“ஆமை” சிறுவன் : வினோத பிறவிக்கோளாறு |Video|

Turtle boyகொலம்பியா (Colombia) வைச் சேர்ந்த டிடியர் (Didier )என்ற 6 வயது சிறுவனின் பிறப்பின் போது ஏற்பட்ட அடையால பிறவிக்கோளாற்றையே இங்கு நீங்கள் காண்கிறீர்கள்.
இச் சிறுவனின் முதுகில் ஆமை ஓட்டைப்போன்று ஒரு சதைதொகுதி பிறக்கும் போதே இருந்துள்ளது. ஆரம்பத்தில் அதை சாதாரணமாக கருதிய பெற்றோர் வளர வளர சிறுவனுடன் இணைந்து அந்த சதையும் வளர்ச்சியடைவதை கண்டு மருத்துவரை நாடியுள்ளார்கள். ஆனால், அந்த கட்டியை நீக்குவதற்கு பெருமளவு பணம் செலவிட வேண்டும் என்ற நிலை இருந்ததால்.. தமது பிள்ளைக்கு உதவ முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

சிறுவன் வளர வளர அவன் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அந்த கட்டி மட்டும் பெருத்துக்கொண்டு சென்றது. இதனால் பாடசாலையில் இருந்தும் சிறுவன் நீக்கப்பட்டான். இந்த செய்தி உள்ளூர் பத்திரிகைகளூடாக லண்டனைச்சேர்ந்த Neil Bulstrode என்ற மருத்துவரின் காதுக்கு எட்டியது.
உடனடியாக இச் சிறுவனிற்கு உதவ முடிவெடுத்தார் அவர்.
பல வருத்தம் மிக்க சத்திர சிகிச்சைகளின் பின்னர், சிறுவனின் உடலில் 3 இல் ஒரு பகுதியை மூடியிருந்த அந்த தசைக்கட்டி அகற்றப்பட்டது!

(1707)

Leave a Reply

Top