ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)

போன பதிவில் குறிப்பிட்ட படி ஹனுமார் ஒரு ESP மனிதர் பெரிய மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற அறிவு பூர்வமான கேள்வி எழும்.

இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்… விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது…

முன்னைய பதிவுகளை பார்வையிட… or  Part 03

டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)

1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்… கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் “எனது நண்பன் “எட்வின்” இறந்து விட்டான் என தோன்றுகிறது” எனக்கூறினான்… இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்… நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை… ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )

ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்… இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. :)

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்… அவற்றை தெளிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம் :) )

அதேவேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹனுமார் ஒரு ESP மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகழ் எய்தி இருக்க கூடும்.
——————————————————————————————
அடுத்த பதிவில் யார் சிவன்? சிவனிற்கும் ESP இற்கும் என்ன தொடர்புண்டு என்பதை அறிவியல் கண்கொண்டு பார்ப்போம். :)

– By : Chandran Pirabu –

(8081)

10 thoughts on “ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)”

 1. aneefa says:

  பதில் சொல்லுங்கள் நாத்திகர்களே…
  அறிவாளிகளே…
  இதுவா உலக அதிசயம் ?
  உலகின் புதிய ஏழு அதிசயமாக
  அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,
  1. இந்தியாவின் தாஜ்மஹால்.
  2. சீனப் பெருஞ்சுவர்.
  3. ஜோர்டானின் பெட்ரா.
  4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில்,
  மலை உச்சியில் உள்ள பிரமாண்ட
  இயேசு நாதர் சிலை.
  5. பெருவின் மச்சு பிச்சு.
  6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
  7. ரோம் நகரின் கொலோசியம்.
  நாமாகவே உருவாக்கியதும்,
  அடிக்கடி மாற்றி. கொள்கிறது தான்
  அதிசயமா?
  ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில்
  விஞ்ஞானிகள்
  5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட
  இக்கிணற்று நீரை, உலகில்
  வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த
  நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
  மெக்காவிற்கு புனித பயணம்
  செய்யும் உலகில் பல தேசங்களில்
  இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த
  கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
  எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
  இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான
  இந்த ஜம் ஜம்
  கிணற்றை பற்றி காண்போம்.
  ‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம்
  என்று அர்த்தம்.
  சென்ற நூற்றாண்டில்,
  ஒரு முறை ஜரோப்பாமருத்துவ
  ர்கள்,சுகாதாரத்திற்காக
  இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும்
  என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
  இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8
  அதி நவின ராட்சத
  பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,பகலுமாக
  15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால்
  நீரின் அளவு குறையவில்லை. மாறாக
  நீரின் மட்டம் ஒரு அங்குலம்
  உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8
  ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2
  மில்லியன் லிட்டர்
  தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
  மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர்
  உறிஞ்சப்படுகிறது.
  நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில்
  உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும்
  அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
  இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
  அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன்
  நீரை தினமும் எடுத்தும்,அப்போதும் இதன்
  அளவு குறைவதில்லை. சுவையும்
  மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான்
  மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள்
  அங்கே குழுமுகிறார்கள்.
  அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
  இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்பட
  ுகிறது.
  ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
  குறையாமல் அந்தத் தண்ணீரைத்தமது சொந்த
  ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
  குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு,
  பாலைவனத்தில்
  அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில்
  ஏரிகளோ கண்மாய்களோ குளம்
  குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில்
  இருந்து எப்படி லட்சோப லட்சம்
  மக்களுக்கு தண்ணீர்
  வழங்கப்படுகிறது
  என்பது முதலாவது அற்புதமாகும். எந்த
  ஊற்றாக இருந்தாலும் சில
  வருடங்களிலோ பல
  வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
  ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக
  வற்றாமல்
  இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
  ஜம் ஜம் கிண்று அருகே எந்த
  தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர்
  நிலையாக இருந்தாலும்
  பாசி படிந்து போவதும் கிருமிகள்
  உற்பத்தியவதும்
  இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற
  மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்ற
  ன. ஆனால் ஜம்ஜம்
  தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல்
  இன்று வரை எந்த மருதுகள் மூலமும்
  அது பாதுக்காக்கப்படாமல்
  தன்னைத்தானே பாதுகாத்துக்
  கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
  மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர்
  குடிப்பதற்கு ஏற்றதாக
  இருக்காது என்பது அறிவியலின்
  முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம்
  ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில்
  சோதித்துப் பார்க்கப்பட்ட
  போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர்
  என்று நிருபிக்கப்பட்டது பூமியிலுள்ள
  நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள்
  நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற
  நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர்
  வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய
  வந்துள்ளது. கால்ஷியம்
  மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற
  வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில்
  அதிகமாக உள்ளது.
  இந்த உப்புக்கள்
  புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை.
  இதை அனுபவத்தில்
  உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில்
  ஃபுளோரைடு உள்ளது.
  இது கிருமிகளைஅழிக்க வல்லது.
  அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம்
  நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
  நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
  அது போல் இதையும் கருதக் கூடாது.
  மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும்
  உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல்
  குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
  கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம்
  மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப்
  பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த
  அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள்
  நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும்
  உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால்
  இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற
  அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில்
  சிறிதும் சந்தேகம் இல்லை.

