லெமூரியத்தமிழ் படிவுகள் எகிப்தில்? வியத்தகு அறிவியல் – Lemuria 06

லெமூரியாக்கண்டத்தை சேர்ந்த நாடுதான் இலங்கை என்பதை போன பதிவில் பார்த்திருந்தோம்!
முன்னைய பதிவுகளை வாசிக்க இதை சொடுகவும்.

இன்று…

ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்… அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்… லெமூரியாவின் பேரழிவின் பின்னர்…அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.

(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை… பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)

பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே… லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)

மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது “அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)

இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.

அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

இன்னொரு விடையம்… உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே… இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது… அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
—————————————————————————————–
இனி…
மாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.

நாட்காட்டி வியக்கத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்துள்ளது….

By : Chandran Pirabu

(5585)

2 thoughts on “லெமூரியத்தமிழ் படிவுகள் எகிப்தில்? வியத்தகு அறிவியல் – Lemuria 06”

  1. Anuraja says:

    ennaku oru doubt. hanuman kishkinta vil irunthu srilanka ponatha thagaval. kishkinta inru evvidathil ullathu.

  2. //மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது “அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.) இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்….

    மூலம் : http://edu.tamilclone.com //.

Leave a Reply

Top