PPE ( Prime Pour Emploi ) : வேலை ஊக்கத்தொகை | சட்டங்கள் France

prime-emploi-tamilPPE ( Prime Pour Emploi ) : வேலை ஊக்கத்தொகை

2001 ஆம் ஆண்டு வருமான வரித்துறை மூலமாக வேலை இல்லாதவர்கள் (நீக்கப்பட்டவர்கள்) வேலையில் சேரவும் வேலை செய்பவர்கள் தொடர்ந்து செய்வதை ஊக்குவிக்கவும் இத் தொகை கொடுக்கப்படுகிறது.

ஊக்கத்தொகைக்கான அளவு மொத்த ஆண்டு வருமானத்தைப்பொறுத்து மாறுபடும்.
குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்களுக்கு அதிகபடியான ஊக்கத்தொகையும். கூடிய வருமானத்தில் வேலை செய்பவர்களுக்கு குறைந்த ஊக்கத்தொகையும் கிடைக்கும். பகுதி நேர வேலை பார்ப்பவர்களுக்கு வருமானத்திற்கேற்ப கிடைக்கும்.

முக்கிய விடையங்கள் :

  • குடும்பத்தில் கணவனோ மனைவியோ வேலை செய்திருக்கவேண்டும்.
  • வேலையில்லாதவர்கள், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், RSA உதவித்தொகை பெறுபவர்களுக்கு இவ் உதவித்தொகை கொடுக்கப்பட மாட்டாது.
  • இவ் ஊக்கத்தொகையைப்பெற வருமானவரி 3743€ இற்கு மேலானதாக இருத்தல் வேண்டும்.
  • வருமானவரி கட்டாதவர்களுக்கு இவ் ஊக்கத்தொகையை வங்கி மூலமாகவோ காசோலை மூலமாகவோ வருமானவரித்துறை கொடுக்கும்.
  • கணக்கிடப்படும் ஊக்கத்தொகை 30€ இற்கு மேலிருந்தால் மாத்திரமே வளங்கப்படும்.
  • RSA உதவித்தொகை பெறுபவர்களுக்கு வேலை ஊக்கத்தொகை குறைத்துக்கொடுக்கப்பட்டது.

வேலை ஊக்கத்தொகை கணிப்பு :

திருமணம் ஆகாத தனி மனிதருக்கு வருட வருமானம் 3743€ – 12 475€ இற்குள் இருந்தால் 7.7% ஊக்கத்தொகை கிடைக்கும்.

திருமணம் ஆகாத தனி மனிதருக்கு வருட வருமானம் 12 475€ – 17 451€ இற்குள் இருந்தால்,
[17451- (வருடவருமானம்]x 19.3%] என்ற சமன்பாட்டின் அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கான உத்தியோக பூர்வ தளம் : http://travail-emploi.gouv.fr/

(2785)

Leave a Reply

Top