  1. Prabu says:

   நன்றி தகவல்களுக்கு.

   இயற்கையாக உருவானவற்றை உலக அதிசயமாக கணிக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட 7ம் மனித உருவாக்கங்கள்.
   நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை சொல்வதற்கு. உலக அதிசயங்களாக குறிப்பிடப்படுபவற்றை இங்கு காட்டி இருக்கத்தேவை இல்லை.
   ஸம் ஸம்/ஜம் ஜம் நீரூற்றுப்பற்றி தகவல்களை சேர்த்து எழுதுகின்றோம்.

  2. இற்றைக்கு 5000 வருடங்களூக்கு முன் இஸ்லாமியருக்கு தகப்பனான ஆபிரகாமின் மகன் இஸ்மவேலின் வரலாறும் Tதண்ணீர்த்துரவும் Bible ஆதியாகமம் 21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்…

   1. Nishan says:

    bible kattukathai..

 2. aneefa says:

  உலகில் உள்ள அனைத்து கடவுள்களும் ஒன்றுசேர்ந்தாலும்கூட அவர்களால் ஒரு ஈ யை கூட படைக்க முடியாது
  -அல்குர்ஆன்

  1. Prabu says:

   உலகில் கடவுள்கள் இருப்பதாக எந்த மதமும் சொல்லவில்லை. தூதர்களை பற்றியே பேசுகின்றன.

 3. krishna says:

  Theiva aatral endru neengal solvatharku enna aatharam ullathu? (Ramayanam / Mahabharatham kathaikal thavira)
  Enaku onnru purikirathau. Namathu munnorkal mekuntha aarivatralkal ullavarkal. aatharankalai vaitthu irunthal kala ottathil athu marainthu vidum endru manitharkalain mika mukkiya communication point ana stories mulam adutha thalaimurainaruku solli athu marayamal intrum naam athai nenaivil vaikka seithirukirarkal.

 4. hareesh says:

  நண்பா கண்டிப்பாக முறையான பயிற்சிகள் இருந்தால் முடியும் , சிவன் ஒரு சாதாரண மனதனக இருபதற்கு பல ஆதரங்கள் உள்ளன. ஆரிய கலப்பின் பிறகு சிவன் தெய்வமாக சித்தரிக்க பட்டுள்ளார் , தமிழர்கள் சிவனை அதி சித்தனாகவே போற்றி உள்ளனர் . அவர் நாகர் குலத்தை சேர்த்தவர் என்றும் என்ன தோன்றுகின்றது .

 5. Jai Raj says:

  தெய்வத்தின் ஆற்றல் என்பது வேறு,
  ஆவிகளின் ஆற்றல் என்பது,,
  மாயயாலங்கள் என்பது வேறு,,

  உங்களுடைய கருத்தின் படி பார்த்தால்.
  இப்போது மாயயாலங்கள் நிகழ்த்துபவர்களை என்ன சொல்வது நண்பரே,,
  ஆஞ்சநேயனின் கலியுக அவதாரங்கள் என்பதா..
  தெய்வீக ஆற்றல்களை சாதாரண மனிதர்களோடு ஒப்பிடுவது தவறு,,
  தெய்வீக ஆற்றல்களை சாதார மனிதர்களால் செய்துவிட முடியாது,,

Leave a Reply

Top