4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் (theory or relativity) – ஏலியன்ஸ் 01

அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விடையம் “ஏலியன்ஸ் ‘aliens) ” எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும். அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு. ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப்பார்த்தாக வேண்டும்.

பரிமாணம்(dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் “தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity) ” தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…

தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது. அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே. (இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)

சினிமாதுறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.

இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்( இருக்கும் )…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.

சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி றீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்….

காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது. ( எழுத தொடங்கிட்டன் இப்பதான் விளங்குது… ) இயன்றவரை விளக்குகிறேன். ( தெளிவாக விளக்க தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டம் மூலம் விளக்கவும். பிளீஸ்…)

ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.
நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது. நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது. எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது.

இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…

அதாவது…

ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது. அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது. ( இதை தான் நமது கவிஞர்களும் திரைப்பட பாடல்களில் அடிக்கடி பயன்படுத்துவார்கள்… உன்னை காணாத நொடி யுகம் என்றும்… கண்டா யுகம் நொடி என்றும் ஓவர் பில்டப் கொடுப்பாங்க…)
( இதற்குமேல் என்னால் விளக்க முடியவில்லை… :( )

சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய (???) வகையில் சொல்ல ரைபண்ணுறன்.

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி
—————————————————————————————–

—————————————————————————————–
அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும். அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.
இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.
(இதே தியரியில் மறை வேகம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது என்ன வென்றே விளங்கல… விளங்கினவங்க சொல்லித்தாங்க…)
ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது. ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும். அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.
2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள். ( ஸபா… நினைக்கவே கண்னக்கட்டுது… என்னன்டு தான் அந்த மனுசன் ஜோசிச்சுதோ…)
ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… ( 3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…
2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்… அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது.
10 வருடகாலப்பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.

நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்… சராசரிவேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல…
சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).
ஆகவே… எமது வாழ்னாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….

( பேந்து ஏன் இதை எழுதுராய்… என சிலர் கேட்பார்கள்… ஹி… ஹீ…. நான் இந்த தியரியை வைத்து தான் எல்லாத்தையும் சொல்ல ரைபண்ண போறன். அதுக்கு தான் இதை சொன்னன். ஆனால், எழுதுறதுல ஒரு இடத்துலயும் பொய் என்றோ… லொஜிக் இல்லாமல் இருக்கு என்றோ நீங்கள் நினைக்கும்படி எழுத மாட்டன்… )

சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை….

அதால… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் (???)…
இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளைதனமானது.
இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள எமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க (???) பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.

ஆகவே… எம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்…

எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம். ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது… வேற்று கிரக வாசிகளும் எம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும். அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே!!!

எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…

ஆனால்…

நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா??? அல்லது…

By : Chandran Pirabu

(8676)

15 thoughts on “4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் (theory or relativity) – ஏலியன்ஸ் 01”

 1. saisuthan says:

  this type articals(relativity theory, quantum mechanics) are very rare. tell some websites to search about thease in tamil please.

 2. G.Balakrishnan says:

  Ennudaya arivin padi kalathil pinnoakki selvathu enbathu iyalathu aanal munnokki sellalaam. Aanal munnokki sendra piragu thirumba pinnokki varamdiyathu. Munnokki selvathu enbathu nammai freeze aakki kaalam selvathai naam ariyanilail 1000 varudam thandiya piraku nammai eluputhal pondrathagum.

 3. Indhuraj says:

  காலம்,நிறம்,இடம்….,இவை மூன்றும் ஒரு முறை ஒன்று சேர்ந்தால் மறு முறை அதை மாற்றி அமைக்க முடியாது… ..

  ஆதலால்,காலத்தை மாற்றி அமைத்தோ,என்னதான் வேகத்தை கூட்டினாலும்,இடம் மாறுபடாது.,

  எனவே,மிகையில்லா வேகத்தில் செல்லும் இயந்திரம் மூலம் இடம் விட்டு இடம் செல்லலாமே தவிர,அவ்விடத்தையே மாற்றி அமைக்க இயலாது….அதே இடத்தை அதே நேரத்தில் …பார்க்கவும் செல்லவும் இயலாது…

 4. Cletus Xavier says:

  எனக்கு தெரிந்த வகையில் திணிவுள்ள எந்த பொருளும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது; அவ்வாறே அடைவதாய் இருந்தாலும் அபிரமித்தமான சக்தி தேவைப்படும் (E=mc^2)

  1. Cletus Xavier says:

   ஆகவே ஒளியின் வேகத்தை மிஞ்சி பயணித்து, இறந்த காலத்தை அடைவது என்பது நடக்காத ஒன்று

 5. Rajesh says:

  I have read about a thing.. i try to explain that as an example of past .. present and future…. when we look into sky and we may see an empty space because there is no star in that direction.. but if a star born by big bang, we still cant able to sense that till its light reach earth( it may take millions of years depends on its distance located from earth). so what we have seen may be past tense of star and even if star die we can still see the light of that for millions of years ( how can we see a thing actually not present there).. just imagine friends..

 6. veeraiguhan says:

  நேரம் என்பது விண்ணில் கிடையாது. அது போல இறந்த காலதினுள்ளும் செல்ல இயலாது.

  1. Prabu says:

   விண்ணில் நிரூபனமான விடையம் இந்த நேர மாற்றம். :)

Leave a Reply

Top