Facebook Fanpage (ஃபான் பேஜ் : விருப்ப பக்கம்) திறப்பது எப்படி?

பதிவர்கள், நிறுவனங்கள், இணையத்தள உரிமையாளர்கள் என்று மட்டுமல்லாது இன்று பலரும் ஃபேஸ்புக்கில் விருப்ப பக்கங்களை (facebook fan page) திறந்து சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விருப்ப பக்கங்களை எப்படி திறம்பட நடாத்துவது அல்லது எப்படி இலகு பாவணைக்கு உட்படுத்துவது என்பதை பற்றி A2Z பார்க்கலாம்.

ஃபேஸ்புக்கில் விருப்பபக்கம் திறப்பதன் நன்மைகள் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

  • ஒரு தனிப்பிரிவாக இதன் நன்மைகள் பற்றி கூறமுடியாது, உதாரணமாக நீங்கள் இணையத்தளம் அல்லது பதிவராக இருந்தால் உங்கள் பதிவுகளை விரும்புபவர்களிடம் உங்கள் பதிவுகளை உடனடியாக கொண்டு செல்ல இந்த fan page கள் உதவும். உதாரணம் : TamilClone
  • நீங்கள் ஒரு நிறுவன அதிபராக இருந்தால் உங்கள் நிறுவன தயாரிப்புக்கள் பற்றிய விபரங்களை பாவணையாளர்களிடம் கொண்டுசெல்ல உதவுகிறது. உதாரணம் :SamsungMobile
  • நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் உங்கள் விசிறிகள் உங்களை தொடர உதவும். உதாரணம் : Enun
  • அடுத்ததாக, நீங்கள் ஒரு நடிகரின் விசிறியாகவோ அல்லது ஒரு படத்தின் விறியாகவோ அல்லது குறிப்பிட்ட சில வசங்களின் விசிறியாகவோ இருந்தால் அதற்கும் fan page ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். ( பயன் படுத்தும் சொற்களில் கவணமாக இருந்தல் வேண்டும், சட்டச்சிக்கல்கள் வர வாய்ப்புண்டு) உதாரணம் : Chiyaan vikram Fans

இனி எப்படி ஃபேஸ்புக் விருப்ப பக்கத்தை திறப்பது என்பதை பார்ப்போம்.

முதல் படி :
உங்கள் ஃபேஸ்புக் கணக்கினுள் நுழைந்து ஏற்கனவே உள்ள ஏதாவது ஒரு ஃபான் பேஜ்ஜை கிளிக் செய்யவும். ( உதாரணம் : TamilGenius )
உங்கள் ஃபேஸ்புக்கின் வலது மூளையில் புதிய பக்கத்தை திறப்பதற்கான அழைப்பு இருக்கும். அதை சொடுகவும். ( படத்தை பார்க்க )

how to create fan page 01

இரண்டாம் படி :
விருப்ப பக்கத்தை திறப்பதற்காக 6 பெரும் பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் பக்கத்திற்கு பொருத்தமான பிரிவை தெரிவு செய்யவும்.

how to create fan page 02

மூன்றாம் படி :
தெரிவு செய்த பிரிவிலேயே, உங்கள் பக்கத்திற்கு மிகப் பொருத்தமான பிரிவை தெரிவு செய்ய வேண்டும்.
பின்னர், உங்கள் பக்கத்தின் பெயரை சரியாக எழுதவும். ( தவறு ஏற்படின் மாற்ற ஒரே ஒரு சந்தர்ப்பமே இருக்கின்றது ஆகவே ஒன்றிற்கு இரு முறை சரிபார்த்துக்கொள்ளவும். )
get strated ஐ அழுத்தவும்.

how to create fan page 03

நான்காம் படி :

  • உங்கள் பக்கத்தின் அடையாள புகைப்படத்தை தெரிவுகளூடாக கொடுக்கவும். ( அல்லது skip ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லலாம். )
  • About பகுதியில் உங்கள் பக்கத்தை ஃபேஸ்புக்கில் பாவணையாளர்கள் இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கு ஏற்றவகையில் சிறிய விளக்கத்தை கொடுக்கவும். ( keywords ஆகவும் கொடுக்கலாம். உங்கள் இணைப்பக்கம் அல்லது வேறு சமூகத்தள பக்கத்தையும் இதர தளங்களாக கொடுக்கலாம். ( அல்லது skip ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லலாம். )
  • Enable ads பகுதியில் உங்கள் பக்கத்தை உங்கள் பக்கத்துடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளம்பரப்படுத்த விரும்பினால் இந்த பகுதியை Enable பன்னலாம். இது கட்டண விளம்பரம் ஆகையால் வங்கி அட்டை அல்லது Paypal கணக்கு கொடுக்கப்பட வேண்டும். ( அல்லது skip ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லலாம். )

how to create fan page 04 how to create fan page 05how to create fan page 06

இறுதிப்படி :
இப்போது உங்கள் பக்கம் தயாராகி இருக்கும்!
உங்கள் பக்கத்திற்கு ஃபேஸ்புக் நண்பர்களை அழைக்க கீழுள்ள படத்தில் உள்ள A பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏனைய நண்பர்களை ஃபேஸ்புக்கூடாக அறிமுகப்படுத்தி அழைக்க C பகுதியை பயன்படுத்தலாம்.
இதே செயலை Build Audience பகுதியூடாகவும் செய்யலாம்.

B பகுதியில் உங்கள் தளம் பற்றிய அடிப்படை தகவல்கள் உட்பட மேம்பட்ட ரீதியான அனைத்தையும் சரி செய்துகொள்ளலாம்.

how to create fan page 07 ஃபேஸ்புக் பக்கத்தை திறமையாக செயற்பட வைக்க செய்யக்கூடிய tricks களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(986)

Leave a Reply

Top