நாம் மறந்த நம் வரலாறு : விமானங்களும் நாமும்! (2of2)

போன பதிவில் இன்றைய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் ரொக்கெட் பற்றியும், எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம ரொக்கெட்/ பறக்கும் சாதனங்களின் குறிப்புக்கள் பற்றியும் பார்த்திருந்தோம்…
எதற்கெடுத்தாலும் எகிப்து தானா… தமிழில் அல்லது இந்தியாவில்/ குமரிக்கண்டத்தில் ஒன்றுமே இல்லையா என்று வாசிக்கும் நீங்களும் நினைக்கலாம்… எழுதும் நான் நினைத்தேன்… அதன் பின்னர் தேடிய தகவல்களில் பல வியப்புக்கள் காத்திருந்தன. அதை இப்போது ஒவ்வொன்றாக பார்க்கலாம்…

விமான சாஸ்திரம், முதலாவது பதிவில் தேடிய தகவல்.
விமான சாஸ்திரம் பற்றி இணையத்தில் தேடிய போது “20 ஆம் நூற்றாண்டில்” வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் என்பது போன்ற தகவல்களே கிடைத்தன. அப்படியானால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விமானத்தை உருவாக்கிவிட்டார்களே, இந்தப்புத்தகம் பண்டைய உலக மர்மங்களை போக்க ஒரு சான்றாக அமையாது என கருதினேன். மேலும் ஆராய்ந்ததில், சுமார் 6000 வருடங்களுக்கு முன்னரான படிமங்களையும் விட்டுச்செல்லப்பட்ட சான்றுகளையும் நீண்டகாலமாக தேடி தொகுத்த பின் வெளியான ஒரு முழு வடிவமே “விமான சாஸ்திர/ம்” என்ற உண்மை தெரியவந்தது! அதை பார்க்க முதல்…

நாம் மகாபாரதம், இராமாயணம் போன்ற புராதன கதைகளில் / இதிகாசங்களில் வானத்தில் இருந்து வருபவர்கள் பற்றியும். வானத்தில் நடந்த யுத்தங்கள் பற்றியும் பல கதைகளை கேட்டதுண்டு. ( கிறிஸ்தவ, இஸ்லாமிய நண்பர்கள் மன்னிக்கவும், உங்கள் மத நூல்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.) வானில் இருந்து யானை மீது வந்தார் என்ற போது சிறுவயதில் ஆச்சரியமாக கற்பனை செய்து பார்த்த நாம், அறிவு வயது வந்ததும் அதை முட்டாள்தனம் வெறும் கற்பனை என சொல்லி நிஜமான முட்டாள்கள் ஆகிவிட்டோம்!
அறிவுவயதை எட்டிய போது சிந்திக்காமல், “நவீன-லொஜிக்” படி பார்த்த நாம்.. தற்போது சிந்திக்கலாம்…

நவீன பறக்கும் சாதனங்களின் பெயர்களை பார்த்தோமானால்… “புனிதமானது” , “பயணி”, ” ட்ராக்கன்” என்ற வகையில் பல விமானங்களும் செய்மதிகளும் இருக்கின்றன. “யானை” மீது வந்தார் என்பது ஏன்பறக்கும் சாதனம் ஒன்றின் தனிப் பெயராக இருக்க கூடாது? அல்லது அந்த பறக்கும் சாதனத்தின் வலிமையை குறிப்பதற்கு யானை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பிற்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் முற்றாக அழிந்துபோன ஒரு வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் அமைப்புக்கள் “அந்த அந்த காலத்தில்” நடை முறையில் இருந்த விடையங்களுடன் இணைந்து திரிவடைந்து இன்றைய “கட்டுக்கதைகள்” நிலையை எய்தி இருக்கலாம்.

சரி, 6000 வருடங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்திய விமானங்கள் மற்றும் அவற்றின் அமைப்புக்களை “விமான சாஸ்திர” எப்படி விபரிக்கின்றது என்பதை கீழ்வரும் புகைப்படங்கள் மூலம் பார்த்து அறிந்துகொள்ளுங்கள். ( பெரியதாக பார்வையிட படங்களை சொடுகவும்.)

