மனிதன் உருமாற்றத்தின் விடுபட்ட தொடர்பு [ ஸெடிபா ]

“ஆதி மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்” இது தெரிந்தது தானே டார்வின் கண்டுபிடித்து சொல்லிவிட்டாரே இதிலென்ன என்ற கேள்விகள் மனத்தில் எழும். உண்மையில் இன்று வரை டார்வின் கோட்பாட்டை நீரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அகழ்வாராய்சி -தொல்லியல் மற்றும் மனித பூர்வீகம் பற்றி ஆய்வு செய்பவர்கள். இது ஒரு கடினமான பணி.

சமீபத்திய ஆய்வுகளில் சிறப்பான ஒரு பாஸில் கண்டுபிடிப்பு
ஹோமினிட் (Hominid) [ மனித ரூபம்] தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.


மேத்யூ எனும் 9 வயது சிறுவன் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்கின் வடமேற்கு பகுதியில் தனது வளர்ப்பு நாயுடன் சென்று கொண்டிருந்த ஒரு வெயில் கால பொழுதில் கண்ணில் பட்ட ஒரு பாஸில் ஸெடிபா . இது அவனுக்கு ஒரு வித்தியாசமான பாறை என்று மட்டுமே தெரிந்தது.பின்னர் அவன் தந்தைக்கு இது தெரிய வர, இது அபூர்வமான பாறைப்படிவம் என்பது உறுதியாயிற்று. அவருடைய நண்பர் பெர்ஜெர் மனித பரிணாம வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஆராய்சியாளர் [ஜோஹன்ஸ்பர்க் பல்கலைகழகம் ] க்கு தெரியவர அந்த இடம் பர பரப்பானது… இது நடந்தது 2008ல்.

அந்த இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல இளவயது ஆதி மனிதனின் எழும்புக்கூட்டு படிமங்கள் சிதையாமல் ஒரே இடத்தில் கிடைத்தன. இதில் ஒரு பெண்ணின் எழும்பு படிமங்களும் கிடைத்தன. இந்த படிமங்கள் அஸ்ட்ரலோபிதேஹஸ் – ஸெடிபா ஹோமினிட் என குறிப்பிடப்படுகிறது.

“ஸெடிபா ” என்றால் “நல்ல” இது ஷோதோ மொழி. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் 11 மொழிகளில் ஒன்று.

பூர்விக ஆதி மனித பரிணாம வளர்ச்சி[நியாண்டர்தால்,ஹோமோ எரக்டஸ்..] பல கால கட்டங்களை கொண்டது.
அது மட்டுமல்ல அவற்றின் தோற்றம் வளர்ச்சி, ஒன்றிலிருந்து ஒன்று.
அவைகளின் இடையே யான ஒப்புமை. உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி,ஜீன் வளர்ச்சி இப்படி. அதுமட்டுமல்ல அவற்றிடையே கலப்பு, தொடர்புகள், கண்டம் விட்டு கண்டம் சென்றவைகள். எது முதலில் எது பின்..இப்படி இதன் வரலாறு நீண்டு கொண்டே செல்லும்.

இங்கு மூன்று பரிணாம வகைகளை காணலாம்.

அஸ்ட்ரலோபிதேஹஸ் – லுசி 3.2 மில்லியன் வருடங்களுக்கு முன்

அஸ்ட்ரலோபிதேஹஸ் – ஸெடிபா – 1.98 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் [ தற்போதைய கண்டுபிடிப்பு]

ஹோமோ எரக்டஸ் – 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்

ஹோமோ எரக்டஸ் நாகரீக மனிதனின் மூதாதையர் இதன் படிமங்கள் ஆப்பிரிக்கா முதல் இந்தோனேஷியா வரை கிடைத்திருக்கிறது.

இந்த ஸெடிபா கண்டுபிடிப்பு நடுவில் விட்டுப்போன 1.7 மில்லியன் ஆண்டுகால ஆதிமனிதனின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதற்கு விடையாகும்.

இந்த எழும்பு கூட்டின் படிமம் ஏன் மனித குரங்காக இருக்ககூடாதா ? என்ற கேள்விக்கு சுலபமான பதில் இதன் கை மற்றும் மணிக்கட்டு பகுதிகள் , பெருவிரல் வடிவம், மற்றும் இடுப்பு எழுப்பு பகுதி, முக்கியமாக மண்டை ஓட்டு பகுதி இவைகளை ஆய்வு செய்து இது சிம்பன்ஸி இல்லை என்று நிரூபிக்கிறார்கள்.

