தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)

Part 01 -07
தியரி ஒஃப் ரிலேட்டிவிடி படி…

நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்…

உதாரணத்துக்கு…
கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்…
எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )
அப்படி என்றால்… 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்… வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்… ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்… 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது… வெளியாளுக்கு 31 வயது).
அதாவது… அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்…
அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே… நமது எதிர்காலத்துக்குரியது…

( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது… எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்… அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்… நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்….
ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்… அதுவும் சரிதானே???? :) )
—————————————————————————————
சரி…
அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி…

அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்… ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்…
உதாரணமாக…
நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… ஒரு 10 ஆண்டுகளில்…
பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்… வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள்.

நாம் வேகத்தை எவ்வ‌ளவு கூட்டினாலும்… எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது… ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்…
ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமாம்…
இந்த பின்னோக்கி போகும் வேகம்… இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்…

( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்… என்பது சரியா இருக்கலாம்… ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை… காரணம்… வேகமாக காட்சிகள் மாறும்… காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது… நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்… ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்… :) )

இதெல்லாம் சரி… நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்… இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்… நம்ம தாத்தா… கொள்ளுத்தாத்தா… அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்…
ஆனால்…
ஜோசித்து பாருங்கள்… இது சாத்தியமானால்… பல குழப்பங்கள் ஏற்படும்…

இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)… பதிவு நீள்வதாலும்… நிறித்திடுறேன்…
—————————————————————————————
அப்படி வேகத்தை அடைந்தால்… என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்…
இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்… விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்… அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்… விளங்காதவர்கள்… அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்… :)

(6298)

12 thoughts on “தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் ஏலியன்ஸ் நோட்டமும்! : Aliens 08 (Tamil Article)”

 1. Cletus Xavier says:

  நான் அறிந்த அளவில்; ஒரு பொருள் கொண்டிருக்கும் மொத்த சக்தியின் அளவு E=mC^2 இனால் தரப்படும், அதாவது அந்த பொருள் தன்னிடமுள்ள மொத்த சக்தியையும் பயன்படுத்தினாலும் அதனால் ஒளியின் வேகத்தை அடைய மட்டுமே முடியும், ஒளியின் வேகத்தை தாண்டி ஆர்முடுக அதனிடம் மேலதிக சக்தி காணப்படாது, ஒளியின் வேகத்தை அடையும் பொது அதன் திணிவு m=0 ஆவதால் மேலதிகமாக பயன்படுத்தக்கூடிய சக்தி காணப்படாது (திணிவும் சக்தியும் புறமாற்றப்படக்கூடியது என அறிவீர்கள்), ஆகவே திணிவுள்ள ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைவதே நடக்காத ஒன்று, ஆகவே ஒளியின் வேகத்தை மிஞ்சி இறந்த காலத்திற்கு செல்வது நடக்காத ஒன்று

 2. msp says:

  hi,
  nan light speedkku equala traval agura oru kandupidippa kandu pidichchi irukke,but antha vandila irukkirau disk invisible aguthu,ana enakku antha vandi fulla invisible aganum nan enna pannurath hlp me pls

 3. vignesh kumar says:

  Enaku oru sandhegam. Oli vegathil naam sellum podhu ethir kaalathuko alladhu erandha kaalathuko sella mudium endru solgireergal aanal oli vegathil engey selveergal. Ingiruthu oli vegathil ningal nilavirko matra kregathirko sendral kaalathai kuraikalam viraivaga ilakkai adayalam .naam oli vegathilvegathil sendraal veliye irupavargal methuvaagavey seyal paduvaargal enabadhu etru kolalam aanaal naam ilakku enavo angudhaney vegama sella mudium epadi ethir kaalam matrum irandha kaalathirku seluveergal.??????????

  Vignesh

  1. Prabu says:

   ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது, காலம் மட்டுமே கடக்கும் தூரம் கடப்பதில்லை. (ஐன்ஸ்டைன் விதிப்படி)
   சரியாக ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது. எமக்கு கால நகர்வு 0 ஆக அமையும்.
   ஒளி வேகத்தை தாண்டி பயணிக்கும் போது, கால நகர்வு – ஆக அமையும்.
   ஒளி வேகத்தை அண்டி பயணிக்கும் போது, கால நகர்வு 0. ஆக அமையும்.
   விரிவான விளக்கம் பின்னர் இடுகிறேன்.

   1. Prakash says:

    I accept that about time travel…

    Einstean nin kootrupadi(e=mc^2) — Oliyin vegathai minjuvadhu edhuvum illai!!!

    Adhavadhu ” oli”. Vinadiku 3,00,000km vegathil payanikiradhu endru koorukirargal..

    Sir issac newton kootrupadi— “vinveliyil minugindra oru ‘porulil’ irundhu ‘oli’ vinadiku 190000mile vegathil payanikiradhu”!

    So my question is —oli enbadhu oru thugala(particle) or allaiya(waves)?

    Apadi newtonin koitru padi ‘oli’ thugal endral
    ..andha thugalgal edhanal anadhu?

    (*Oru “anu” thugalil Newtron electron and proton agiya thugalgal ulladhu
    *protan il gods particle yendra thugal kuda uladhu)

    Ivatrai pola oli thugalgal edhan adipadaiyinal anadhu??

    Apadi illa endral andha oli thugalai evalavu vegathil iyakuvadhu edhu???
    What is the hidden matter to operate light particles??

    Plz reply me

 4. Ranjith kumar says:

  Ungalathu theory of relativity’um aliens pattriya Nairobi pathivedugalayum padikka pera inaippugalai Tharani mudiyuma!

  1. Prabu says:

   வணக்கம்,
   ஆங்கிலத்தில் : Ancient aliens என youtube இல் தேடவும் history channel இன் முழுத்தொகுப்பை காணலாம். ( சில நாடுகளில் காண முடியாது, வேறு வளிகளுண்டு)

   தமிழில் எனக்குத்தெரிந்து : http://www.nirajdavid.com/science-view/ நிருபர் நிராஜ் டேவிட் எழுதும் தொடர்
   அதைவிட வெங்காயம் எனும் பதிவரும் எழுதியிருந்தார்.

   நன்றி.

 5. Hi Rooban,
  ithatku irandu vithamana pathil thaan irukirathu.. irandumee nichayamatrathu (nirupanamaakavillai). irandaavathu theory padi illai enpathu thaan pathil.
  Frame, Frame aaka emathu vaalkai amainthirukum. oru frame il neengal santhithaal inoru frame ilum neengal santhipeerkal enpathu nichayam illai.
  kuripida frame il maddum ungalai neengal santhithu kolveerkal ena ninaikireen.

 6. nan ethir kalathirku sendru ethir kalathil ulla ennidam pesivittu varuhirean endru vaithukolvom . . . . , pirahu antha kuripita kalathil nan valum pothu ennidam nan vanthu pesuvena ??

 7. palanikumar says:

  i simply ask to you…you are in 2013 you want to go to 2010.. aim of your travel is “meet you at 2010″…if time travel is possible to backward….at 2010 you are doubled . ..how its possible…

  1. Prabu says:

   அது சாத்தியமே… ஆனால், 2013 இல் இருந்து போகும் நாம் 2010 ” நம்மை” பார்க்கப்போவதேயில்லை!
   ( அப்படி பார்த்திருந்தால் 2010 இற்கு பின்னர் இப்போது இருக்கும் எமது நிலை மாறி இருக்கும்!)

 8. வியப்பாக உள்ளது.

Leave a Reply

Top