட்டன. அடுத்து தவணை முறையில் ஏனைய நாட்கள் கழிக்கப்பாடு தமிழரின் நாட்காட்டியில் இருந்து 14 நாட்கள் பிந்தயை புதிய நாட்காட்டியை அறிமுகம் செய்து “கிரகெரியன் நாட்காட்டி” யை அறிமுகம் செய்தார்.!

இவ் மாற்றத்திற்கு பல காரணம் கூறப்பட்ட போதும்… மதம் அற்ற தமிழர்களின் நாட்காட்டி உலக நாட்காட்டியாக இருப்பதை விரும்பாத காரணத்தினாலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ஆழ்ந்த ஆராய்வுகள் கூறுகின்றன.
இவ் ஆக்கத்தை எழுதிவிட்டேன். ஆனால், பல தமிழர்களே இதை நம்பப்போவதும் இல்லை. ஆ ஊனா எல்லாமே தமிழர்களது தான் என்று சொல்கிறோம் என்று கலாய்ப்பார்கள். அப்படியே தமிழரதாக இருந்தாலும் இப்போது ஏன் தமிழர் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள்… காரணம், குதர்க்கம் மட்டும் பண்ணுவது தான் காரணம் என்பதை அறியாமல்….

நம்புவோர் இவ் ஆக்கத்தை பகிருங்கள்.
நம்பாதவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவியுங்கள்.
( இந்த ஆக்கதில் இருக்கும் பிழைகள், குறைகளை சுட்டிக்காட்டவும்.)

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் :)

(11493)

19 thoughts on “தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும். [தமிழர் அறியவேண்டியது – RP]”

 1. j. Anuraja says:

  yes you are right. if we say something about tamil, everybody will fight for other devanagiri,sanskrit, telugu like that

 2. ananth says:

  Thai Pongal is a Tamils -New Year day,The -Mayan also having 15.1.,their new Year day. But The Tamils live in Tamil Nadu change it, But In Singapur or Sri Lanka, “T-Pongal is a Holiday day, Sri Lankan goverment as a holiday, Why Tamils cannot Talk in Tamil land.

 3. tony says:

  Do u have any app for these information ??

 4. ilango says:

  வந்தேறிச் சொல் தாண் ஏற்றுக் கொள் வார்கள்

 5. mani says:

  Arumai.aduththadutha pathivugalai satru vegamaga podum padi thaalmaiyudaaalmaiyudan kettu kolgiren tholare

 6. Satz says:

  Arumaiyana Pathivu nanbarey. . .

 7. Sowmiya says:

  எனக்கு இந்த பதிப்பை வெளியிட்டவரிடம் பேச வேண்டும்

  1. saravanan says:

   Sollunga 9206687871

 8. dhivakar .rj says:

  tamilan varalaur maraga muteatha ondur

 9. Divakar Rjd says:

  eagaaludaya varalaru edhu da,,,

 10. Smiley Gowtham says:

  all the fact ha benn hiddened….v should mst no tat.

 11. தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? இல்லையா? [தமிழர் அறியவேண்டியது]…

  1. குமரிமைந்தன் படைப்புகள் என்ற எனது வலைப் பக்கத்தில் “தமிழன் கண்ட ஆண்டு முறைகள்” என்ற இடுகையைப் பார்க்க. மார்ச்சு 21ஐ ஆண்டுப்பிறப்பாகக் கொண்டு பாவாணர் வகுத்துத்தந்துள்ள மாதப் பெயர்களில் சுறவத்திலிருந்து தொடங்கி சக ஆண்டுமுறையை அப்படியே பின்பற்றலாம். ஆண்டு முறையின் பெயர் “கலியாண்டு” என்று இருக்கும். நடப்பது கலியாண்டு 5116

   1. Prabu says:

    வணக்கம்,
    மிக்க நன்றி உங்கள் தொடர்பிற்கு.
    ஏற்கனவே உங்கள் படைப்புக்களை பார்த்ததுண்டு. எனது பதிவுகளில் உங்களை மேற்கோள்காட்டியும் எழுதியுள்ளேன்.
    நிச்சயமாக அப் பதிவை அலசிவிட்டு மேல்பதிவிடுகிறேன்.

    நன்றி.

 12. Palani Chamy says:

  தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள்!

 13. தை திருநாள் வாழ்த்துகள்… நமது முன்னோர்கள் முன்னோடிகளாகத்தான் இருந்துள்ளார்கள். நாம்தான் பிறழ்ந்துள்ளோம். இதை நம்புவதற்கு கூட தகுதியற்றவர்களாக நம்மில் பலர் உள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது.

Leave a Reply

Top