ஷெடிபா – நான்கு அடி உயரம் இளவயது சிறிய மூளை மனித குரங்கு போன்ற நீளமான கைகள் கொண்டது. நிமிர்ந்த நடை, வலுவான கைகள் ஆயுதங்களை உபயோகித்திருக்கலாம். [மேல் படத்தில் நடுவில் உள்ளது]

மூளைப்படிமங்களை[ஜெனிடிக் ] இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதன் மண்டை ஓடு மற்றும் அதிலிருந்து உருவகப்படுத்தப்பட்ட ஆதிமனிதனின் உருவத்தை படத்தில் காணலாம்.

 

 

 

 

 

 

 

இந்த இன ஹோமினிட்ஸ் 1942 ல் ரெமான் டார்ட் என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது ஹோமினிட்ஸ் எனும் மனித ரூபம் குரங்கு நிலையில் இருந்து நின்று நடப்பது துவங்கியது (சுமார் 35 லட்சம் வருடங்களுக்கு முன்) இந்த மிருக நிலையில் செக்ஸும் இரை தேடுவதும் தான் பிரதானம்.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் பல இடங்களில் புதை பொருள் ஆய்வுகளில் பெறப்பட்ட வைகளில் இந்த ஷெடிபா தவிர பெரும்பான்மையானவை சிதையாமல் முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் முன்பு கிடைத்த படிமங்களில் மண்டைஓட்டின் கீழ்த்தாடை கிடைக்கவில்லை.

இந்த பகுதி[தென் ஆப்பிரிக்கா] “மனித வளர்ச்சியின் தொட்டில் ” என அழைக்கப்படுகிறது.

மண்டை ஓட்டை புதிய ஸ்கேனிங் முறையில் ஆய்வு செய்கிறார்கள். சாதாரண மானது C.T. ஸ்கேனிங், புதிய முறை ESRF ஸ்கேனிங் [ European Synchrotron Radiation Facility ] இதில் மிக மிகத்துல்லிய X-ரே படங்கள் கிடைக்கும்.
பழைய ஆய்வின் படி H. Erectus பூர்வீக இடம் ஆப்பிரிக்கா இங்கிருந்து மற்ற கண்டங்களுக்கு ஐரோப்பா, ஆசியா உட்பட்டு இடம்பெயர்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது.


புதிய ஆய்வின் படி, ஜார்ஜியக் குடியரசில் கிடைத்த படிமத்தின் படி பூர்வீக இடம் ஆசியா இங்கிருந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. (2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்)

 மனித மூதாதையர்கள் உருவ வளர்ச்சி பற்றி சில தகவல்கள் :

ஆஸ்ட்ரேலோ பிதிகஸ் : இதன் மூளை சிம்பன்ஸியை விட பெரியது. (அளவு 350 -650 CC) நீளமான கைகள், உறுதியான எழும்புகள் மற்றும் பெருவிரல் எலும்புகள் காலை தூக்கி நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. பெரிய கைகால் மூட்டுகள், ஒடுக்கமான தோள்கள், அகன்ற இடுப்பு.

ஹோமோ எரக்டஸ் ( H.Erectus) சிம்பன்ஸியைக் காட்டிலும் பெரிய மூளை (1100cc -1200cc) அகன்ற தோள்கள், நீளமான கால்கள் ஆனால் இதன் கைகள் ஆஸ்ட்ரேலோ பிதிகஸ் போல் அல்லாமல் உயரத்திற்கு தகுந்தார் போல் அமைந்தது, அதை காட்டிலும் நீளம் குறைவு.

ஹோமோ ஷேப்பியன்ஸ் : இதன் மூளை 1350 -1500 cc அளவு கொண்டது பாதுகாப்பான மண்டைஓடு, செங்குத்தான முன் நெற்றி, சிறிய தாடை மற்றும் பற்கள்,மெல்லிய மனித எழும்பு அமைப்பை ஒத்தது. இதற்கு நீளமான கால்கள்.

இது எல்லவற்றிற்கும் முந்தியது ஆனால் அவற்றோடு தொடர்பு படுத்த முடியாதது. ரோபஸ்ட் ஆஸ்ட்ரேலோ பிதிகஸ்க்கு முந்திய ஆதி இனம் இதன் முன் நெற்றி தலை எலும்பு சிறு கொம்பு போன்ற நீட்சி இருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

1880 ல் டுபோஸ் என்ற டச்சு அகழ்வாராய்சியாளர் இந்தோனேசிய ஜாவா பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த மனித மண்டைஓடு இது ஜாவா இனம்.

பதிவாளர் : கலாகுமரன் : இனியவை கூறல்

(2787)

Leave a Reply

Top