83 வயது எஜமானியை காப்பாற்றிய 12 வயது நாய்! : “Babu” Animal Hero

இங்கு படத்தில் நீங்கள் பார்ப்பது 12 வயது நிரம்பிய “பாபு” என்ற நாயையும் அதன் 83 வயது நிரம்பிய உரிமையாளரையும்.
ஜப்பானில் செய்திகளில் பிரசித்தமாக பேசப்பட்ட இந்த நாய் அப்படி என்னதான் செய்தது? இன்று பார்ப்போம்.

2011 பங்குனி (மார்ச்) மாதம் ஜப்பானில் நடைபெற்ற நில நடுக்கம் பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க கூடும்.
அன்றைய தினம் காலையில் தனது 83 வயது எஜமானியுடன் நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றது. ஆனால், சாதாரணமாக பாபு நடைப்பயிற்சியின் போது எந்த குழறுபடியும் செய்வதில்லை. அன்றைய தினம் மட்டும் எஜமானியை இழுத்துக்கொண்டு வேறு பாதையால் மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அந்த பெண்ணும் தனது செல்லப்பிராணியின் வழி- நடத்தலை மதித்து சென்றுள்ளார். மலைப்பாங்கன இடத்தை அடைந்த சில நிமிடங்களில் சுனாமி-பேரலை தாக்கியுள்ளது. அவர்கள் வழமையாக நடக்கும் இடத்தில் நடந்திருந்தால் சுனாமியில் சிக்கி உயிரிழந்திருப்பார்கள்! ஆம், அவர்கள் நடைப்பயிற்சி செய்யும் இடம் உள்ளடங்களாக சுமார் 200 மீட்டர் பகுதியை சுனாமி தரைமட்டமாக்கியிருந்தது!

இப்படி பல சம்பவங்களில் மிருகங்கள் / குறிப்பாக நாய்கள் மனிதரை காப்பாற்றியுள்ளது. உங்களிடமும் இப்படியான சம்பவங்கள் இருந்தால் உங்கள் பெயருடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

(1219)

Leave a Reply

Top