சிறுவனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த பூனை!

பிரித்தானியாவைச்சேர்ந்த லோர்கன் டிலோன் ( Lorcan Dillon) 6-7 வயது சிறுவன், தனது பெற்றோரிடம் கடந்த 7 வருடங்களாக எந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இன்று அவனது நண்பனின் உதவியுடன் புது மனிதனாக மாறிவருகின்றான்.

டிலோன், ஒரு மனப்பதட்ட / மனக்கலக்க சீர்குலைவு (anxiety disorder) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன். பாடசாலையிலும் சரி வீட்டிலும் சரி ஏனையவர்களுடன் உரையாடுவதற்கு சிரமப்படுவான். இதனால் கல்வியிலும் பிந்தங்கிய நிலையிலேயே இருந்தான்.

கடந்த 2 வருடங்களுக்கு முதல் அவனின் தாய், ஜெசி என்ற பூனைக்குட்டியை அவனிற்கு பரிசாக கொடுத்திருந்தார்.
பூனைக்குட்டியுடன் விளையாட ஆரம்பித்த டிலோனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
பிறந்ததில் இருந்து பெற்றோரைப்பார்த்து “i love you mom / dad” என்ற வார்த்தையை கூட உபயோகிக்காத டிலோன் ‘I love you Jessi-Cat’ என்று சொல்லத்தொடங்கினான்… கோபம், அழுகை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாத அவன் பூனையிடம் உணர்வுகளை வெளிப்படுத்தத்தொடங்கினான்!

தற்போது கல்வி நிலையிலும் மேம்பட்டிருக்கும் அந்தச்சிறுவனை “விசேட மாணவன் (கவணிக்கப்பட வேண்டிய மாணவன்)” என்ற நிலையில் இருந்து பாடசாலை நிர்வாகம் விலக்கியுள்ளது. :)

விலங்குகளின் அன்பு ஒரு மனிதனின் மன நிலையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்! நம்மை சுற்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த உதவ வேண்டும்…

செல்லப்பிராணிகளின் அருமை தெரிந்தோர் பகிருங்கள் :)

(1562)

3 thoughts on “சிறுவனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த பூனை!”

  1. பாடசாலை விலக்கியுள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது…

    /// விலங்குகளின் அன்பு ஒரு மனிதனின் மன நிலையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்! ///

    நன்று… ஆனால் அந்த பாடசாலையில் உள்ளவர்களின் மன நிலை…?

    /// செல்லப்பிராணிகளின் அருமை தெரிந்தோர் பகிருங்கள் ///

    இதை முதலில் நண்பர்களிடம் பகிர்கிறேன்… நன்றி…

    1. Prabu says:

      கருத்தை சரியாக சொல்லவில்லை… மன்னிக்கவும்…
      “விசேட மாணவன்” என்பது வலது குறைந்தவர்களை குறிக்கும். அந்த மாணவன் வலதுகுறைந்தவன் இல்லை.. என்று பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. :)

      நன்றி :)

    2. Deepika Rooby says:

      100% unmai idhai naa en vaazhkaiyil unarndirukkirean idhai poal padikumbodhu kanneer varuginradhu inru idhai padithuvittu aludhuvitten en poonai rooby in ninaivu vanduvittadhu aval irandhu 4 varudangal aagi vittadhu inamum aval irandha anda tharunam en kan munnea nirkkiradhu

Leave a Reply

Top