திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) – Part 2

ஒரு காலத்தில் வடக்கு மத்திய நேபாலத்தின் ராஜ்ஜிய பகுதியாக இருந்த முஸ்டங் இன்று அகழ்வாராய்சியாளர்களுக்கு பல மர்மங்களை உள்ளடக்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கின் ஊடாக அவர்களின் பயணம் தொடர்கிறது.

மலைப்பகுதியை நெருங்க நெருங்க ஏராளமான வான் குகைகள் (Sky Gaves) தென்படுகின்றன இந்த பகுதியில், பசியால் வறுந்தி செல்பவனுக்கு பலகாரங்கள் கிடைத்தது போல இது அவர்களுக்களின் அறிவு பசிக்கு (அகழ்வாராய்சி மூளைக்கு) பல தீனிகளை தரப் போகிற ஆவலில் அந்த மணற் பாங்கான பாதையில் பயணம் மேற்கொள்கிறார்கள்

பல ஆசிய ஆறுகளின் துவக்கமாக இருக்கும் திபெத்திய பகுதியில் ஆறுகள் நிலங்களை பல கூறுகளாக அறுத்து போட்டிருக்கின்றன.

1990-ன் மத்தியில் கூலெளன் (Cologne -மேற்கு ஜெர்மனி) பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்சி மேற்கொண்ட போது குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல டசன் சடலங்கள் கண்டறிந்தார்கள் எலும்புக்கூடுகளாக.

சடலங்கள் எல்லாம் மர கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தன. அவைகளுக்கு தாமிர (செப்பு) நகைகளும் நீள் வடிவ வண்ண கண்ணாடி வடிவ பாசிகளும் அணிவிக்கப்படிருந்தன. செராமிக் பொருள்களும் கிடைத்தன.
இவைகள் எல்லாம் உள்ளூர் தயாரிப்புகள் அல்ல. இந்த பொருட்கள் முஸ்டங்கின் செழிப்பை பற்றி, வாணிக மையமாக திகழ்ந்திருந்த வரலாற்றை பறைசாற்றுகின்றன .

பீட் ஏதென்ஸ் முதன் முதலில் இந்த குகைகளைப் பற்றி அறிந்து கொண்டது 1981 ல் எவரெஸ்டிற்கு டிரக்கிங் வந்த போது, ரொம்ப பிடித்து போய் அதன் பிறகு 7 முறைகள் சென்று வந்துள்ளார். அப்போதே ” மிகச்சிறந்த ஆய்வுகளம் இதுதான்” என முடிவு செய்து விட்டேன் என்று சிலாகிக்கிறார்.

 

 

“மேத் ஸீகல் பழைய கையெழுத்து பிரதிகளை ஆய்வு செய்கிறார்”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பல அறைகளை கொண்ட வசிப்பிட குகையில் – டேட் ஹீசர் “இதில் இருந்த பொருட்கள் கொல்லையடிக்கப் பட்டிருக்கலாம் என்கிறார்”

அப்படி ஒரு தேடலில் கண்டுபிடித்தது தான் 26 அடி நீளமுள்ள சுவர் சித்திரங்கள். அதில் 42 யோகிகள் படங்கள் பெளத்த வரலாற்றை சித்தரிப்பவையாக இருக்கலாம். 600 ஆண்டுகளுக்கு முன் பழமையானவை. மேலும் 8000 பக்கங்கள் கொண்ட கையெழுத்து புத்தகங்கள். அனைத்தும் தியான சம்பந்தமான, தத்துவ விசாரணைகள்.

 

 

 

 

 

 

 

 

“புத்தர்”

“சித்தார்தா கவுதமா (புத்தர்) (623 BCE) ல் பிறந்த இடம் லும்பினி இது நேபாலில் உள்ளது”

இந்த ஓவியங்களை பார்த்தால் அஜந்தா-எல்லோரா குகை ஓவியங்கள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

 

 

இந்த குகைகளில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திறனாய்வு செய்தால் குகைகளில் முதலில் வசித்தவர்கள் யார் ? இம் மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? எவற்றை நம்பினார்கள் ? போன்ற மறைந்திருக்கும் பல மர்மங்கள் துலங்கும் என்கிறார்கள் இக்குழுவினர்.

