தோன்றி மறைந்த அமானுஷ்ய உருவம் !

( Belmez faces) பெல்மீஸ் முகங்கள்

இந்த புகைப்படத்தில் உள்ள முகத்தை பார்த்தால் ஒரு சாதாரண புகைப்படமாக வோ அல்லது அவுட் போகஸ் வரைபடமாகவோ தெரிகிறது.

இதனுடைய வரலாற்றை தோண்டி எடுத்துப்பார்த்தால் அமானுஷ்ய விவகாரங்கள் கிளம்புகின்றன.

மரியா பெரைரா (Maria Pereira) என்ற பெண்மணி ஸ்பெயினில் பெல்மீஸ் (Spanish – Belmez de la moraleda) எனும் கிராமத்தில் வாழ்ந்தவர். இவருடைய வீட்டின் சமையல் அறை சிமெண்ட் தளத்தில் திடுமென வியக்கத்தக்க அமானுஷ்ய முகங்கள் தோன்றி மறைந்தன இது நடந்தது 23 ஆகஸ்ட் 1971.

இது பார்பதற்கு வரையப்பட்ட போர்ட்ராய்ட் ஓவியம் போல் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அதிசயத்தை பார்தததாக தகவல். ஆறு நாட்கள் கழித்து இந்த தளத்தை இடித்து விட்டு புதிய சிமெண்ட் தரை போடப்பட்டது.

ஆனால்…ஒருவாரம் கழித்து திரும்பவும் வேறு முகம் தெரிய ஆரம்பித்தது. இந்த முகம் பல வாரங்கள் தெரிந்தது அது மட்டுமல்ல இதன் முக தோற்றங்கள் மாறின. பொருக்க முடியாமல் திரும்ப இந்த தளம் தோண்டப்பட்டது இன்னும் ஆழமாக… அப்போது நிலத்தின் அடியில் மனித எழும்புகள் கிடைத்தன. அப்போது தான் தெரிந்தது அந்த வீடு மட்டும் அல்ல அந்த தெருவே ஒரு காலத்தில் மயானமாக இருந்தது தெரிய வந்தது.

அதன்பின், புதிய தரைத்தளத்தில் பலமுகங்கள் இருப்பதாக பேராசிரியர் குழு ஒன்று வந்து ஆராய்சி செய்தது ஆனால் யரோ வரைந்ததற்கான எந்த தடையமும் கிடைக்கவில்ல இவர்கள் ஆராய்சியில் ஒருமுகம் அல்ல 18 வித முகங்கள் தரையில் தென்பட்டதாக கூறப்படுகிறது. (அதில் ஒரு புகைப்படமே இது)

இது குறித்து மேற்கொண்டு பல வித ஆராய்சிகள் செய்யப்பட்டன விடை பூஜ்ஜியம். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லப்படுகிறது மரியா பெரைரா ஒரு சைக்கோ (psychic) அவர்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்றும் ஒருசாரர் நம்பினர். அவர் 2004 ல் தனது 85 ஆவது வயதில் இறந்துவிட்டார்.

இந்த முகங்கள் 35 வருடங்கள் தென்பட்டு இருக்கிறது, அவர் மறைவு வரை ! என்பது இன்னும் ஆச்சர்யமான அமானுஷ்ய தகவல்.

by Kalakumaran (eniyavaikooral)

(5230)

One thought on “தோன்றி மறைந்த அமானுஷ்ய உருவம் !”

Leave a Reply

Top