இங்கு நவீன விமானங்கள், ஏவுகணைகள், ரொக்கெட்டுக்களின் அமைப்புக்கள் பற்றி கச்சியதமாக கூறப்பட்டுள்ளது! ஒரு ரொக்கெட்டை புவியீர்ப்பு எல்லையத்தாண்டி விண்ணிற்கு அனுப்ப சக்தியை எவ்வாறு உருவாக்கவேண்டும் என்பது கூட தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி அதிவேக விசையுடன் விண்ணை அடையும் ரொக்கெட்டில் பயணிக்கும் பயணி எவ்வாறான உடைகளை அணியவேண்டும், விமானத்தில் எப்படி தாக்குதல் சாதனங்களை பொருத்தவேண்டும் என்பதெல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளதாம். ( புராதன ரொக்கெட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் நவீனமாக ஒரு ரொக்கெட்டை உருவாக்க ஜேர்மனிய விஞ்ஞானிகள் முயன்றுகொண்டிருக்கின்றார்கள். – அந்த தொழில் நுட்பத்திற்கு சொந்தக்காரர்களான நாம் ???????????????? )

இப்போது கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள்…

நாம் கட்டுக்கதைகளாக கருதிக்கொண்டிருக்கும் புராதன இதிகாசங்களில் வரும் கதைகளில் காட்சியமைப்புக்கள்.
இவை ஏன் உண்மையாக இருக்க கூடாது? நவீன உலகில் நடைபெறும் போர்களுக்கு ஒத்ததாகத்தானே இருக்கின்றது…
( பயம்,பக்தி போன்ற காரணங்களுக்காகவும் இனம் என்ற காரணத்திற்காகவும் கடவுள், அசுரர்கள், தேவர்கள் என காட்டப்பட்டதன் விளைவுகள் தான் இன்று நம் வரலாறு நமக்கே ஒரு கேலிப்பொருளாக இருக்க காரணம். )

இப்போது நாம், விமானம், ஏவுகணை, செய்மதி, வானூர்தி போன்றவற்றை தயார்த்துள்ளோம். பறக்கும் தட்டு?
நம் அறிவிற்கு இதுவரை எட்டாத புதிர். ஆனால், விமான சாஸ்திரவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வகை விமானங்கள், இன்று “பறக்கும் தட்டை பார்த்தோம்” என்று கூறுபவர்கள் அடையலாங்காட்டும் உருவங்களுடன் ஒத்துப்போகின்றன!
அப்படியானால், “பறக்கும் தட்டு”க்கள் நாமே உருவாக்கியதா? இப்பகுதியை ஏலியன்ஸ் – மீழ் தொடரில் பார்க்கலாம்.

அறிந்ததும் மறந்ததும் பகுதியில் இன்று புதிதாக எதையும் பார்க்கவில்லை. அடுத்த பதிவில் வித்தியாசமான ஒரு மர்மத்தை பார்ப்போம்.

“நாம் முட்டாள்கள்” என்று நினைக்கும் தமிழ் நண்பர்களுடன் இப்பதிவை பகிருங்கள். இராமாயணம், மகாபாரதம் தமிழா என்ற சந்தேகம் உள்ளவர்கள் “லெமூரியா” பதிவை பாருங்கள். :)

 

(5929)

9 thoughts on “நாம் மறந்த நம் வரலாறு : விமானங்களும் நாமும்! (2of2)”

 1. ayyapparaju says:

  Hindu religion s an Ancient religion…. Atharku peragu vanthathu than matra Religions……. Etho enaku thrijatha solra…

 2. Gnanavelselvam says:

  ancient nuclear bomb it is used in Mahabharata and also Ramayana the nuclear weapon name is Brahmastra if you want know more about it use blow link
  https://m.youtube.com/watch?v=JBz-h38om2U

 3. Pushpa says:

  I think your Malyali right…?….thats y u r killing tamil..eniway information is wealth

 4. tharik ziyad says:

  anbare nan oru muslim engal quranilum ippadi patta sila adayalangal kurikkappattu ullana nabi muhammadh awarhal ealu vangalkku appal sendradhaha kura padu hindradhu awar payaniththa vimanam (buraq) ena alaikka paduhindradhu.

 5. Lijoe Jason says:

  you had asked that you had no choic in writing about aeroplane in christian and muslim. as I am a christian I give two links of two websites that talk about aircraft.
  http://biblefocus.net/notes/events/as-birds-flying-deliver-Jerusalem.html
  http://www.keyway.ca/htm2002/aircraft.htm

  1. Prabu says:

   Tnx 4ur use-full links :)

  2. m.maharajan says:

   கிருத்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம் இவ்விரண்டும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மதம் இந்து மதம் . எனவே தாங்கள் கூறிய கூற்று தவறு. பிழை இருந்தால் மன்னிக்கவும்

   1. Prabu says:

    அதே கருத்துப்படத்தானே இந்த ஆக்கமுள்ளது. இந்து புராணங்களை தமிழர் வரலாறாக காட்டியுள்ளேன்…

 6. அறிந்தேன்… விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்… நன்றி…

Leave a Reply

Top