சில குகைகள் வெற்று குகைகளாக இருந்தன. சில வாழ்விடங்களாகவும், குளிரடுப்புகளோடு வசிக்குமிடங்களாகவும் இருந்தன. தானியக்கிடங்குகளாகவும் இருந்திருக்கலாம். புத்தர் காலத்திற்கு முற்பட்டவையாகவும் இருக்கின்றன. திருடர்கள் கொள்ளையடிக்காமல் இருக்க பழம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம். முக்கியமாக முன்னோர்களின் எழும்புகளை பாதுகாத்து வந்துள்ளனர். இப்படி ஆலெண்டர்ஃபெர் சில குகைகளை பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார்.

திபெத்தியர் முன்னோர்களின் எலும்புகளை புனிதமாக கருதுகின்றனர்.

ஸாம்ட்ஜோங்க் (samdzong) என்ற சிறு கிராமப்பகுதியிலும் ( இது திபெத்தின் தெற்கில் சீன எல்லை பகுதியில் உள்ளது) நிறைய குகைகள் காணப்பட்டன. 2010 ல் அலெண்டர்ஃபரும், ஏதென்சும் ஆய்வு மேற்கொண்ட பொழுது மயான குகைகளை கண்டனர். 2011ல் இவைகளை மீண்டும் ஆய்வு செய்தார்கள். குகைகளின் உட் சுவர்களில் மெழுகு பூச்சப்பட்டது போல் இருந்தன வெளிச்சத்தில் ஒவ்வொரு நிறங்களில் எதிரொளித்தது சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறங்களில்.

குகைகள் குழாய் வடிவில் செங்குத்தான சரிவான பாதைகள் பல இணைத்திருந்தன. இந்த பாதைகள் மிக ஆபத்தானவையாக இருந்ததாக குறிப்பிடுகிறார். (முற்பகுதியில் குறிப்பிட்ட விபத்து ஏற்படுத்திய இடங்கள் )

இவர்கள் ஆராய்ந்த சில குகைகள் நிலச்சரிவினால் அழிந்துள்ளன.
துண்டான குகை பகுதிகளே நுழைவாயிலாக நமக்கு வெளியே தெரிகின்றன (முதல் பகுதியில் உள்ள படங்களை பார்க்கவும்) அப்படியானால் முழு குகை பகுதியின் நுழைவாயில் மேலே சமதளப்பகுதியின் கீழாக குழாய்வடிவ பாதை கீழ் நோக்கி குகைகளுக்கு செல்கிறது. அடுத்தடுத்த குகைகளை இணைந்திருந்தன என்று கண்டுபிடித்தனர்.

“முன்பிருந்த குகை(Tomp 5) தோற்றங்கள் கிராபிக்ஸ் படங்கள் விளக்குகின்றன”

மேலும் இந்த படங்களில் இருந்து குகையின் அமைவிடங்கள் மற்றும் பல வித தோற்றங்களை புரிந்து கொள்ளமுடியும்.

சில குகைகள் பல தளங்கள் கொண்டவை. குடியிருப்புகளாகவும், பெளத்த சமய பயிற்றுவிக்கும் மண்டபங்களாகவும் இருந்திருக்கலாம்.

 

 

 

அவர்களின் ஈம சடங்கு முறை, மயான குகைகள் (tomp 5)அவற்றில் கிடைத்த எழும்புக்கூடு, மம்மீஸ் மற்றும் பல சுவாரசியமான விவரங்கள் படங்களுடன் அடுத்த இறுதிப் பகுதியில் ;

by  kalakumaran

(2758)

2 thoughts on “திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) – Part 2”

  1. philip says:

    நன்றி உங்கள் ஆய்விற்கும்,பெறுமதி மிக்க தகவலுக்கும்….

  2. ஸ்ரீவிஜி says:

    சுவாரிஸ்யம்..தொடருங்கள்

Leave a Reply

Top