மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு

Mahatma Gandhi

1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவம‌ற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்… பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீக‌மாக போராடுவதுதான் உண்மையான வீர‌ம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947-ம் வருடம். காந்தியின் இந்த‌விடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.

நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன்

(5242)

4 thoughts on “மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு”

  1. ananthasegaram rajasegaram says:

    maha.g. was in india , Year 1941 world war 2, Ganthi and Neru send 140.000. Indian Tropes to Europa to fight agint Hidler NAZI Germen, But Ganthi And Neru Allways Thing they are Ariyan and others are thalith People. Why Ganthi and Neru want to kill Ariyan German NAZI ?. That is Politicial.
    Ganthi;s tell about his father that he had nathing done to his Family. that is true. He think that Ariyan must rull india, not others, Rajajag was stadied in England and he was well Educated, When British want give India back to Indians They thought to give Rajajag-the first governer to Tamil Nadu,
    But Ganthi told British that you must give to Neru, becouse he is An Ariyan, Rajajagi was a Tamil Bahrmein , that way he lost the post, What happen to Ambathker , well educated Person he.What Ganthi done to Ambathker? If Ganthi and Neru can give Two Countries , Parkistan and Bangaldaths, Why canot give for Sri lankan Tamil a part of Ceylon ? Ariyan dont want to fight with Musielems man.
    only Tamil must kill. To fullish Ariyan minds,when the People of india must know there own true Story then only know their life,what happen to Subas ?He is not Ariyan.

  2. நல்லதொரு சிறப்பான பகிர்வு… அனைவரும் அறிந்து கொள்ள பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…

Leave a Reply

Top