தவளை உருவில் குழந்தை! : Unbelievable Frog Baby!

நேபாலை சேர்ந்த சுந்தலி (Suntali) மற்றும் நீர் பஹதூர்(Nir Bahadur) தம்பதிகளுக்கு பிறந்த 3 ஆவது குழந்தையின் புகைப்படத்தையே இங்கு நீங்கள் காண்கிறீர்கள்.

சுந்தலியிற்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர். மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை யாரும் எதிர்பாராத விதமாக தவளை போன்ற உருவத்தில் பிறந்துள்ளது. வெளித்தள்ளிய கண்கள் கழுத்து அற்ற உடல் அடங்களாக பார்ப்பதற்கு தவளை போன்றே இந்த சிசு பிறந்துள்ளது. 2 கிலோகிராம் நிறையுடன் பிறந்த இந்த சிசு பிறந்து 1 மணி நேரத்தில் இறந்துவிட்டது. இறந்த பின்னர் வைத்திய சாலையை விட்டு வெளியே கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை.

இவ்வாறான குழந்தை பிறந்ததற்கு வைத்திய பதிவுகள் இல்லாவிட்டாலும் புகைப்படம் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் பலமாக உள்ளன! ( கூட்டத்தை கலைக்கவந்த பொலிஸார் உட்பட… )

இது பற்றி சுந்தலியின் வைத்தியர் தெரிவிக்கையில், முன்னைய குழந்தைகள் போன்று 9 மாதங்களில் தான் குழந்தை பிறந்ததாகவும் குழந்தை வையித்தில் இருக்கும் போது எந்த வித நோய்தொற்றும் தாய்க்கு ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது நடந்தது 2006 ஆம் ஆண்டில், தமிழ் வாசகர்களுக்காக பகிரப்படுகிறது.

(2165)

Leave a Reply

Top