பாலத்தைக் கடப்பது எப்படி? – புதிர் கேள்வி!

ஜித், சுஜீ, பகி, ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின் மீது கடக்கவேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப்பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைய முதல் அவர்கள் கடக்கவேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.

ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!
பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தையும், சுஜீ 2 நிமிடத்தையும், பகி 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.
பாலத்தின் மீது ஒரு தடவையில் இருவர் மட்டுமே கடக்க முடியும். அல்லது பாலம் உடைந்துவிடும்.
வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவராக இருந்தால் மெதுவான நபருடனேயே கடந்து செல்லவேண்டும்.

எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?

முயற்சியின் பின்னர், 
சரியான பதிலை இதை சொடுகி அறிந்துகொள்ளுங்கள்.

அல்லது…

[wp-like-locker]

ஜித்யும் சுஜியும் முதலில் கடப்பார்கள் : 2 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
ஜித் மட்டும் திரும்பி வருவார் : 1 நிமிடம் எடுத்துக்கொள்ளும்.
ஜித் நிற்க, பகியும் ராமும் கடப்பார்கள் : 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
தற்போது சுஜி கடந்து ஜித்திடம் செல்வார் : 2 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இறுதியாக சுஜியும் ஜித்தும் இணைந்து மறுபடியும் கடப்பார்கள். : 2 இமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

ஆகவே 17 நிமிடங்கள் அனைவரும் கடந்துவிடுவார்கள்.

[/wp-like-locker]

[twitterlocker]

[/twitterlocker]

(3847)

Leave a Reply

Top