அரக்கர் தீவும் பழப்பெட்டிகளும்… ( தமிழ் புதிர்கள் )

tamil puzzlesநீங்கள் ஒரு தீவில் மாட்டிக்கொள்கிறீர்கள்… அங்கிருந்து தப்புவதற்கு 3 அரக்கர்கள் ஒரு அரக்கன் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள். ஆனால் அதற்கு முதல் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்.

அவர்களிடம் 3 பழப்பெட்டிகள் இருக்கின்றன. அவற்றின் மேல் “அப்பிள்”, “மாம்பழம்”, “அப்பிள் மற்றும் மாம்பழம்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 வாசகங்களும் பொய்! அந்த அரக்கர்கள் ஒவ்வொருவரும் சரியான பழப்பெட்டிகளை தூக்கி தமது தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு பெட்டியை மாத்திரம் திறப்பதற்கே அவர்களுக்கு அனுமதி உண்டு. அவர்கள் மொக்கு என்பதால் உங்களிடம் உதவி கேட்கிறார்கள்.

நீங்கள் எப்படி ஒரு பெட்டியை மாத்திரம் திறந்து, 3 பெட்டிகளிலும் உள்ள பழங்கள் என்ன என்ன என்பதை கண்டறிவீர்கள்?
பதில் :

[wp-like-locker]” அப்பிள் மற்றும் மாம்பழம் ” என்று எழுதப்பட்ட பெட்டியையே திறக்க வேண்டும்.
காரணம் ; அதில் குறிப்பிடப்பட்டது பொய். எனவே அதில் அப்பிள் இருந்தால்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் மாம்பழமும்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும்.
அல்லது…
அதில் மாம்பழம் இருந்தால்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும்.[/wp-like-locker]

or
[twitterlocker]” அப்பிள் மற்றும் மாம்பழம் ” என்று எழுதப்பட்ட பெட்டியையே திறக்க வேண்டும்.
காரணம் ; அதில் குறிப்பிடப்பட்டது பொய். எனவே அதில் அப்பிள் இருந்தால்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் மாம்பழமும்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும்.
அல்லது…
அதில் மாம்பழம் இருந்தால்… “மாம்பழம்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும்… “அப்பிள்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அப்பிளும் மாம்பழமும் இருக்கும்.[/twitterlocker]

(3283)

8 thoughts on “அரக்கர் தீவும் பழப்பெட்டிகளும்… ( தமிழ் புதிர்கள் )”

 1. rajan says:

  all are wrong. Athu eppudi solamudium? neenga elarum solra mathri pana, 1. apple& mango box open pani athula mango iruntha mango boxla Apple&mangothan irukanum avasiyamilai appleum irukalam atheymathiri reverse apple boxla apple&mango or mango ethuvenalum irukalam. Very tough question……

 2. Sathish Paandyen says:

  1 பெட்டியில் இரண்டு பழங்கள் , மற்ற 2 பெட்டிகளிலும் ஒவ்வொரு பழம். எடை அதிகமான (ஆட்டிபார்த்து அல்லது சாய்த்துப்பார்த்து தெரிந்து கொண்டு ) அந்த ஒரு பெட்டியை தவிர்த்துவிட்டு மற்ற 2 பெட்டிகளில் ஏதேனும் ஒன்றை திறந்து பார்த்தால் மூன்றிலுமே உள்ள பழ விவரம் தெரிய வரும்.

 3. smell it and u can say apple or mango.

 4. Leo Pathu says:

  முதலில் ஆப்பிள் மற்றும் மாம்பழம் பெட்டியை திறக்க வேண்டும் அதில் மாம்பழம் இருக்கிறது,பின் ஆப்பிள் என்று எழுதியதில் கண்டிப்பாக ஆப்பிள் மற்றும் மாம்பழம் தான் இருக்கும்………..

  மூலம் : http://edu.tamilclone.com

 5. E.Bhu.GnaanaPragaasan says:

  இது ஏற்கனவே, எழுத்தாளர்.சுஜாதா அவர்களின் தலைமைச் செயலகம் தொடரின் இடையே கேட்கப்பட்டது!

  1. Prabu says:

   அது பற்றி தெரியாது… ஆனால் இவை ஆங்கில புதிர்களின் மாறுபட்ட தமிழ் வடிவங்கள்…

 6. Gaj says:

  அப்பிள் எண்டிருக்கிற பெட்டியை திறந்தால்…

  அதுக்குள்ளே அப்பிளும் மாங்காயும் இருந்தால்…
  அப்பிளும் மாங்காயும் எண்டிருக்கிற பெட்டிக்குள்ள நிச்சயமா மாங்காய் தான் இருக்கப்போகுது….! மாங்காய் எண்டுற பெட்டிக்குள்ள நிச்சயமா அப்பிள் தான் இருக்கப்போகுது….

  அதுக்குள்ளே மாங்காய் இருந்தால்
  அப்பிளும் மாங்காயும் எண்டிருக்கிற பெட்டிக்குள்ள நிச்சயமா அப்பிள் தான் இருக்கப்போகுது….! அப்பிள் எண்டுற பெட்டிக்குள்ள நிச்சயமா மாங்காய் தான் இருக்கப்போகுது….

  இதே முறையில் மாங்காய் என்கிற பெட்டிக்கும் செய்துபார்க்கலாம்….

  ஆனா அப்பிளும் மாங்காயும் எண்டிருக்கிற பெட்டியை மட்டும் திறக்கவே கூடாது….!

  இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைங்கிறது…!

  1. நீங்க genius!!!!!!!

Leave a Reply

Top